Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இலவச மழையில் புதுச்சேரி: யார் டாப்? விஜய்? ரங்கசாமி? காங்கிரஸ் பிழைக்குமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஏப்ரல் 9 ஆம் தேதி புதுச்சேரியில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தல் தவெகவுக்கு மட்டுமல்ல காங்கிரஸ் கட்சிக்கும் புதிய ரத்தம் பாய்ச்சுமா? பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

கடந்த முறைபோல் புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமிக்கு அவ்வளவு எளிதாக இல்லை இந்த தேர்தல். என்.டி.ஏ. கூட்டணியில் லாட்டரி அதிபர் மார்ட்டின் மகனை அணியில் சேர்த்துக் கொள்வதில் என்.ஆர். காங்கிரசுக்கு உடன்பாடு இல்லை. இறுதியில் பொங்கி எழுந்து கெடு விதிக்கும் அளவுக்குச் சென்றார் மார்டின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்டின். அமித்ஷாவின் அழுத்தத்தை மீறி, என். ரங்கசாமியால் 'பெரியண்ணன் மனப்பான்மை'யில் செயல்பட முடியவில்லை என்பதே கள யதார்த்தமாக உள்ளது.

A Shower of Freebies in Puducherry Who Comes Out on Top TVK or NR Congress

புதுச்சேரி சின்ன யூனியன் பிரதேசம். அதற்குள் ஒரு புதிய மாநிலக் கட்சியான லட்சிய ஜனநாயக கட்சியை வளர்த்துவிடக் கூடாது என்பதில் பிடிவாதமாக நின்ற என்.ரங்கசாமிக்கு முதல் பின்னடைவு இதுதான். ஆனால், பாஜகவுக்கு பெரும் தொழிலதிபரான ஜோஸ் சார்லஸ் 'கூட்டு' தேவையாக இருப்பதை ஒரு கட்டத்திற்கு மேல் முதல்வர் ரங்கசாமி உணர்ந்தார். சார்லஸ் வழங்கியுள்ள தேர்தல் பிரமாண பத்திரத்தின் தரவு படி அவருக்கு 600 கோடி சொத்து மதிப்பு உள்ளது வெட்டவெளிச்சமாகியுள்ளது. அமித்ஷா ஏன் இவரைக் கூட்டணிக்குள் கொண்டுவந்துள்ளார் என்பதற்காக முக்கிய சாட்சி இந்த சொத்து மதிப்பு.

புதுவையில் உள்ள மொத்தம் 30 தொகுதிகளில் ஆளும் கட்சியான ஏ.ஐ.என்.ஆர்.சி 16 தொகுதிகளில் களம் காண்கிறது. பாஜக 14 தொகுதிகளில் போட்டியிடுகிறது. ஆளும் கட்சிக்கு மூன்றாவதாகக் குடைச்சல் தரும் கட்சியாக விஜய்யின் தவெக உருவெடுத்துள்ளது. அவரது பிரச்சாரம் கணிசமாக மாநில அரசியலில் அழுத்தத்தை உருவாக்கியுள்ளது. தவெகவும் ஆளும் கட்சிக்குச் சமமாக இலவசத் திட்டங்களை அறிவித்துள்ளது.

முதல்வர் ரங்கசாமி மாநிலம் முழுக்க 30 இடங்களில் தானியங்கி குடிநீர் மையங்கள் அமைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் ஆண்டுக்கு இரண்டு இலவச சிலிண்டர் என்பதுடன் விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்குக் கூடுதல் சிலிண்டர் தருவதாகவும் தெரிவித்துள்ளார். அதை மதச்சார்பற்ற அரசியல் கட்சியாகக் காங்கிரஸ் உட்பட பலவும் விமர்சித்து வருகின்றனர். இதனால் ஒரு புதிய சர்ச்சை வெடித்துள்ளது.

சலுகை விலையில் உணவகங்கள் 30 இடங்களில் திறக்கப் போவதாகவும் அறிவித்துள்ளார் என்.டி.ஏ கூட்டணி. பெண் குழந்தைகள் பிறந்தால் முன்பே 50 ஆயிரம் வைப்புத் தொகை என்ற திட்டத்தின் தொகையை இரட்டிப்பாக உயர்த்தி உள்ளார் ரங்கசாமி. அதாவது இனி 1 லட்சம் வழங்கப்படும். இலவசத் திட்டங்களை அறிமுகப்படுத்துவதில் தமிழக திராவிடக் கட்சிகளுக்கு இணையாகப் புதுச்சேரியில் அனைத்து இந்திய என்.ஆர்.காங்கிரஸ் செயல்பட்டு வருகிறது.

புதுச்சேரியில் இலவசத் திட்ட மழை?

ஆனாலும், இக்கூட்டணி அளவு எளிதாகக் கரையேறிவிட முடியாது. போட்டி கடுமையாகவே நிலவுகிறது. என்.டி.ஏ. கூட்டணிக்குள் சில உட்கட்சி பூசல்கள் வலுத்து வருகின்றன. அதனால் தேர்தல் பணிகளில் சுணக்கம் நிலவுகிறது. காங்கிரஸ் வாழ்வா? சாவா போராட்டத்தை எதிர்கொண்டு வருகிறது. அக்கட்சியை மீண்டு உயிர்ப்பிக்க வைத்தியலிங்கம் உட்படப் பல முயற்சிகளை இறங்கியுள்ளனர். காங்கிரஸ் 16 தொகுதிகளில் போட்டியிடுகிறது. திமுக 14 தொகுதிகளில் போட்டிப் போடுகிறது. விசிக தனி வேட்பாளர்களை அறிவித்திருந்த நிலையில், காங்கிரசுக்கு ஆதரவாக வாக்குக் கேட்கப் போவதாக திருமாவளவன் தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளார்.

காங்கிரசின் பிரதான குற்றச்சாட்டு என்.டி.ஏ கூட்டணி வாக்குறுதி அளித்ததைப் போல் மாநில அந்தஸ்தைப் பெற்றுத்தரத் தவறிவிட்டது என்றே வாதிட்டு வருகிறது. அது ஒரு தாக்கத்தை உண்டாக்குமா? என்பது மிகப்பெரிய கேள்வி. காரணம், மாநில உரிமை என்பது புதுச்சேரி மக்களின் பல ஆண்டு கனவு.

முதல்வர் என்.ரங்கசாமிக்கு இணையாகக் காங்கிரசும் இலவசத் திட்ட வாக்குறுதிகளை அளித்துள்ளது. கல்லூரி மாணவர்களுக்கு 2 ஆயிரம் உதவித்தொகை 2,500 மதிப்புள்ள மாதாந்திர ரேஷன் பொருட்கள், தொடங்க நிலை முதல் ஆராய்ச்சி கல்வி வரை இலவசப் படிப்பு எனப் பல வாக்குறுதிகள் உள்ளன. பாஜக கூட்டணி அளவுக்குக் காங்கிரஸ் கட்சிக்குள்ளாகவும் கோஷ்டி பூசல் உச்சத்தில் உள்ளது. திருமாவளவன் அறிவிப்புகள் கூட்டணி உறுதியைச் சிதறடித்துள்ளது. காங்கிரஸ் கட்சியில் சீட்டு கிடைக்காத அதிருப்தியாளர்கள் பல தொகுதிகளில் எதிர்த்து நிற்கின்றனர். அதுவும் பின்னடைவாகி உள்ளது.

விஜய்யின் தவெக 28 தொகுதிகளில் போட்டியிடுகிறது. கூட்டணிக் கட்சிக்கு 2 சீட்டுகளை ஒதுக்கியுள்ளார் விஜய். இவர்தான் புதுச்சேரியில் புதிய டுவிஸ்ட். தவெக அளித்துள்ள வாக்குறுதிகளில் 25,000 ரூபாய் மகப்பேறு உதவித்தொகை மக்களைக் கவர்ந்துள்ளது. அனைத்து குடும்பங்களுக்கும் 25 லட்சம் ரூபாய்க்கு மருத்துவக் காப்பீடு என்றும் விஜய் தெரிவித்துள்ளார்.

மேலும் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள குடும்பங்களுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசம், 100% பயிர் காப்பீடு, மீனவர்களுக்கு ஒரு லிட்டர் டீசல் 20 ரூபாய் மானியம். இதுதவிர காலியாக உள்ள அரசு வேலைகள் உறுதியாக நிரப்பப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. துணைநிலை ஆளுநரின் அதிகாரத்தைக் குறைக்கச் சட்டத்திருத்தம் செய்யப் போவதாகவும் இக்கட்சி பேசிவருகிறது. இவ்விவகாரத்தில், காங்கிரசுக்குச் சவால் விடும் கட்சியாக தவெக உள்ளது.

புதிய வாக்காளர்கள் மத்தியில் தவெகவுக்கு ஒரு ஆதரவு நிலவுகிறது. அதே மாதிரி காங்கிரஸ் கட்சிக்கே பழக்கப்பட்டுப் போன மக்களின் மனநிலையை எளிதில் மாற்றிவிட முடியுமா? என்ற கேள்விக்கு விடை தரப்போகும் தேர்தலாக 2026 தேர்தல் அமைய உள்ளது. ஏப்ரல் 9 ஆம் தேதி நடைபெற உள்ள தேர்தல் தவெகவுக்கு மட்டுமல்ல காங்கிரஸ் கட்சிக்கும் புதிய ரத்தம் பாய்ச்சுமா? பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

- கடற்கரய்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+