ஜி ஸ்கொயர் கட்டுமான நிறுவனத்தை மிரட்டி ரூ50 லட்சம் பணம் பறிக்க முயன்றதாக கெவின் கைது
சென்னை: சென்னையை சேர்ந்த ஜி ஸ்கொயர் கட்டுமான நிறுவனத்தை மிரட்டி ரூ50 லட்சம் பணம் பறிக்க முயன்றதாக கெவின் என்பவரை சென்னை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் நிர்வாகி புருஷோத்தம் குமார், சென்னை மயிலாப்பூர் இ - 1 காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்திருந்தார். அதில், ஜி ஸ்கொயர் உரிமையாளர் ராமானுஜத்தை ஜனவரி 18-ந் தேதி இரவு கெவின் என்பவர் தொடர்பு கொண்டார். தமக்கு ரூ50 லட்சம் வழங்காவிட்டால் முன்னணி செய்தி நிறுவன இதழ்களில் ஜி ஸ்கொயர் குறித்து அவதூறாக கட்டுரைகள் வெளியிட செய்வேன் என கெவின் மிரட்டினார்.

மேலும் ஊடகங்களில் ஜி ஸ்கொயர் குறித்து அவதூறு செய்திகள் வெளியிடப்பட்டன. பின்னர் மீண்டும் தொடர்பு கொண்ட கெவின், மாதம் ரூ50 லட்சம் வழங்காவிட்டால் சமூக வலைதளங்களில் பிரபலமாக உள்ளவர்கள் சிலர் மூலம், இத்தகைய அவதூறுகள் வெளியிடப்படும் என மிரட்டினார், என அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன் மீது வழக்குப் பதிவு செய்த சென்னை போலீசார் கெவினை கைது செய்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம் கோவிலம்பாக்கம் பகுதியில் கெவின் தங்கி இருந்த நிலையில், போலீசார் நேற்று முன்தினம் கெவினை கைது செய்தனர்.
-
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications