கமலாலயத்தில் பாதுகாப்பே இல்லை.. கை வைக்க வர்றாங்க! லோகநாதன் மோசமான ஆள்! பாஜக 'மாஜி’ நிர்வாகி பகீர்!
சென்னை : தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பெண்களுக்கு மரியாதை இல்லை என்றும், அங்கு செல்லும் பெண் நிர்வாகிகளை அங்குள்ளவர்கள் அடிக்க கை ஓங்குவதாக திருவாரூர் மாவட்ட பாஜகவில் முன்னாள் மகளிர் அணி செயலாளர் சுதந்திராதேவி என்பவர் குற்றம் சாட்டிப் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வெகுவாகப் பகிரப்பட்டு வருகிறது.
பாஜகவின் சிறுபான்மை பிரிவு மாநிலத் தலைவர் டெய்சி சரண் மற்றும் ஓபிசி பிரிவு மாநிலச் செயலர் சூர்யா சிவா ஆகியோருக்கு இடையில் நடந்த உரையாடல் தொடர்பான ஆடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆனது.
இந்த விவகாரம் தொடர்பாக சூர்யா சிவா கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ள நிலையில், மற்றொரு விவகாரத்தில் பாஜக பிரமுகரான காயத்ரி ரகுராம் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
இன்று நான்.. நாளை யாரோ? பாஜக தொண்டர்களை நினைத்தால் தான்.. வானதி கருத்துக்கு காயத்ரி ரகுராம் பதில்

தமிழக பாஜக
உள்கட்சி விவகாரம் தொடர்பாக பேசியதற்காக ஒரு பெண் நிர்வாகியை கட்சியை விட்டு நீக்கிய மாநில கட்சித் தலைமை சக பெண் நிர்வாகியை தொலைபேசியில் தகாத வார்த்தைகளால் அர்ச்சித்து, சமூக விரோதி போல கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய ஆண் நிர்வாகியை கட்சியில் இருந்து நீக்காமல் ஒழுங்கு நடவடிக்கை என்கிற பெயரில் வெறும் 7நாட்களுக்கு மட்டும் கட்சி நிகழ்வுகளில் பங்கேற்க தடை விதித்திருப்பது பெண்கள் என்றால் ஒரு நீதியும், ஆண்கள் என்றால் ஒரு நீதியும் என்கிற அடிப்படையில் செயல்பட்டு வருவதாக விமர்சனம் எழுந்துள்ளது.

கமலாலயம்
தமிழக பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை எனவும் சமூக வலைதளங்களில் கூறப்படும் நிலையில், தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பெண்களுக்கு மரியாதை இல்லை என்றும், அங்கு செல்லும் பெண் நிர்வாகிகளை அங்குள்ளவர்கள் அடிக்க கை ஓங்குவதாக திருவாரூர் மாவட்ட பாஜகவில் முன்னாள் மகளிர் அணி செயலாளர் சுதந்திரதேவி என்பவர் குற்றம் சாட்டிப் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வெகுவாகப் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக சுதந்திராதேவி வெளியிட்டுள்ள வீடியோவில்,"தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை ஐபிஎஸ் அவர்களுக்கு திருவாரூர் மாவட்ட பாஜக மகளிர் அணி செயலாளர் சுதந்திர தேவியின் வணக்கம்.

பெண் நிர்வாகி
தமிழ்நாடு பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடக்கும் நிகழ்வு குறித்து தங்களுக்கு தெரியப்படுத்துகிறேன். அதாவது கமலாலயத்தை பொருத்தவரை அங்கு வரக்கூடிய பெண்களை அங்கு இருக்கக்கூடிய, சம்பளத்திற்கு பணியாற்றக்கூடிய நபர்கள் அங்கு வரக்கூடிய பெண்களை விரட்டி அடிப்பது அதிகாரமாக பேசுவது மரியாதை இல்லாமல் பேசுவது இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அதாவது கை ஓங்குவது வரைக்கும் வருகிறார்கள். அந்த அளவுக்கு அந்த அளவுக்கு மிகவும் மோசமான நிலைமை கமலாலயத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

லோகநாதன்
இது குறித்து தங்களது உதவியாளர் ஸ்ரீகாந்துக்கு மெசேஜ் மூலம் தெரிவித்தேன். அதுமட்டுமல்ல நீங்கள் அப்பாயிண்ட்மெண்ட் கொடுக்கச் சொன்னால் கூட அவர்கள் கொடுப்பது கிடையாது. தலைவரை மதிக்காத பணியாளர்கள் அங்கு இருக்கிறார்கள். லோகநாதன் இன்று ஒருவர் இருக்கிறார். அவர் மிகவும் மோசமான ஆள். உங்களை வைத்து கமலாலயத்தில் அனைவரும் லஞ்சம் சம்பாதித்துக் கொண்டு இருக்கிறார்கள். போற வர மகளிரை எல்லாம் விரட்டி அடிப்பது அவர்களுக்கு தேவையான மகளிரை மட்டும் உள்ளே அனுமதிப்பது இது போன்ற செயல்களும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

மிரட்டல்
அது மட்டுமல்லாமல் எதற்கு தலைவரை பார்க்க வேண்டும் என கேட்கிறார்கள். தலைவரை பார்க்க வேண்டும் என்றால் தலைவரிடம் மட்டும் தான் செய்தி சொல்ல முடியும். உங்கள் அலுவலகத்தில் இருக்கக்கூடிய ஓஏ, பிஏ உள்ளிட்டவர்களுக்கு பதில் சொல்ல முடியாது எங்களால். தலைவரை பார்க்க வேண்டுமென்றால் நாங்கள் தகவலோடு தான் வருகிறோம். இவர்கள் எதற்கு பார்க்க வேண்டும் என ஆயிரம் ஆயிரம் கேள்விகள் கேட்டுவிட்டு கடைசியில் உரிய மாவட்டத்தை எந்த மாவட்டத்தில் இருந்து வருகிறீர்கள் என்று கேட்டு மாவட்ட தலைவர்களுக்கு தகவல்களை கொடுத்து மாநில தலைவர்களுக்கு தகவலை கொடுத்து பார்க்க விடாமல் செய்கிறார்கள்.

லஞ்சம்
நீங்களே அப்பாயிண்ட்மெண்ட் கொடு என்று சொன்னாலும் கொடுப்பது கிடையாது விரட்டியிருக்கிறார்கள். இந்த நிலைமையில் மாவட்ட தலைவர்கள் மாநிலத் தலைவர்களிடம் அவர்கள் கையூட்டு பெறுகிறார்கள். லஞ்ச லாவண்யம் கமலாலயத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது கமலாலயத்தில் இருக்கும் அனைவருமே தடியர்கள் குண்டர்கள் என மிகக் கடுமையாக பேசியுள்ளார் இந்த வீடியோவை தற்போது சமூக வலைதளங்களில் பலரும் வேகமாக பரப்பி வருகின்றனர். இந்நிலையில் அவர் கடந்த வருடமே கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக பாஜக தலைமை அறிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.