சாதி, மதம், கோயில், சாமியார் வேண்டாம்.. கடவுளிடம் இந்த வரம் கேட்பேன்! “லிஸ்டு” போட்ட விஜய் ஆண்டனி
சென்னை: கடவுள் தன் முன் வந்தால் சாதி, மதம், கோயில், சாமியார் வேண்டாம் என்று வரம் கேட்பேன் என நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.
தமிழ் திரையுலகின் முன்னனி இசையமைப்பாளராக திகழ்ந்தவர் விஜய் ஆண்டனி. விஜய் உள்ளிட்ட பல முன்னணி நாயகர்களின் படங்களுக்கு இசையமைத்து புகழ்பெற்றார். அதனை தொடர்ந்து சினிமாவில் கதாநாயகனாக அறிமுகம் ஆனார்.
விஜய் ஆண்டனி முதன்முதலில் கதாநாயகனாக அறிமுகமான நான் திரைப்படம் பெரும் வெற்றிபெற்றது. அதன் தொடர்ச்சியாக சலீம், பிச்சைக்காரன் என இவர் அடுத்தடுத்து நடித்த திரைப்படங்களும் வெற்றிபெற்றன.

ஹீரோ விஜய் ஆண்டனி
இதனால் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற விஜய் ஆண்டனி தமிழ் சினிமாவின் முக்கிய நடிகராக உயர்ந்தார். தொடர்ந்து சைத்தான், எமன், அன்னாதுரை, காளி, திமிர் பிடிச்சவன், கொலைகாரன், கோடியில் ஒருவன் என பல திரைப்படங்களில் நாயகனாக நடித்து இருக்கிறார். இதனை தொடர்ந்து தமிழரசன், அக்னி சிறகுகள், காக்கி என பல படங்களில் இவர் நடித்து இருக்கிறார்.

அணிவகுக்கும் படங்கள்
ஆனால் சில படங்கள் சிக்கல்களால் ரிலீஸ் செய்ய தாமதமாகி வருகின்றன. இது அல்லாமல் பிச்சைக்காரன் 2, கொலை, ரத்தம், மழை பிடிக்காத மனிதன் என புதிய படங்களில் நடிக்கவும் விஜய் ஆண்டனி ஒப்பந்தமாகி இருக்கிறார். சி.எஸ்.அமுதன் இயக்கியுள்ள ரத்தம் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தாய்லாந்து நாட்டில் நடைபெற்று நிறைவடைந்ததது.

ரசிகர்கள்
இதனை தொடர்ந்து விரைவில் திரைப்படம் வெளியாகும் என இயக்குநர் அறிவித்தார். இவரது வித்தியாசமான கதை தேர்வை விரும்பியே பலர் விஜய் ஆண்டனியின் படங்களை விரும்பி பார்க்கின்றனர். ட்விட்டரில் ஆக்டிவாக இருக்கும் விஜய் ஆண்டனி அடிக்கடி பதிவுகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இன்று ஒரு பதிவை வெளியிட்டு உள்ளார்.

ட்விட்டர் பதிவு
அதில், "கடவுள் என் முன்னாடி வந்தா, ஜாதி மதம் கோயில் சாமியார் எல்லாரையும் உலகத்துல இருந்து எடுத்துட்டு, வறுமை கொலை கொள்ளைய ஒழிசிட்டு, பேசாம நீங்க எங்க கூடவே இருந்துருங்க சார்ன்னு, கோரிக்கையாக கேப்பேன். நீங்க என்ன கேப்பிங்க?" என்று குறிப்பிட்டுள்ளார். பலரும் அதற்கு பலவிதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications