ஷேர் சாட் வாசிகளே உஷார்.. லைக் போட்டு வலை விரித்த வில்லன்! ஒன்றல்ல இரண்டல்ல சிக்கிய பெண்கள்!
சென்னை : ஷேர் சாட் ஆப் மூலம் கல்லூரி பெண்களை குறி வைத்து பல பெண்களை திருமணம் செய்து ஏமாற்றி வரும் கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மனைவி புகார் அளித்த நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளியை தீவிரமாக தேடி வருகின்றனர்.
சென்னை அடுத்த செங்குன்ற பகுதியை சேர்ந்தவர் வைதீஸ்வரி/26. இவருக்கும் ஸ்ரீதர் என்பவருக்கும் இரு விட்டார் சம்மதத்துடன் 2019 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்று இரண்டு வயது மகன் உள்ளார்.
இந்த நிலையில் கணவர் ஸ்ரீதர் அடிக்கடி வேலை நிமித்தமாக வெளியூர் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இதனால் அவரது நடத்தையில் சந்தேகம் அடைந்த மனைவி வைதீஸ்வரி இது குறித்து அவரிடம் கேட்டுள்ளார்.

மோசடி கணவர்
இதனால் ஆத்திரம் அடைந்த ஶ்ரீதர் வைதீஸ்வரியை தாக்கியதுடன் செல்போனை உடைத்துவிட்டு கணவர் வீட்டைவிட்டு சென்று உள்ளார். இதன்பின்னர் சில நாட்கள் கழித்து மனைவி கணவர் ஶ்ரீதரின் செல்போனை ரிப்பேர் செய்து recovery செய்த போது அதில் சில ஆடியோ ஆதாரங்கள் கிடைத்துள்ளது.அதில் கணவர் ஸ்ரீதர் பிரபல இணையதளமான ஷேர் சாட் ஆப் மூலமாக பல கல்லூரி பெண்கள்,திருநங்கைகள் உள்ளிட்ட பலரிடம் பழகி வந்தது தெரியவந்துள்ளது.

தகாத உறவு
மேலும் பெண்களிடம் நெருக்கமாக பழகி தகாத உறவில் இருந்து வந்தது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக பெண்களிடம் கொஞ்சி கொஞ்சி பேசும் ஆடியோக்கள் சிக்கி உள்ளது. மேலும் வைதீஸ்வரி உடனான திருமணத்தை மறைத்து மேட்டுப்பாளையத்தில் இரண்டாம் ஆண்டு பயிலும் கல்லூரி மாணவி உடன் ஆப்பில் பேசி நம்பவைத்து நெருக்கமாக பழகியுள்ளார். அப்பெண் ஶ்ரீதரிடம் திருமணம் செய்ய வற்புறுத்தி வந்துள்ளார். இதனையடுத்து பெண்னை வீட்டிலிருந்து பெற்றோருக்கு தெரியாமல் அழைத்துச் சென்று திருமணம் செய்துள்ளார்.

ஷேர் சாட் ஆப்
பின்னர் அப்பெண்ணுடன் சில வாரங்கள் இருந்துவிட்டு தொழில் நிமித்தமாக செல்வதாக கூறி அங்கிருந்து சென்னை வந்து தங்கி இருந்துள்ளார்.மேலும் இந்த ஆப் வாயிலாக கல்லூரி மாணவிகளை குறிவைத்து தொடர்ந்து ஏமாற்றி பாலியல் ரீதியான உறவில் ஈடுபட்டு வந்துள்ளார். இது அனைத்தும் தெரிந்து கணவரிடம் கேட்ட வைதீஸ்வரியை கர்ப்பிணி என்றும் பாராமல் கடுமையாக தாக்கி தலைமறைவாகியுள்ளார்.எனவே முதல் திருமணத்தை மறைத்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டு பல பெண்களை ஏமாற்றி வரும் தனது கணவரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 11ம் தேதி பரபரப்பு புகார் அளித்தார்.

போலீஸ் மீது புகார்
ஆனால் புகார் மீது காவல்துறை எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து வைதீஸ்வரி கூறுகையில்,கடந்த 2019 ஆம் ஆண்டு இரு வீட்டார் சம்மதத்தின் பேரில் தங்களுக்கு திருமண நடைபெற்றதாகவும் திருமணம் நடைபெற்று சில காலம் சேர்ந்து வாழ்ந்ததாகும் தெரிவித்துள்ளார். மேலும் தன்னிடம் இருந்த 15 சவரன் நகைகளை அடகு வைத்து விற்பனை செய்து பல பெண்களிடம் உல்லாசமாக இருந்து வந்துள்ளார் என குற்றம் சாட்டியுள்ளார். எனவே அவரை கைது செய்ய வேண்டும். இல்லையெனில் பல பெண்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகும். எனக்கும் எனது குழந்தைக்கும் உரிய நீதி கிடைக்க வேண்டும் என கூறியுள்ளார்.. தற்போது அம்பத்தூர் அனைத்து போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து பெண்களை ஏமாற்றி வரும் ஸ்ரீதரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
-
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications