விடுதலைக்கு முதல் குரல் கொடுத்தது தமிழ்நாடு! மகாத்மா காந்தியாக மாற்றியது மதுரை - முதல்வர் ஸ்டாலின்!
சென்னை : இந்திய துணைக் கண்டத்திலேயே விடுதலைக்காக முதல் குரல் கொடுத்தது தமிழ்நாடுதான் எனவும், ஒரு நெல் மணியை கூட கப்பமாக கட்டமாட்டேன் என்று முதலில் சூளுரைத்தவர் நெற்கட்டான்செவலின் பூலித்தேவன் என சென்னை சுதந்திர தின விழாவில் முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார்.
சென்னை கோட்டையில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை கோட்டைக்கு சென்றடைந்தவுடன் திறந்தவெளி வாகனத்தில் நின்று முப்படைகளின் உயர் அதிகாரிகள், தமிழ்நாடு காவல்துறை வரவேற்பு அளித்தனர்.
அதனைத்தொடர்ந்து தலைமைச் செயலகக் கோட்டை முகப்பில் சுதந்திரத் திருநாளையொட்டி நடைபெற்ற காவல்துறையின் அணிவகுப்பினை பார்வையிட்டார்.
பல்வேறு துறைகளில் சிறப்பான செயல்பாடு.. விருதுகள் வழங்கி கவுரவித்தார் முதல்வர் ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்
பின்னர் காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகக் கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் பேசிய முதல்வர்,"இந்திய துணைக் கண்டத்திலேயே விடுதலைக்காக முதல் குரல் கொடுத்தது தமிழ்நாடுதான்

தமிழ்நாடு
ஒரு நெல் மணியை கூட கப்பமாக கட்டமாட்டேன் என்று முதலில் சூளுரைத்தவர் நெற்கட்டான்செவலின் பூலித்தேவன். இந்திய சுதந்திர போராட்டத்திற்கு வித்திட்டது தமிழ்நாடு தான், அடிமைப்படுத்தல் என்று தொடங்கியதும் எதிர்ப்பை தெரிவித்தவர்கள் தமிழர்கள் தான். விடுதலைப் போராட்டத்தில் ஏராளமான தமிழர்கள் சிறை சென்றனர்.

ஒத்துழையாமை இயக்கம்
காந்தியடிகள் பல்வேறு போராட்டங்களை அறிவித்தது தமிழகத்தில் தான். குறிப்பாக இந்திய அளவில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய ஒத்துழையாமை இயக்கத்தை தமிழகத்தில் தான் அண்ணல் காந்தியடிகள் அறிவித்தார் தன் வாழ்நாளில் தமிழகத்திற்கு இருபதுக்கும் மேற்பட்ட முறை அண்ணல் காந்தியடிகள் வந்திருக்கிறார்.
Recommended Video

மதுரை மண்
அவர் வாழ்வின் முக்கிய முடிவும் திருப்புமுனையான முடிவுமாக அரையாடை முடிவு பார்க்கப்படுகிறது. அந்த முக்கிய முடிவை அவர் எடுத்தது தமிழகத்தில் தான் குறிப்பாக மதுரை மண்ணில் பாரிஸ்டர் கரம்சந்த் காந்தியாக இருந்தவரை மகாத்மா காந்தியாக மாற்றியது மதுரை மண் இப்படி சுதந்திரப் போராட்டத்திற்காக தகவல் செய்த தியாகங்களை சொல்லிக்கொண்டே போகலாம்." பேசினார்.