அன்று விஜய்க்கு மூளையில் பிரச்சினைன்னு சொன்ன ரஞ்சித்தா இப்படி? கரூர் விவகாரத்தில் கரிசனம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பத்தின் நிலையை நினைத்து விஜய் வலியில் இருப்பார் என நடிகர் ரஞ்சித் சப்பைக் கட்டு கட்டி பேசியுள்ளார். அன்று விஜய் மூளையில் பிரச்சினை இருக்கு என சொன்ன ரஞ்சித்தா இப்படி பேசியிருக்கிறார் என்ற சந்தேகமும் எழுகிறது.

கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடந்த பிரச்சார பொதுக் கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் கலந்து கொண்ட போது நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியாகிவிட்டனர். இந்த சம்பவம் நடந்தும் அந்த பகுதி மக்களுக்கு துணையாக நிற்காமல் சென்னைக்கு வந்துவிட்டார். இதை பலர் விமர்சித்து வருகிறார்கள்.

vijay tvk karur

விஜய் என்றில்லை, அவரது கட்சியின் நிர்வாகிகள் கூட அந்த ஸ்பாட்டில் இருந்து நடையை கட்டி விட்டார்கள். பின்னர் 3 நாட்கள் கழித்து விஜய் வீடியோ வெளியிட்டிருந்தார். அதிலும் அவர் அரசியல்தான் பேசினாரே தவிர, தன்னால்தான் இத்தனை உயிர் போச்சு, தன்னை மன்னித்துவிடுங்கள் என்று கூட அவர் கேட்கவில்லை.

மேலும் தவெக நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார், சதீஷ்குமார் உள்ளிட்டோர் தலைமறைவாகிவிட்டனர். அவர்களது முன்ஜாமீன் மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை அடுத்து, அவர்களை தனிப்படை போலீஸார் தேடி வருகிறார்கள்.

விஜய் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் நீதிமன்றம் கேள்வி எழுப்பப்பட்டது. இந்த நிலையில் நடிகர் ரஞ்சித் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியிருப்பதாவது: 41 பேர் குடும்பத்தினர் நிலைமையை நினைத்து விஜய் வலியில் இருப்பார். அவர்களுடைய குடும்பத்திற்கு விஜய் மகனாக இருக்க வேண்டும். வாழ்நாள் முழுவதும் அவரால் இதிலிருந்து மீண்டு வர முடியாது என்று அவர் தெரிவித்திருந்தார்.

41 பேர் இறந்த செய்தி அறிந்தும் அந்த இடத்தை விட்டு விஜய் தப்பி வந்தது ஏன் என நீதிமன்றமே கண்டனம் தெரிவித்துவிட்டது. ஒரு வாரமாகியும் விஜய் இன்னமும் அந்த இடத்திற்கு போகவில்லை, அவர்களுக்கு அறிவித்த நிவாரணத்தை கொடுக்கவில்லை. இப்படியிருக்கும் போது 41 பேர் இறந்த வலி விஜய்க்கு இருக்கும் என ரஞ்சித் சொல்லியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாஜகவில் இருந்து வரும் ரஞ்சித், சமூக கருத்துகளுக்கு பதில் அளிப்பார். அதிலும் பொதுமக்களை பாதிக்கும் செயல்கள் என்றால் பொங்கி எழுவார். ஆனால் விஜய் குறித்து அவர் மென்மையான போக்கை கடைப்பிடிப்பதாகவே பார்க்கப்படுகிறது.

கடந்த ஆகஸ்ட் 30-ஆம் தேதி, இந்து முன்னணி சார்பில் கோவை துடியலூரில் நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வல தொடக்க விழாவில், விஜய் நடத்திய மாநாட்டில், கையை உயர்த்தி சொடக்கு போட்டுக் கொண்டே ஒற்றை விரலை நீட்டி மோடி ஜி என பேசி இருந்தார். 2014 ஆம் ஆண்டு கோவை கொடிசியா மைதானத்தில் பிரச்சார கூட்டம் நடைபெற்றது. அப்போது, எதுவுமே தெரியாமல் கையை கட்டிக் கொண்டு பூனை குட்டி போல் அமர்ந்து இருந்தார் நடிகர் விஜய்.

இப்போது, இஸ்லாமிய சகோதரர்களுக்கும், இஸ்லாம் மதத்திற்கும் துரோகம் இழைக்க வந்ததா ஒன்றிய அரசு என கேட்கிறார். ஆனால், அன்று கொடிசியா மைதானத்தில் என்ன கோரிக்கையை முன் வைத்தீர். கச்சத்தீவு மீட்க வேண்டும் என்றீர்களா, மீனவர்களின் நலன் பற்றி கேட்டீர்களா, கல்வியை சமத்துவமாக்க வேண்டுமென்று கேட்டீர்களா, இல்லை கள்ளச்சாராயம் அதிகமாகிவிட்டது அதை தடுக்க வேண்டும் என பேசுனீர்களா..

அன்று இப்படி அவரிடம் எந்த கோரிக்கையும் வைக்கவில்லை. அவரை சந்தித்ததற்கான காரணம் அவருடைய 'தலைவா' படம் ரிலீஸாக வேண்டும் என்பதற்காக வந்தார். தம்பி விஜய் அவர்கள் நடுவில் கொஞ்சம் பக்கத்தை காணும் என்பது போல, பல விஷயங்களை மறந்து விட்டார். அவருக்கு மூளையில் ஏதோ பிரச்சனை இருக்கிறது என நினைக்கிறேன்.

ஒரு வாக்காளர், நான் ஒரு குடிமகன், எனக்கு அப்பா மோடி தான். மிஸ்டர்... மிஸ்டர் என கையை அசைத்து மோடி பெயெரை சொல்லும் போதெல்லாம் நான் மிகவும் வேதனை அடைந்தேன். மிஸ்டர் மோடினு சொடக்கு போட்டு பேசுற, முதல்வரை அங்கிள்னு சொல்லுற இதுதான் அரசியல் நாகரீகமா. நீ இப்படி இருந்தால், உன்னை நம்பி வந்தவர்கள் அதைத்தான் பின்பற்றுவார்கள் என்பதை மறந்துவிட வேண்டாம் என ரஞ்சித் விமர்சித்திருந்தார்.

கரூர் விவகாரத்தில் இருந்து தவெக தலைவர் விஜய் சிக்காமல் இருக்க கூட்டணி பேச்சுவார்த்தையை பாஜக நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது. இந்த நேரத்தில் விஜய்க்கு ஆதரவாக ரஞ்சித் பேசியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+