சூப்பர் ! பஸ் பின் சீட்டிலிருந்து வந்த “கை”.. ஓங்கி ஒரு குத்து.. வைரலாகும் சிங்கப்பெண்ணின் செயல்..!
சென்னை : சென்னை அருகே ஓடும் பேருந்தில் பேருந்தின் பின் சீட்டில் இருந்து கையை நீட்டி பாலியல் தொந்தரவு கொடுத்த நபரை சேஃப்டி பின்னால் குத்தியதோடு, அவரை வீடியோ எடுத்து போலீசில் பெண் வழக்கறிஞர் ஒருவர் புகார் அளித்துள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
Recommended Video
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே பெண்களுக்கும் பள்ளிச் சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கும் சம்பவங்கள் அதிகமாக நடைபெற்று வருகிறது.
குறிப்பாக பெற்றோரை விட்டு பிரிந்து வெளியூரில் வசிக்கும் பெண்களுக்கு நடக்கும் கொடுமைகள் அவ்வளவாக வெளியே தெரிவதில்லை. பெண்களும் சொல்வதில்லை

பெண்களுக்கு பாலியல் தொல்லை
சென்னை போன்ற பெருநகரங்களில் பேருந்துகளில் பயணிக்கும் பெண்களின் நிலைமையை அவ்வளவு எளிதாக கடந்து சென்றுவிட முடியாது. நெரிசல் மிகுந்த பேருந்துகளில் பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடவென்ரே என்று ஒரு கும்பல் சுற்றி திரிவது அனைவருக்கும் தெரிந்ததுதான். ஆனால் இது குறித்து வெளியே சொல்ல முடியாத நிலையில் பெண்கள் உள்ளனர். புகார் அளித்தால் தேவையற்ற சிரமங்கள் ஏற்படும் எனக் கருதி பெரும்பாலும் அவற்றை பெண்கள் வெளியே கூறுவது கிடையாது.

பெண் வழக்கறிஞர்
இதையே சாதகமாக தங்களுக்கு பயன்படுத்திக்கொள்ளும் கும்பல் தொடர்ந்து அவர்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடும் சம்பவங்களும் தொடரத்தான் செய்கிறது. அதே நேரத்தில் இதற்கெல்லாம் விதிவிலக்காக பாலியல் அத்துமீறல்களில் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளிப்பது, போலீசார் அவர்களை கைது செய்து சிறையில் அடைக்கும் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தான் தற்போது சமூக வலைதளங்களில் பெண் ஒரு வழக்கறிஞர் ஒருவர் செய்த செயல் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

பாலியல் அத்துமீறல்
வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 28 வயதான இளம்பெண் ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். நேற்று இரவு தனது தாயுடன் தனது சொந்த ஊருக்கு செல்வதற்காக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பேருந்தில் ஏறிய அவர் பயணம் செய்து கொண்டிருந்தார். பேருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் அவர் பின்னே அமர்ந்து இருந்த ராகவன் என்ற 40 வயதான நபர் பேருந்து இருக்கை வழியாக கையைவிட்டு அவரிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.

போலீசில் புகார்
இதனால் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற அந்தப் பெண் வழக்கறிஞர் தனது கைப்பையில் இருந்த சேப்டி பின்னை இடத்தில் அவரது கையில் ஓங்கி குத்தி அதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார். மேலும் இது குறித்து மதுரவாயல் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் அந்த நபரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். அந்த நபர் பேருந்தின் பின் சீட்டில் இருந்து அவர் செய்த அத்துமீறல்களின் வீடியோ காட்சிகளையும் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் அந்த நபரை போலீசார் கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பெண்ணுக்கு பாராட்டு
புகாரை பெற்ற சில மணி நேரங்களிலேயே விரைவாக நடவடிக்கை எடுத்த காவல் துறையினருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. அதேவேளை பாலியல் அத்துமீறல்களில் ஈடுபடும் நபரை வெட்ட வெளிச்சமாக்கி காட்டியதோடு மற்ற பெண்களுக்கு முன்னுதாரணமாக விளங்கும் பெண் வழக்கறிஞருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டு குவிந்து வருகிறது.
-
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
நெல்லையில் பரபரப்பு.. ஜெராக்ஸ் எடுக்க வந்த பெண்களை ரகசியமாக படம் பிடித்த வாலிபர்! போலீஸ் வைத்த ஆப்பு -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications