நடிகர் கார்த்திக் மருத்துவமனையில் அனுமதி.. கீழே விழுந்து அடிபட்டு கால் எலும்பில் விரிசல்
சென்னை: உடற்பயிற்சி செய்தபோது தவறி விழுந்து நடிகர் கார்த்திக் காலில் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு இருக்கிறார்.
பாரதிராஜா இயக்கிய அலைகள் ஓய்வதில்லை என்ற திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகர் கார்த்திக்.
இதன் பிறகு முழுக்க முழுக்க அவர் ஏறுமுகத்தில்தான் இருந்தார். 1980களின் இறுதிகள் மற்றும் 1990களில் முன்னணி கதாநாயகனாக தமிழ் திரை உலகை கலக்கி வந்தார் கார்த்திக்.

முன்னணி ஹீரோ
தனக்கு முந்தைய தலைமுறையைச் சேர்ந்த கமல்ஹாசன், ரஜினிகாந்த் மற்றும் தனக்கு பிந்தைய தலைமுறைகளில் முன்னணி ஹீரோக்களாக வலம் வந்த விஜய் மற்றும் அஜித் ஆகியவர்களின் படங்களுக்கு கூட கடுமையான போட்டியாளராக இருந்தார் கார்த்திக்.

கவுரவ வேடங்கள்
2000மாவது ஆண்டுக்கு பிறகு படிப்படியாக திரைப்படங்களில் கார்த்திக் நடிப்பது குறைந்து கொண்டே சென்றது. சமீபகாலமாக எந்த ஒரு திரைப்படத்திலும் அவரை பார்க்க முடியவில்லை. அத்தி பூத்தாற்போல ஏதாவது ஒரு சில படங்களில் கவுரவ வேடத்தில் வந்து செல்கிறார்.

உடற்பயிற்சி
நடிகர் கார்த்திக் வீடு, சென்னை போயஸ் கார்டனில் உள்ளது. அங்கு தினமும் உடற்பயிற்சி செய்வது இவரது வழக்கம். நேற்றும் தனது வீட்டில் அவர் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கீழே தவறி விழுந்தார். இதன் காரணமாக கார்த்திக் காலில் பலத்த அடிபட்டுள்ளது. உடனடியாக அவர் அடையாறு பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

கால் எலும்பில் விரிசல்
இதையடுத்து அவருக்கு காலில் ஸ்கேன், எக்ஸ்ரே போன்ற பரிசோதனைகள் செய்து பார்க்கப்பட்டன. சில ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் கார்த்திக் சிக்கி காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட அதே இடத்தில் மீண்டும் அடிபட்டு இருக்கிறது என்கிறார்கள் மருத்துவர்கள். எனவே எலும்பில் சிறிய விரிசல் ஏற்பட்டு இருக்கிறது என்று தெரியவந்தது. இதையடுத்து கார்த்திக்கிற்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

கைவசம் உள்ள படங்கள்
நடிகர் கார்த்திக் தற்போது தீ இவன் மற்றும் அந்தகன் ஆகிய திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தற்போது இவர் அடிபட்டு மருத்துமனையில் சேர்க்கப்பட்டிருப்பதால் கார்த்திக் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படுகிறது தாமதமாகக் கூடும் என்று கூறப்படுகிறது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications