எனக்கு 44 வயசு தான்..! தனி ஏர்லைன்ஸ் வச்சுருக்கேன்! என்ன காரணம் தெரியுமா! நித்யானந்தா சொன்ன மெசேஜ்!
சென்னை : தனக்கு 44 வயதே ஆனாலும் தனியாக விமான நிறுவனமான ஏர்லைன்ஸ் வைத்திருக்கும் அளவுக்கு உயர்ந்திருப்பதாகவும் இதற்கு காரணம் என்ன என்பது குறித்து பிரபல தலைமறைவு சாமியார் நித்தியானந்தா தனது பக்தர்களுக்கு இரண்டாவது முறையாக ஆற்றிய சொற்பொழிவில் விரிவாக விளக்கியுள்ளார்.
பண மோசடி, பாலியல் பலாத்காரம், மிரட்டல் உள்ளிட்ட வழக்குகளில் சிக்கி சாமியார் நித்தியானந்தா கடந்த சில வருடங்களாக தலைமறைவாகியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு அருகில் ஒரு குட்டி தீவு விலைக்கு வாங்கி அதற்கு கைலாசா என பெயரிட்டு அங்கே வசித்து வருவதாக கூறப்படுகிறது.
கடந்த பல மாதங்களாக அவர் இறந்துவிட்டதாக வதந்திகள் பரவிய நிலையில், கடந்த குரு பூர்ணிமா அன்று நேரலையில் பேசினார். பின்னர் சிறிது இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நேரலையில் தோன்றியுள்ள நித்தி பக்தர்களுக்கு ஆசி வழங்கியுள்ளார்.

நித்தியானந்தா
அந்த சொற்பொழிவில் ஏர்லைன்ஸ் வைத்திருக்கும் அளவுக்கு உயர்ந்திருப்பதாகவும் இதற்கு காரணம் என்ன என்பது குறித்து பிரபல தலைமறைவு சாமியார் நித்தியானந்தா தனது பக்தர்களுக்கு இரண்டாவது முறையாக ஆற்றிய சொற்பொழிவில் விரிவாக விளக்கியுள்ளார். சமாதியிலிருந்து வெளி வந்துள்ளதாக அவரது சீடர்களிடம் கூறி வரும் நிலையில், இரண்டாவது முறையாக நேரலையில் தோன்றி பேசிய நித்தி, தனது வழக்கமான பாணியில் ரகரகமாக பேசியுள்ளார்.

9 மணியளவில் லைவ்
இந்திய நேரப்படி நேற்றிரவு 9 மணியளவில் லைவ்வில் பேசிய நித்யானந்தா," 4 ஆயிரம் வீடியோ செத்துட்டேனு போட்ருக்காங்க.. எல்லா வீடியோவும் பார்க்க முடியல.. எனக்கே சந்தேக மாத்தான் இருக்கும் உயிரோடு இருக்கேனான்னு. 18 பட்டியும் கூடி பஞ்சாயத்துதான் பண்ணுவாங்க அந்த காலத்துல.. ஆனா இப்போ யூட்யூப்ல, பேஸ்புக்ல தான் பஞ்சாயத்து நடக்குது. அப்பறம் ராமசாமி வரல கந்தசாமி வரலனு சொல்லக்கூடாது. நான் உயிரோடு இருக்கானா இல்லையானு ஒரு முடிவுக்கு வாங்க.. ஆனா நான் நல்லா தான் இருக்கேன்.

நலமாக இருக்கிறேன்
எனது உள் உறுப்புகள் அனைத்தும் நன்றாக இயங்குகிறது. நலமாக இருக்கிறேன். நான் சமாதி செல்வது வழக்கம் தான். ஆனால் இந்த முறை காலம் அதிகமாகி விட்டது. மருத்துவர்கள் சொல்லி விட்டார்கள். எனவே யாரும் பயப்பட தேவையில்லை. இந்த 4 மாதங்களில் புதியதோர் ஆரம்பம் உருவாகி இருக்கிறது. தற்போது நான் பரமசிவனாகி விட்டேன். இனிமேல் அடிக்கடி சத்சங்கள் நடக்கும். என் உடல்நிலை பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம்.

நானும் பரமசிவனும் ஒன்று
நானும் பரமசிவனும் ஒன்றுதான். எனக்கு 44 வயசுதான் ஆகுது. ஆனால் இறைவன் பரமசிவன் அருளால் எனக்கு எல்லாமே கிடைத்திருக்கிறது. தனி ஏர்லைன்ஸ் என்னிடம் இருக்கு. தனி நாடு இருக்கு. என் நாட்டுக்குனு பாஸ்போர்ட் இருக்கு. ஒருபுறம் இது எல்லாத்துக்கும் பரமசிவனின் அருள் காரணம். புகழ்கிறவர்களை அருகில் வைத்துக் கொள்ள வேண்டாம், புகழ்கிறவர்களை அருகில் வைத்துக் கொள்ளாமல் இருந்தாலே வாழ்க்கையில் ஜெயித்து விடலாம்" என பேசினார்.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications