குன்றத்தூரில் கிழிந்த ஆடைகளுடன் அரை நிர்வாணமாக கிடந்த பெண் சடலம்.. விசாரணையில் பகீர் தகவல்!
சென்னை: பூந்தமல்லி அருகே குன்றத்தூரில் உல்லாசத்திற்கு வர மறுத்ததாக கள்ளக்காதலியின் கழுத்தை அறுத்து கொலை செய்த கள்ளக்காதலனை போலீஸார் கைது செய்தனர்.
குன்றத்தூர், ஜெகநாதபுரம், சேக்கிழார் நகர் பகுதியில் வாடகை வீட்டில் வசித்தவர் லட்சுமி என்ற கண்ணம்மாள் (50). இவர் தனது கணவரை பிரிந்து 3 மகள்களுடன் தனியாக வசித்து வந்தார். அங்குள்ள சிமெண்ட் செங்கல் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
நேற்று முன் தினம் இரவு வீட்டில் கண்ணம்மாள் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த குன்றத்தூர் போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

நிர்வாணமாக கிடந்த கண்ணம்மாள்
அப்போது வீட்டின் உள்ளே கண்ணம்மாள் ஆடைகள் கிழிந்து அரை நிர்வாணமாக சடலமாக கிடந்தார். அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். அதில் கண்ணம்மாளுக்கும் அதே பகுதியில் சிமென்ட் தயாரிக்கும் நிறுவனத்தில் டிரைவராக பணியாற்றி வந்த ராஜா (31) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

கள்ளக்காதலி
இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தது தெரியவந்தது. இந்த நிலையில் நேற்று முன் தினம் குடித்துவிட்டு கண்ணம்மாளின் வீட்டிற்கு வந்த ராஜா, அவரிடம் தகராறு செய்துள்ளார். அப்போது கண்ணம்மாளின் மகள்கள், ராஜாவை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

உல்லாசத்திற்கு அழைத்த ராஜா
இந்த நிலையில் சிறிது நேரம் கழித்து மீண்டும் வந்த ராஜா, கண்ணம்மாளை தன்னுடன் உல்லாசத்திற்கு வருமாறு அழைத்தார். அவர் மறுத்ததால் கண்ணம்மாளின் உடைகளை கிழித்து ராஜா உல்லாசத்திற்கு முயன்றதாக கூறப்படுகிறது. ஆனால் கண்ணம்மாள் தொடர்ந்து மறுத்தார்.

கத்தியால் குத்தி கொலை
இதனால் இருவருக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டது. ராஜாவை கண்ணம்மாள் ஆபாசவார்த்தைகளில் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ராஜா கத்தியால் கண்ணம்மாளை குத்தி கொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து ராஜாவை குன்றத்தூர் போலீஸார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications