ட்விட்டரை டாய்லெட்டாக்கி வச்சிருக்கீங்களே.. சாக்கடையில்தான் மலரும்.. நடிகர் சித்தார்த் காட்டம்
சென்னை: நீட் தேர்வை முதல் சட்டசபை கூட்டத் தொடரிலேயே ரத்து செய்வோம் என திமுக பொய்யான வாக்குறுதி கொடுத்தது குறித்து கேள்வி எழுப்பிய நெட்டிசனுக்கு நடிகர் சித்தார்த் பதிலளித்துள்ளார். ஆனால் அவர் நாகரீகமான வார்த்தைகளை பயன்படுத்தியிருக்கலாம் என்ற ஒரு விவாதம் கிளம்பியுள்ளது.
மத்திய அரசுக்கு எதிராக கொந்தளித்து அவர் போடும் ட்வீட்டுகளை நெட்டிசன்கள் ஆமோதித்து வரும் நிலையில் நேற்றைய தினம் மிகவும் அருவருக்கத்தக்க வார்த்தைகளை நடிகர் சித்தார்த் பயன்படுத்தியுள்ளது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா, ஆக்ஸிஜன் படுக்கை, நீட் தேர்வு, கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட சமூக பிரச்சினைகளுக்கு அவர் குரல் கொடுத்து வருகிறார்.

ஆக்ஸிஜன் தட்டுப்பாடு
இந்த நிலையில் கொரோனா 2ஆவது அலையின் போது ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பலர் இறந்த நிலையில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடே இல்லை என்ற அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தை, பொய் சொன்னால் யாராக இருந்தாலும் ஓங்கி ஒரு அறை விழும் என கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் சித்தார்த்.

கொரோனா தடுப்பூசி
அது போல் தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவிய போது #தடுப்பூசி எங்கடா என்ற ஹேஷ்டேக்கை டிரென்டாகினார். இந்த நிலையில் ட்விட்டரில் நெட்டிசன் ஒருவர் சித்தார்த்தை டேக் செய்து ஒரு கேள்வி கேட்டிருந்தார். அவர் தனது ட்வீட்டில் நீட் தேர்வை முதல் சட்டமன்ற கூட்டத்திலேயே ரத்து செய்வோம் - தேர்தல் வாக்குறுதி இன்று (நேற்று) நீட் நடக்கிறது.
பொய் சொன்னால் முதல்வராக இருந்தாலும் கன்னத்தில் அறைவேன் - நடிகர் சித்தார்த்"
ஐயா சித்தார்த் என்ன பண்ண போறீங்க?
#நீட்_ரத்து_எங்கடா என பதிவிட்டிருந்தார்.

கொந்தளிப்பு
இதை பார்த்த சித்தார்த் கடும் கொந்தளிப்புக்குள்ளாகினார். இதையடுத்து அவர் தனது பதிலில் மூதேவி கோவமோ, சந்தேகமோ வந்தா துப்பிருந்தா போய் நீ கேளு, இல்லை உங்க அப்பன போய் கேளு, நான் என் வேலையை தாண்டா பாக்குறேன், பொறுக்கி பசங்க, இதுவே வேலையா போச்சு, ட்விட்டர டாய்லெட்டாக்கி வச்சிருக்கீங்க. வேற எங்க மலரும், சாக்கடையில்தான் மலரும், எழவு. இந்தியில சொல்ட்டா? என சித்தார்த் பதிலடி கொடுத்துள்ளார். இதை நெட்டிசன்கள் கடுமையாக கண்டித்துள்ளனர். சிலர் சித்தார்த்திற்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளார்கள்.

அதுக்கு நாகரீகமா பதில் சொல்லுங்க
சங்கியோ மங்கியோ, கேள்வி நாகரீகமா கேட்டா, அதுக்கு ஏன் இப்டி பதில் சொல்லணும்? உங்க கையாலாகாத தனத்துக்கு இப்டி பதில் சொல்லி மலுப்பனுமா? இது உங்கள் தரத்தை காட்டுகிறது. இதுல யாரு ட்விட்டர டாய்லெட் ஆக்குனது?

கோபப்பட்டு பேசறீங்க
அவரு நாகரிகமா கேட்ட கேள்விக்கு, நீங்க தான் கோபபட்டு அசிங்க அசிங்கமா திட்டுரீங்க...
இப்ப சொல்லுங்க ட்விட்டரை டாய்லட் ஆக்குவது யாரு?

சமூக அக்கறை
நாகரிகமான கேள்வி அதுவும் நீங்க சமூக அக்கறையாளரா காட்டிக்கிட்டதால் உங்க கிட்ட கேக்குறார் பதில் சொல்லாமல் இருந்திருக்கலாம் ஆனால் இவ்வளவு அநாகரிகமான பதில், பயோல அவர் கட்சியை பாத்துட்டு பதில்.ஆனால் உங்களுக்கு தமிழ்நாட்டில் கேட்க துப்பில்லை என்று ஒத்துக்கொண்டதற்கு வாழ்த்துகள் சகோ

உங்க நேர்மை
நாகரீகமா கேள்வி கேட்கும் ஒருத்தர மரியாதை இல்லாம பேசுற நீங்க தான் டிவிட்டர டாய்லெட்டா ஆக்கி வச்சிருக்கீங்க. பதில் சொல்ல முடியாம கோபம் வரத பார்க்கும் போதே தெரியுது உங்க நேர்மை...

எதுக்கு இப்படி
அவரு சரியா தான் டீசெண்டா கேட்ருக்காரு... பதில் அளிக்க முடியவில்லை என்றால் எதற்கு இப்படி பதிவிடனும்...
@Actor_Siddharth நீங்களும் தானே கேள்விகள் கேட்டீர்கள், உனக்கு வந்தா ரத்தம் மத்தவங்களுக்கு டொமெட்டோ சாஸ்சா

நேரத்தை வீணடிக்காதீர்
இதற்கெல்லாம் பதில் கொடுத்து உங்கள் நேரத்தை வீணடிக்காதீர் சித்தார்த்.
-
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு?












Click it and Unblock the Notifications