106 பேரிடம் ரூ.6 கோடி மோசடி செய்து விட்டதாக.. முன்னாள் அமைச்சர் நிலோபர் கபீல் மீது போலீசில் புகார்!
சென்னை: அரசு வேலை வாங்கி தருவதாக ரூ. 6 கோடி மோசடி செய்து விட்டதாக முன்னாள் அமைச்சர் நிலோபர் கபீல் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
கடந்த அ.தி.மு.க ஆட்சியில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்தவர் நிலோபர் கபீல். இவர் வாணியம்பாடி தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக இருந்தார்.

கடந்த தேர்தலில் நிலோபர் கபீலுக்கு தேர்தலில் போட்டியிட சீட் வழங்கப்படவில்லை. இதனால் அவர் அதிமுக மூத்த அமைச்சர்களை வசைபாடி இருந்தார். இந்த நிலையில் நிலோபர் கபீல் ரூ.6 கோடி மோசடி செய்து விட்டதாக போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க.வை சேர்ந்தவரும், நிலோபர் கபீல் உதவியாளராக இருந்தவருமான பிரகாசம் என்பவர் டிஜிபி அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் புகார் மனு அனுப்பியுள்ளார். அந்த மனுவில், ' முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் அரசு வேலை வாங்கி தருவதாக 105 பேரிடம் ரூ.6 கோடி வாங்கி மோசடி செய்துள்ளார்.
இந்த மோசடி பணத்தில் தனது மூத்த மகள் பெயரில் சொத்து வாங்கியுள்ளார். எனவே அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரகாசம்.கூறியுள்ளார்.
இதற்கிடையே இன்று மாலை நிலோபர் கஃபீலை கட்சியிலிருந்து நீக்கி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டாக அறிக்கை வெளியிட்டனர். கட்சிக்கட்டுப்பாட்டை மீறியதாலும், கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாலும் நிலோபர் கஃபீல் நீக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications