சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

12 வயசு சிறுவன் விளையாடும் கேமா இது?.. செல்போனில் இத்தனை மோசமா? பிஞ்சு மனதில் நஞ்சு! பெற்றோரே உஷார்!

Google Oneindia Tamil News

சென்னை: மொபைல் போன்களில் குழந்தைகளின் மனதை கெடுக்கக் கூடிய எத்தனை ஆபத்தான விளையாட்டுகள் இருக்கின்றன என்பது குறித்து மனநல மருத்துவர் ஒருவர் விவரித்துள்ளார்.

பொதுவாக செல்போன் கேம்களுக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சிலர் அடிமையாக இருக்கிறார்கள். இதனால் அவர்கள் உயிரிழந்ததையும் பொருட்களை இழந்ததையும் நாம் அறிவோம்.

ஆனால் தற்போது செல்போனில் ஒரு விளையாட்டு இருக்கிறது. அது ஏற்றத்தாழ்வுகளை பிஞ்சு குழந்தைகள் மனதில் ஏற்படுத்தும் ஆபத்தான ஒன்றாகும். இதுகுறித்து மனநல மருத்துவர் தேவாஷிஷ் பால்கர் தனது தொடர் ட்வீட்டுகளில் கூறியுள்ளார்.

புஷ்பவனம் குப்புசாமியின்.. ரூபாய் 1 லட்ச மதிப்பிலான மொபைல் அபேஸ்! பல்லாவரம் சந்தையில் கைவரிசைபுஷ்பவனம் குப்புசாமியின்.. ரூபாய் 1 லட்ச மதிப்பிலான மொபைல் அபேஸ்! பல்லாவரம் சந்தையில் கைவரிசை

பெண் மெசேஜ்

பெண் மெசேஜ்

அவர் கூறுகையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஒரு பெண் எனக்கு மெசேஜ் அனுப்பினார். படிப்பதற்கு முன்பே ஏதோ கவலைக்குரிய மெசேஜ் என எனக்கு தெரிந்தது. தனது 12 வயது மகனை நினைத்து கவலையில் உள்ளதாக தெரிவித்தார். அவருடைய மொபைலிலிருந்து எனக்கு சில ஸ்கிரீன்ஷாட்டுகளை அனுப்பியிருந்தார். அவற்றை அவரது அனுமதியுடன் உங்களுடன் பகிர்கிறேன்.

செல்போன்

செல்போன்

அவர் அனுப்பியது அவரது மகன் செல்போனில் விளையாடும் ஒரு விதமான விளையாட்டாகும். அது எந்த மாதிரியான விளையாட்டு என கேட்டேன். அதற்கு அவர் அது ஒரு கற்பனையான காதல் விளையாட்டு. அதை விளையாடுபவர்கள் அதில் வரும் சிறுமிகளுக்கு கேம் டெவலப்கர்கள் சொல்வது போல் அசிங்கமான, கருப்பான, உடல் எல்லாம் முடி கொண்டது போல் அலங்காரம் செய்ய வேண்டும்.

 அழகில்லாத பெண்

அழகில்லாத பெண்

அதாவது இந்த படத்தில் வலது புறத்தில் உள்ள இந்த பெண்ணை போல் அலங்காரம் செய்ய வேண்டும். இதற்காக அந்த விளையாட்டை விளையாடுபவர்கள் டிரஸ்கள், அழகு சாதன பொருட்கள், மேக்கப் சாதனங்கள் உள்ளிட்டவைகளை செலக்ட் செய்ய அனுமதிக்கிறார்கள். அதை கொண்டு அந்த பெண்ணுக்கு அலங்காரம் செய்ய வேண்டும். அதை அந்த விளையாட்டில் வரும் இளைஞர் தனது காதலியாக ஏற்க வேண்டும்.

அலங்காரம்

அலங்காரம்

ஒரு வேளை அலங்காரம் செய்த பெண்ணை அந்த நபருக்கு பிடிக்கவில்லை என்றாலோ, அந்த நபரின் கவனத்தை அந்த பெண் (அசிங்கமான) கவருவதில் தோல்வி அடைந்தாலோ அந்த விளையாட்டை விளையாடுபவர் தோற்றதாக அர்த்தம். அப்போது அந்த விளையாட்டில் இருக்கும் நபர் நாம் விவாகரத்து பெற்றுவிடலாம் என சொல்வது போல் டிஸ்பிளே ஆகிறது.

10 மில்லியன் பேர்

10 மில்லியன் பேர்

இந்த விளையாட்டை 10 மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் டவுன்லோடு செய்துள்ளார்கள். சிறுவர்கள் இது போன்ற ஆபத்தான அல்லது இதைவிட ஆபத்தை விளைவிக்கக் கூடிய விளையாட்டுகளை விளையாடி வருகிறார்கள். 10 வயது குழந்தை இது போன்ற விளையாட்டுகளை விளையாடுவதால் எந்த மாதிரியான பாதிப்புகள் ஏற்படும் என்பதை கற்பனை செய்துதான் பாரக்க முடியும்.

சிறுவனிடம் கோபம் வேண்டாம்

சிறுவனிடம் கோபம் வேண்டாம்

இதற்காக அந்த சிறுவனை ஏன் விளையாடுகிறாய் என நாம் கோபம் கொள்ள முடியுமா? அவர்கள் மீது எந்த தவறும் இல்லை. அழகுக்கான தரநிலைகளைதானே இந்த விளையாட்டு பிரதிபலிக்கிறது. கேம் டெவலர்ப்பர்கள் உண்மையில் மிகவும் புத்திசாலிகள், இதுபோன்ற சிறுவர்களை அடிமையாக்கும் விளையாட்டுகளை எப்படி உருவாக்குவது என்பது அவர்களுக்கு தெரியும்.

முதிர்ச்சி

முதிர்ச்சி

இந்த சிறு வயதில் அதுவும் அவர்களின் மூளை முதிர்ச்சி அடையாத நிலையில் இதை விளையாட்டு என அந்த சிறுவர்கள் எப்படி புரிந்து கொள்வார்கள். உருவ கேலி செய்தலையும் ஒரு பெண்ணை துன்புறுத்துதலையும் கற்று கொடுக்கும் இடம்தான் இந்த விளையாட்டு. ஒரு தொழில்நுட்பத்தை நல்லதுக்கு பயன்படுத்தாமல் இது போல் குழந்தைகளின் மனதில் நஞ்சை கலப்பதற்கு பயன்படுத்துவது என் மனதை வேதனை அடைய செய்கிறது. பணத்திற்காக சிறுவர்களின் மனங்களை கெடுப்பது எந்த வகையில் நியாயம்?

பிரச்சினை

பிரச்சினை

இந்த பிரச்சினையை எப்படி கையாள்வது என எனக்கு தெரியவில்லை. வன்முறை, அழகிற்கான தவறான அளவுகோல்கள் உள்ளிட்ட ஆபத்தை ஏற்படுத்தும் விளையாட்டுகள் எல்லாம் கிடைக்கின்றன. இந்த கேம்களை தடை செய்வதால் மட்டுமே தீர்வு கிடைத்துவிடாது. உங்கள் குழந்தைகள் என்ன செய்கிறார்கள் என்பதை பெற்றோர் பார்க்க வேண்டும். இது போன்ற கேம்களை விளையாடுவதற்காக அந்த குழந்தைகளை திட்ட கூடாது.

செக்ஸ் கல்வி

செக்ஸ் கல்வி

அடிக்கக் கூடாது. அவர்களுடன் நண்பரை போல் பேசி பாருங்கள். இந்த விளையாட்டுகளை ஏன் விளையாட கூடாது என்பதை புரிய வையுங்கள். குழந்தைகளிடம் செக்ஸ் கல்வி, காதல், ஆபாச வலைதளங்கள், போதை பொருட்கள ஆகியவை குறித்து பெற்றோராகிய நீங்கள் தயங்காமல் பேச வேண்டும். நீங்கள் பேசாவிட்டால் அந்த குழந்தை அவற்றை உங்கள் அனுமதியில்லாமல் ஆபத்தான வகைகளில் கற்றுக் கொள்ள முயற்சிக்கும் என டாக்டர் பால்கர் தெரிவித்துள்ளார்.

English summary
A psychiatrists says about a new game which will spoil kids future and it is a dangerous game.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X