Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கேப்டன் நல்லா இருக்கார்! வதந்திகளை நம்ப வேண்டாம்!சிலர் ஈனத்தனமான வேலை செய்றாங்க! பறந்து வந்த அறிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை : தேமுதிக தலைவர் கேப்டன் விஜய்காந்த் உடல் நிலை குறித்து தனியார் தொலைக்காட்சிகளும், பத்திரிகைகளும் தொடர்ந்து தவறான செய்திகளை வெளியிட்டு வருகிறது எனவும், இனி இது போன்ற கீழ்த்தரமான விஷமத்தனமான அனைவரையும் குழப்பும் செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என தேமுதிக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை பாதிக்கப்பட்டு தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியுள்ளார். இதற்கிடையே நீரிழிவு நோய் காரணமாக சமீபத்தில் அவரது வலது கால் விரல்கள்அகற்றப்பட்டன.

நீண்ட வருடங்களாக இருக்கும் நீரிழிவு பிரச்சினையால் அவரது வலது காலில் உள்ள விரல் பகுதியில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததால் மருத்துவர்களின் ஆலோசனைப்படி நேற்று விரல் அகற்றப்பட்டது. இதனையடுத்து அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விஜயகாந்த் உடல்நிலை

விஜயகாந்த் உடல்நிலை

மருத்துவர்கள் கண்காணிப்பில் அவர் தற்போது நலமுடன் உள்ளார். மேலும் மருத்துவர்களின் ஆலோசனைப்படி தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிசிச்சை முடிந்து ஓரிரு நாட்களில் விஜயகாந்த் வீடு திரும்புவார். இதனையடுத்து அவர் பூரண நலம்பெற வேண்டி அவரது ரசிகர்களும், கட்சியினர், அரசியல் திரையுலக பிரபலங்களும் பிரார்த்தனை மேற்கொண்டதோடு, விரைவில் நலம்பெற வேண்டும் என வாழ்த்துகளை கூறினர்.

வதந்தி பரவுகிறது

வதந்தி பரவுகிறது

இந்நிலையில் விஜயகாந்த் உடல்நிலை குறித்து வதந்தி பரப்பிய யூடியூப் சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி தேமுதிக சார்பில் டிஜிபி அலுவலகத்திலும் புகார் அளிக்கப்பட்டிருந்தது.இதற்கிடையே தேமுதிக சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்," தேமுதிக தலைவர் கேப்டன் விஜய்காந்த் உடல் நிலை குறித்து தனியார் தொலைக்காட்சிகளும், பத்திரிகைகளும் தொடர்ந்து தவறான செய்திகளை வெளியிட்டு வருகிறது. ஏற்கனவே கேப்டன் விஜயகாந்த் உடல்நிலை குறித்து வதந்தி பரப்பிய யூடியூப் சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி தேமுதிக சார்பில் டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

தேமுதிக கண்டனம்

தேமுதிக கண்டனம்

இதனை தொடர்ந்தும் கேப்டன் உடல்நிலை குறித்த தவறான செய்திகளை வெளியிட்டு வரும் தனியார் தொலைக்காட்சிகளையும், பத்திரிகைகளையும் தேமுதிக தலைமை கழகம் வன்மையாக கண்டிக்கிறது. இனிமேல் இது போன்ற பொய்யான செய்திகள் வெளியிடுவதை தொலைக்காட்சிகளும், பத்திரிகைகளும் முற்றிலும் தவிர்க்க வேண்டும். மேலும் கேப்டன் உடல்நிலை குறித்து வெளியாகும் வதந்திகளை கழக நிர்வாகிகளும், பொதுமக்களும் யாரும் நம்ப வேண்டாம்.

 வருந்தத்தக்க விஷயமாகும்

வருந்தத்தக்க விஷயமாகும்

அடுத்தவரின் உடல்நிலை குறித்து தவறான செய்தியை பரப்பின் அதன்மூலம் ஆதாயம் தேடும் ஈனத்தனமான செயல்களை இன்றுடன் +3நிறுத்திக்கொள்ள வேண்டும். அனைவருக்கும் உடல்நிலையில் பாதிப்பு ஏற்படுவது சகஜம் தான். ஆனால் சொந்த ஆதாயத்திற்காக முற்றிலும் தவறான செய்திகளை தொடர்ந்து பரப்பி வருவது வருந்தத்தக்க விஷயம். இனி இது போன்ற கீழ்த்தரமான விஷமத்தனமான அனைவரையும் குழப்பும் செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம். கேப்டன் உடல்நிலை குறித்து தலைமை கழகம் வெளியிடும் அறிக்கையே உண்மையானது இறுதியானது" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+