ஆடி 18க்கு ஊருக்கு போறீங்களா? எழும்பூர்- நாகர்கோவில் சிறப்பு ரயில்.. தென்னக மக்களுக்கு குட் நியூஸ்!
சென்னை: ரயில் பயணிகளின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் இருந்து சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவில் வரை சிறப்பு சூப்பர் ஃபார்ஸ்ட் ரயில் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. ஆடி பெருக்கு பண்டிகையை முன்னிட்டு இன்று இரவு (வெள்ளிக்கிழமை) ஏசி கோச் மற்றும் ஸ்லீப்பர் பெட்டிகளுடன் புறப்படும் இந்த ரயில் நாளை நாகர்கோவிலை சென்றடையும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவின் மிக பெரிய பயணிகள் சேவை நிறுவனமான இந்திய ரயில்வே லட்சக்கணக்கான பணியாளர்களோடு இயங்கி வருகிறது. தினமும் நூற்றுக்கணக்கான ரயில்கள் லட்சக்கணக்கான பயணிகளை சுமந்து இந்தியாவின் பல்வேறு மூலைகளுக்கும் பயணிக்கிறது.

சராசரியாக ஆண்டுக்கு சுமார் 500 கோடி பேர் இந்திய ரயில்வேயின் கீழ் இயங்கும் ரயில்களில் பயணிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குறைந்த கட்டணம் பாதுகாப்பான பயணம் என்ற தாரக மந்திரத்தோடு இயங்கும் இந்திய ரயில்வே பயணிகளின் வரப் பிரசாதமாக திகழ்கிறது.
இதனால் தற்போது ஆடி பெருக்கு காரணமாக போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் பயணிகள் வசதிக்காக கூடுதலாக சிறப்பு ரயிலை அறிமுகப்படுத்தியுள்ளது தென்னக ரயில்வே. அதன்படி சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில் ஒன்றை தென்னக ரயில்வே இயக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தென்னக ரயில்வே சார்பில் இப்போது சென்னையில் இருந்து தென் மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் வைகை எக்ஸ்பிரஸ், பாண்டியன் எக்ஸ்பிரஸ், முத்துநகர் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பல்வேறு எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில் ஆடிப்பெருக்கு காரணமாக ஏராளமான மக்கள் சொந்த ஊர் செல்வார்கள் என்பதால் சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதை அடுத்து இன்று ஒரு வழிப் பாதையில் சிறப்பு ரயில் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்திருக்கிறது.

இப்படி சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோயில் வரை வண்டி எண் 06005 என்ற எண் கொண்ட ஒரு வழி எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இன்று இரவு சென்னை எழும்பூரில் இருந்து 10.45 மணிக்கு கிளம்பும் இந்த ரயில் நாளை அதாவது ஆகஸ்ட் 3ஆம் தேதி சனிக்கிழமை காலை 11 மணிக்கு நாகர்கோயிலை சென்றடையும். இந்த ரயிலில் மூன்று இரண்டடுக்கு ஏசி டயர் பெட்டிகள், 11 ஸ்லிப்பர் பெட்டிகள், 3 பொது வகுப்பு பெட்டிகள், மற்றும் இரண்டு லக்கேஜ் கம் ப்ரேக் வேன் பெட்டிகள் இருக்கும்.
தொடர்ந்து எழும்பூரை தொடர்ந்து தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருதுநகர், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சிராப்பள்ளி, மணப்பாறை, திண்டுக்கல், மதுரை , விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர் ஆகிய ஊர்களில் நிற்கும் இந்த ரயில் 11 மணிக்கு நாகர்கோயிலை சென்றடையும். ஆனால் மறுபடியும் சென்னைக்கு இந்த ரயில் இயக்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications