சென்னை மயிலாப்பூரில் மனைவியிடம் சண்டை போட்டு பிளாட்பாரத்தில் தூங்கிய கணவர். நடந்த துயரம்
சென்னை: மனைவியிடம் சண்டை போட்டு கோபித்துக்கொண்டு பிளாட்பாரத்தில் தங்கியிருந்த கணவர் விபத்தில் உயிரிழந்தார். தனது கணவரின் உயிரை பறித்த , அடையாளம் தெரியாத கார் ஓட்டுனரை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அடையாறு போக்குவரத்து புலனாய்வு காவல்துறையில் மனைவி ஆனந்தி கண்ணீர் மல்க புகார் அளித்துள்ளார்
சென்னை மயிலாப்பூர் சன்னதி தெருவில் கடந்த 4-ம்தேதி இரவு அன்று அடையாளம் தெரியாத கார் ஒன்று அதிவேகமாக சென்று பிளாட்பாரத்தில் தூங்கி கொண்டிருந்த ஒருவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுள்ளது.
தகவல் அறிந்து அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து படுகாயத்துடன் கிடந்த நபரை சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் கடந்த 5 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

அடையாளம் தெரியாத கார்
இறந்து போனவர் யார் என்பது குறித்து அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணையில் இறங்கினார் . அதேநேரம் அடையாளம் தெரியாத கார் ஓட்டுனர் மீது அதிவேகமாக வாகனத்தை ஓட்டுதல், காயம் ஏற்படுத்துதல் உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

ஏழுமலை
இதற்கிடையே விபத்தில் உயிரிழந்தவர் யார் என்று போலீசார் நடத்திய விசாரணையில் அவர் பெரும்பாக்கத்தை சேர்ந்த ஏழுமலை என்பது தெரிந்தது. அவரது மனைவி ஆனந்தி பெரும்பாக்கத்தில் தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதும் தெரியவந்துள்ளது.

சண்டை போட்டார்
அவர் போலீசாரிடம் கூறும் போது, என் கணவர் ஏழுமலை கார் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். கொரோனா காரணமாக வேலை இல்லாமல் போனதால், என்னிடம் சண்டை போட்டுவிட்டு ஆறு மாதத்திற்கு முன்பு பிரிந்து சென்று விட்டார். சண்டை போட்டு வெளியில் சென்றவர் மயிலாப்பூர் பகுதிகளில் கோயிலில் கிடைக்கும் பிரசாதங்களை சாப்பிட்டுக்கொண்டு பிளாட்பாரத்தில் தங்கி இருந்தார்,

காரை ஏற்றி கொலை
பிளாட்பாரத்தில் அப்படி தங்கியிருந்த என் கணவர் ஏழுமலையை அநியாயமாக கார் ஏற்றி கொன்றுவிட்டார்கள் என்று அவரது மனைவி ஆனந்தி குற்றம்சாட்டினார் மேலும் தன் கணவரை கார் ஏற்றிக் கொலை செய்த நபரை்களை கண்டுபிடித்து தருமாறு அடையாறு போக்குவரத்து புலனாய்வு அதிகாரிகளிடம் புகார் அளித்தார். இரண்டு பெண் குழந்தைகளுடன் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருவதாகவும் வேதனை தெரிவித்தார்.

போலீசார் விசாரணை
இதனிடையே விபத்தை ஏற்படுத்திய காரை சிசிடிவி கொண்டு போலீசார் தேடி வருகிறார். அந்தக ர் சென்னை விமான நிலையத்திற்கு பிறகு எங்கு சென்றுள்ளது என்பதை கண்டுபிடிக்க முடியாத நிலையில் உள்ளதாககாவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது . இதனிடையே அடையாளம் தெரியாத கார் ஓட்டுநரை கண்டுபிடிப்பதில் போலீசார் மெத்தனம் காட்டுவதாக புகார் எழுந்துள்ளது. உயிரிழந்தவரின் மனைவி ஆனந்தி தன் கணவரின் இறப்புக்கு நீதி வேண்டும் என போராடி வருகிறார்.












Click it and Unblock the Notifications