தமிழக அரசியலில் அந்த 'அ' செல்லப் பெயரை மட்டும் இன்னமும் பிரிக்க முடியலையே.. குமுறும் தொண்டர்கள்
சென்னை: சென்னை: தமிழக அரசியலில் 1980களில் 'அ'வில் தொடங்கும் அந்த ஒற்றை செல்லப் பெயர்தான் அவ்வளவு பிரபலம். அதே பெயர் இப்போது 2021 தேர்தலிலும் ஒரு கட்சியில் புகைச்சலை கொடுத்திருக்கிறதாம்.
சட்டசபை தேர்தல் பணிகளை வரிந்து கட்டிக் கொண்டுதான் அந்த தலைவரும் கோதாவில் குதித்தார். அப்போதுதான் வில்லங்கமான உதவியாளர் 'அ'-வை அறிமுகம் செய்து வைத்தார்.

அப்படியே கொஞ்சநாள் ஓரம் கட்டி வைத்திருந்தார் அந்த தலைவர்.. என்ன நினைத்தாரோ வேட்பாளர் பட்டியலை தயார் செய்த போது உதவியாளரை கூப்பிட்டு காண்பித்தாராம், 'அ'வின் பெயரும் இடம்பெற்றிருந்ததாம்.
அதன்பிறகு அந்த ஏரியாவிலேயே தலைவர் சூறாவாளி பிரசாரம் செய்வதும் ஓய்வு எடுப்பதுமாகவே தேர்தல் நாட்கள் ஓடினவாம். அதே நேரத்தில் 'அ'வுக்கான அத்தனை செலவும் அவரேதான் பார்த்து கொண்டாரம்.
தேர்தல் செலவுக்கு பணம் கேட்கப் போன தொண்டர்களை கூட அந்த உதவியாளர் பார்க்கவிடவில்லையாம். அப்படி ஒரு கட்டுக்காவல் போட்டு வைத்திருந்தாராம். தலைவர் நல்லவராகத்தான் இருந்தார். இந்த எடுப்புகள் மீண்டும் தலையெடுத்து பெயரை கெடுக்கின்றன என குமுறினராம்.
அத்துடன் இல்லாமல் சென்னை வீட்டுக்கும் இந்த விவகாரத்தை புகாராகவே படித்துவிட மீண்டும் அந்த உதவியாளர் மீது உச்சகட்ட கோபத்தில் இருக்கிறாராம் அம்மணியார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications