சென்னை பரங்கிமலை ஜிஎஸ்டி சாலையில் பல கோடி மதிப்புள்ள அரசு நிலம் மீட்பு.. கட்டிடங்கள் இடிப்பு
சென்னை: சென்னை பரங்கிமலை ஜிஎஸ்டி சாலையில் அரசு நிலத்தில் கட்டிய புதிய கட்டிடம் அதிரடியாக இடித்து அகற்றப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவை மீறி கட்டிடம் கட்டியதால் ஜேசிபி இயந்திரத்துடன் சென்று இடித்து அகற்றி அதை கையகப்படுத்தினார்கள்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டி குடியிருப்பவர்களுக்கு என்றாவது ஒரு நாள் கண்டிப்பாக சிக்கல் வரும் என்பதற்கு பரங்கிமலை சம்பவம் உதாரணம். குத்தகைக்கு வாங்கிய இடத்தை குத்தகை காலம் முடிந்ததும் புதிய கட்டிடம் கட்டியதை புகாரின் அடிப்படையில் கண்டுபிடித்த அதிகாரிகள், அதனை இடித்து அகற்றி உள்ளனர். எனவே அரசு நிலத்தை யாராவது ஆக்கிரமித்து வசித்து வருகிறார்கள் என்றால்,அந்த நிலத்தை மறந்தும் வாங்கிடாதீர்கள்.

சரி விஷயத்திற்கு வருவோம். சென்னை பரங்கிமலை ஜி எஸ் டி சாலையில் உள்ள அரசுக்கு சொந்தமான 3 ஏக்கர் நிலம் பல ஆண்டுகளுக்கு முன்பு குத்தகைக்கு விடப்பட்டது. குத்தகை காலம் முடிந்தும் அந்த இடத்தில் தனியார் கல்லூரி மற்றும் பள்ளி, கடைகள் செயல்பட்டு வந்திருக்கிறது. கடந்த ஜனவரி மாதம் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் உத்தரவின்பேரில் பல்லாவரம் தாசில்தார் தலைமையில் வருவாய் துறை அதிகாரிகள் வணிக வளாக நிலத்தை கையகப்படுத்தி உள்ளார்கள்.
இதனிடையே அரசு நிலத்தை கையகப்படுத்த அதிகாரிகள் முயன்றபோது, உடனடியாக அந்த கல்லூரி நிர்வாகம் நீதிமன்றம் சென்றதால் தற்காலிகமாக பள்ளி மற்றும் கல்லூரி நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் கல்லூரி நிர்வாகத்தினர் நீதிமன்ற உத்தரவை மீறி அரசு கையகப்படுத்திய இடத்தில் புதிதாக கட்டிடம் கட்டுவதாக செங்கல்பட்டு மாவட்ட கலெக்டருக்கு புகார்கள் வந்தது.

இதையடுத்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில் பல்லாவரம் தாசில்தார் ஆறுமுகம் தலைமையில் வருவாய் துறை அதிகாரிகள் பொக்லைன் எந்திரத்துடன் வந்து அரசு இடத்தில் செயல்பட்ட இனிப்பு கடை மற்றும் கல்லூரி சார்பில் விரிவுப்படுத்தி புதிதாக கட்டப்பட்டு வந்த கட்டிடத்தை அதிரடியாக இடித்து அகற்றினர். பின்னர் அந்த இடத்துக்கு 'சீல்' வைத்தனர். மேலும் இது தொடர்பாக பரங்கிமலை போலீசில் வருவாய் துறை சார்பில் புகார் அளிக்கப்படுள்ளது.
இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக அறப்போர் இயக்கம் வெளியிட்ட அறிவிப்பில், பரங்கிமலை கிராமத்தில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து அதை வைத்து தனியார் வங்கியில் 34 கோடி கடன் வாங்கி அங்கே கட்டிடம் கட்டி வாடகைக்கு விட்டுள்ளதாக அறப்போர் கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுத்த தமிழக அரசு இன்று அந்த இடத்தை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்டுள்ளது.
இந்த அரசு நிலத்தை மோசடியாக பத்திரப்பதிவு செய்து கொடுத்த அரசு ஊழியர்கள் யார்? இந்த அரசு நிலத்தை வைத்து கடன் வாங்கி கட்டிடம் கட்டி வாடகைக்கு விட்ட ஆக்கிரமிப்பாளர்கள் யார்? இவர்களுக்கு என்ன தண்டனை? என்று அறப்போர் இயக்கம் கேள்வி எழுப்பி உள்ளது.
-
தமிழகத்தின் முதல் பி.ஆர்.டி.எஸ்.. சென்னையில் பிரம்மாண்ட போக்குவரத்து மாற்றம்.. பணிகள் ஸ்டார்ட்! -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்!












Click it and Unblock the Notifications