சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

காலரை தூக்கி விட்டு சொல்றேன்.. “அந்த சிரிப்பு இருக்கே..” முதல்வர் ஸ்டாலினை புகழ்ந்த சத்யராஜ்!

Google Oneindia Tamil News

சென்னை : சட்டப்பேரவையில் நேற்றைய நிகழ்வுகளை சுட்டிக்காட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் சத்யராஜ் பாராட்டு தெரிவித்துள்ளார். நேற்று சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்றபோது முதலமைச்சர் ஸ்டாலினின் புன்னகை என்னை வெகுவாக கவர்ந்தது என்று நடிகர் சத்யராஜ் வீடியோவில் கூறியுள்ளார்.

நேற்று தொடங்கிய தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் ஆளுநர் ரவி, தமிழ்நாடு அரசு தயாரித்த ஆளுநர் உரையில் சில பகுதிகளை வாசிக்காமல் தவிர்த்ததும், தேசிய கீதம் பாடுவதற்கு முன்பே அவையில் இருந்து வெளியேறியதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஆளுநர் ரவி வாசித்த உரையை அவைக்குறிப்பில் ஏற்றக்கூடாது, அரசு அச்சிட்டு கொடுத்த ஆங்கில உரையும், சபாநாயகர் வாசித்த தமிழாக்க உரையும் தான் அவைக் குறிப்பில் ஏற்றப்பட வேண்டும் என தீர்மானம் கொண்டுவந்தார் முதல்வர் ஸ்டாலின். அப்போது ஆளுநர் உடனடியாக அவையில் இருந்து வெளியேறினார்.

அப்போது முதல்வர் ஸ்டாலின் லேசாகப் புன்னகை புரிந்ததுபோலான காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டன. அந்த தருணத்தைக் குறிப்பிட்டு பாராட்டியுள்ளார் நடிகர் சத்யராஜ்.

தவறு.. வெளியே வாங்க! சுதாரித்த ஸ்டாலின்.. ரவி உரைக்கு எதிராக அந்த நொடியே தீர்மானம் தயாரானது எப்படி? தவறு.. வெளியே வாங்க! சுதாரித்த ஸ்டாலின்.. ரவி உரைக்கு எதிராக அந்த நொடியே தீர்மானம் தயாரானது எப்படி?

திமுக vs ஆளுநர்

திமுக vs ஆளுநர்

தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அமைந்ததில் இருந்து பாஜக தொடர்ந்து திமுக அரசுக்கு எதிராக செயலாற்றி வருகிறது. மத்திய பாஜக அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், திமுக அரசிற்கும் இடையே தொடர்ந்து கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் காலந்தாழ்த்தி வருகிறார். மேலும், சனாதான தர்மம் ஆகியவை குறித்து மேடைகளில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுவதை திமுக அமைச்சர்கள் உள்பட பலரும் விமர்சித்துள்ளனர். இதனால், ஆளுநர் - திமுக இடையேயான உரசல் தொடர்ந்து வருகிறது.

உச்சகட்ட மோதல்

உச்சகட்ட மோதல்

சட்டப்பேரவையில் நேற்று ஆளுநர் உரையின்போது நடந்த நிகழ்வுகளும் திமுக - ஆளுநர் மோதலை உச்சகட்டமாக்கி விட்டது. ஆளுநர், தமிழ்நாடு அரசு தயாரித்த உரையில் சில பகுதிகளை தவிர்த்து, தானே சிலவற்றைப் பேசினார். இதனால், ஆளுநர் உரை அவை குறிப்பில் இடம்பெறாது எனக்கூறி அரசு அச்சிட்டு கொடுத்த ஆங்கில உரையும், சபாநாயகர் வாசித்த தமிழாக்க உரைதான் அவைக் குறிப்பில் ஏற்றப்படும் என தீர்மானம் கொண்டுவந்தார் முதல்வர் ஸ்டாலின். இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, தமிழ்நாடு அரசு தயாரித்த உரையே பதிவேற்றப்பட்டது. இதற்கிடையே, முதலமைச்சர் தீர்மானத்தை முன்மொழிந்தபோது, ஆளுநர் ஆர்.என். ரவி அவையில் இருந்து வெளியேறினார்.

ஆளுநருக்கு கண்டனம்

ஆளுநருக்கு கண்டனம்

ஆளுநர் சட்டப்பேரவையை அவமதித்து விட்டதாக திமுக உள்ளிட்ட கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். அதேசமயம், ஆளுநரை திமுக அரசு அவமதித்துவிட்டது என பாஜகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர். சட்டப்பேரவையில் நடந்த நேற்றைய நிகழ்வு, அரசியல் அரங்கையும், சமூக வலைதளங்களையும் ஆக்கிரமித்துள்ளது. இதுதொடர்பாக பலரும் தங்கள் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், திராவிட இயக்க ஆதரவாளரும், நடிகருமான சத்யராஜ், நேற்றைய நிகழ்வைக் குறிப்பிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பாராட்டியுள்ளார்.

என்னை கவர்ந்த புன்னகை

என்னை கவர்ந்த புன்னகை

இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள சத்யராஜ், "மனிதருக்கு அழகு சிரிப்பு. சிரிப்பை விட அழகானது புன்னகை. சமீபத்தில் ஒரு புன்னகை என்னை ரொம்பவே கவர்ந்தது. அது, சட்டசபையில், நமது தமிழ்நாடு முதல்வர் மானமிகு மு.க.ஸ்டாலின் அவர்களின் புன்னகை. அந்தப் புன்னகையில் பகுத்தறிவுப் பகலவன் பெரியாரின் சுயமரியாதை சுடர்விட்டது. பேரறிஞர் அண்ணாவின் எதையும் தாங்கும் இதயம் பளிச்சிட்டது. கலைஞர் கருணாநிதியின் நெஞ்சுக்கு நீதி கிளர்ந்தெழுந்தது.

காலரை தூக்கிவிட்டுக் கொள்கிறேன்

காலரை தூக்கிவிட்டுக் கொள்கிறேன்

தமிழ்நாடு எனும் மாநிலத்தில் வாழும் ஒரு சாதார குடிமகனாக முதல்வரின் புன்னகையில் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன். காலரை கூட தூக்கி விட்டுக் கொள்கிறேன். HATSOFF TO OUR CM முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்" என சத்யராஜ் அந்த வீடியோவில் பேசியுள்ளார். சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் தீர்மானம் வாசித்தபோது, ஆளுநர் கோபமாக வெளியேறியபோது முதலமைச்சர் ஸ்டாலின் லேசாகப் புன்னகை செய்ததைக் குறிப்பிட்டு சத்யராஜ் பேசியுள்ளார்.

English summary
Actor Sathyaraj expressed appreciation to Tamil Nadu Chief Minister M.K.Stalin by pointing out yesterday's events in TN Assembly. Sathyaraj said CM Stalin's smile impressed me a lot when the assembly session was held yesterday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X