மதன் பாபு ஆசை கடைசிவரை நிறைவேறல.. டிபன்பாக்ஸில் வந்த வத்தக்குழம்பு.. சினிமாவில் ஜென்டில்மேன்: பிரபலம்
சென்னை: 71 வயதான மதன்பாபு, உடல் நலக்குறைவால் காலமானார். மதன்பாபுவின் தந்தை பெயர் சுப்பிரமணியம். சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்தவர். மதுரை மித்ரன் என்ற பெயரில் பத்திரிகையை நடத்தியவர்.. முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் நண்பரும்கூட.. மதன்பாபு குடும்பமே ஒரு இசைக்குடும்பம் ஆகும்.. அவரது அம்மா பெயர் பொன்னம்மாள். இவர் கர்நாடக சங்கீதம் கற்றதுடன், சங்கீத வகுப்புகளை எடுத்தவர்.. மதன்பாபு மனைவி சுசிலாவும் பாடகி ஆவார்.. அவரது 2 பிள்ளைகளும் நன்றாக பாடக்கூடியவர்கள்.. எனினும், பிரபலமான இசையமைப்பாளராக அவரால் வளர முடியவில்லை என்று பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு தெரிவித்துள்ளார்.
Media Circle என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பாலாஜி பிரபு, சினிமாவில் டீசன்ட்டானவர்.. ஜென்டில்மேன் என்று சொல்லலாம்.. சினிமாவில் ஒருசிலர்தான் அப்படி இருப்பார்கள்..

ஈகோ கிடையாது
மதன்பாபுவை பொறுத்தவரை, எல்லாருடனும் கலகலப்பாக பேசக்கூடியவர்.. யாரிடமும் பாகுபாடு பார்க்க மாட்டார்.. சாப்பாட்டு பிரியர்.. வெஜிடேரியன் சாப்பிட்டாலும், நன்றாக ருசித்து சாப்பிடுவார்.. ஷூட்டிங் சாப்பாடு சாப்பிடமாட்டார்.. வீட்டிலிருந்து அவருக்கு தனியாகவே, அவரது மனைவி சமைத்து கொண்டு வந்து தருவார்.. ஒருமுறை சுண்ட வைத்த வத்த குழம்பு கொண்டுவந்து தந்தார்..
இசையில் நாட்டம் கொண்டவர்.. ஆரம்ப காலக்கட்டங்களில் விளம்பர படங்களுக்கு இசையமைத்தவர்.. இசைக்குழு தனியாகவே வைத்திருந்தார்.. பல வாத்தியங்களை வாசிப்பதுடன், நன்றாக பாடுவார்.. மதன் பாப்பின் மனைவியும் நன்றாக பாடுவார்.. பிள்ளைகளும் நன்றாக பாடுவார்கள்.. எனினும், மிகப்பெரிய இசையமைப்பாளராக அவரால் வரமுடியவில்லை..
ஜாதி மல்லி கேரக்டர்
நீங்கள் கேட்டவை படத்தில், நடிகர் தியாகராஜன் வைத்திருக்கும் இசைக்குழுவில் டிரம்ஸ் வாசிப்பது போல ஒரு கேரக்டரில் மதன்பாபு முதன்முதலில் நடித்திருந்தார்.. பிறகு ஜாதி மல்லி படத்தில் இவரை சரியாக பயன்படுத்தியிருந்தார் டைரக்டர் பாலச்சந்தர். டிரேட் மார்க் சிரிப்பாலேயே பல படங்கள் மதன்பாபுக்கு மளமளவென குவிந்தன.. பெரிய பெரிய வெற்றிப்படங்களில் மதன்பாபு நடித்திருப்பார்..
ஆரம்ப காலத்தில், மதன்பாபு கச்சேரிகளில் ஏஆர். ரஹ்மானும் வாசித்திருக்கிறார்.. அந்த நேரத்தில் பல வாய்ப்புகளை ரஹ்மானுக்கு தந்ததே மதன்பாபுதான்.. ரஹ்மான் கடைசிவரை மதிக்கக்கூடிய நபராகவே ரஹ்மான் இருந்துள்ளார்.. எனவே, அப்போதிருந்தே மதன்பாபுக்கும், ரஹ்மானுக்கும் நெருக்கமான நட்பு இருந்து வந்தது..
கன்னத்தில் கை வைத்து சோகம்
நன்றாக படித்தவர், பண்பான மனிதர் மதன்பாபு.. எப்போதுமே மதன்பாபு சீரியஸாகவும், கன்னத்தில் கை வைத்து சோகமாகவும் இருந்தது கிடையாது.. சன்டிவியில் வந்த அசத்தப்போவது யாரு மூலம் மதன்பாபு இன்னும் பேமஸானார்.. இதற்கு பிறகு நிறைய டிவி ஷோக்களில் நடுவராக இருந்துள்ளார்..
சில வருடங்களாகவே புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார்.. ஆனால், இது பலருக்கும் சினிமா துறையில் தெரியுமா? என்று தெரியவில்லை.. இசைக்கச்சேரி, படங்களில் அவருக்கு ஓரளவு வருமானம் அவருக்கு வந்துகொண்டிருந்தது.. எனவே, பொருளாதார ரீதியாக அவருக்கு பெரியளவில் பாதிப்பு இருந்திருக்காது என்றே நினைக்கிறேன்.
பிரியமானவர் மதன்பாபு
இத்தனைக்கும் சம்பள விஷயங்களில் கறார் காட்ட மாட்டார்.. சினிமா வட்டாரத்தில் யாரை கேட்டாலும் அட்ஜெஸ்ட்டபிள் மனிதர் என்றுதான் அவரை சொல்லுவார்கள்.
ஈகோ, திமிர் இல்லாதவர் என்பதால், அனைவருமே அவரிடம் பிரியமாக நடந்து கொள்வார்கள்.
அதேபோல, கிரேஸி மோகன், ஒய்ஜி மகேந்திரன், கமல்ஹாசன், மௌலி, எஸ்விசேகர் போன்றோர் நெருங்கிய நண்பர்கள் ஆவர்.. ஏனென்றால், நாடகம், இசைக்கச்சேரிகளை செய்த அந்த காலத்திலிருந்தே ஒன்றாக பயணித்தவர்கள்..












Click it and Unblock the Notifications