பவன் கல்யாணும் தான் தோற்றார்..ஆனால் இப்போ என்னாச்சு? விஜய் ஜெயிப்பாரு.. இது நடக்கனும்! பிரபலம் நறுக்
சென்னை: ஆந்திராவில் நடிகர் பவன் கல்யாண் முதல் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்த நிலையில், முயற்சியை விடாமல் தொடர்ந்து திரும்பவும் களத்தில் நின்று வெற்றி பெற்று தற்போது துணை முதலமைச்சர் ஆகி உள்ளார் எனவும், வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் நேரம் நன்றாக இருந்தால் விஜய் அரசியலில் வெற்றியடைவார் என நடிகர் சுமன் கூறியுள்ளார்.
தஞ்சை பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் இரண்டு நாட்களாக நடைபெறும் மூன்றாவது முறை தேசிய அளவில் திறந்த வெளி கராத்தே போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் திரைப்படப் பிரபலம் சுமன் அவர்கள் கராத்தே போட்டியினை தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்," நேரம் மாறிக் கொண்டே இருக்கிறது. நேரத்தை நோக்கி சென்று கொண்டே இருக்க வேண்டும்.

இப்போது எங்கள் மாநிலத்தில் பவன் கல்யாண் இருக்கிறார். முதலில் தோல்வி அடைந்தார். முயற்சியை விடாமல் தொடர்ந்து திரும்பவும் களத்தில் நின்று வெற்றி பெற்று தற்போது துணை முதலமைச்சர் ஆகி உள்ளார். இதனை அவர் வாழ்நாளில் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார். இதற்கு முன் பவன் கல்யானுக்கு எந்த ஒரு அரசியல் அனுபவம் இருந்திருக்காது. நாம் வரவேண்டும், அரசியலில் இருக்க வேண்டும், இருந்தால் மட்டுமே அனுபவம் கிடைக்கும் என்பதல்ல.
அரசியலைப் பொறுத்தவரை ஜாதகத்தை நான் நம்புகிறேன். யார் ஒருவருக்கு ஜாதகம் நன்றாக இருக்கின்றதோ அவர்கள் முதலமைச்சர் என்ற நாற்காலியில் அமர்வார்கள். மக்கள் கூட்டத்தை பார்த்து இவர் முதலமைச்சர் ஆகிவிடுவார் என்று நினைக்கக் கூடாது. யாருக்கு கிரகங்கள் எல்லாம் சேர்ந்து இருக்கிறதோ அப்போது தான் அவர்களுக்கு வெற்றி கிடைக்கும். அவர்களுக்கு கூட்டம் வருகிறதோ இல்லையோ கடைசி நேரத்தில் அவர்கள் கணக்கு போடும் போது பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவார்கள்.
இவர்கள் சினிமாக்காரர்கள் தானே என்று நினைக்கக் கூடாது. அந்தக் காலமெல்லாம் போய் விட்டது. தற்போது நிறைய நடிகர்கள் அரசியலுக்கு வருகிறார்கள். போகிறார்கள். ஆனால் கடைசி வரைக்கும் யார் இருக்கிறார்கள் யார் இருப்பார்கள் என கிரகங்களை பொருத்தும் தலையெழுத்தை பொருத்தும் இருக்கின்றது. யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஆனால் அரசியலுக்கு வர வேண்டும் என்றால் முதலில் பணம் வேண்டும்.
பணம் மிகப் பெரிய ஒரு விளையாட்டு. பணம் மட்டுமல்லாது அவர் புகழ் பெற்றிருக்க வேண்டும். அப்படி இருந்தால் நேரம் அவர்களுக்கு அமைந்து அவர்கள் ஜெயிப்பதற்கு வாய்ப்பு இருக்கின்றது. மேலும் விஜய் அரசியலுக்கு வந்தால் வெற்றி பெற வாய்ப்பு உண்டா என்ற கேள்விக்கு நான் முன்பு சொன்ன பதில் தான் அவருடைய நேரம் எப்படி இருக்கின்றது என எனக்கு தெரியவில்லை. கூட்டத்தைப் பார்த்து நான் நம்ப மாட்டேன். அவரது நேரம் நன்றாக இருக்கின்றதா நேரத்தை பார்த்து தான் அவர் வருகிறாரா. என்று எனக்கு தெரியாது அவருக்கு நேரம் நன்றாக இருந்தால் வெற்றி பெறலாம்" என தெரிவித்தார்.
-
பெண்களின் பாதுகாப்பிற்கு புதிய அரண்.. ஜூன் 9ல் சிங்கப்பெண் அதிரடி படையை களமிறக்கும் முதல்வர் விஜய்! -
“ஸ்டாலின் விரும்பும் வரைதான் தவெக ஆட்சி நீடிக்கும்”.. ஒரே போடாக போட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்! -
7 நாட்கள் 7 அறிக்கைகள்.. விஜய்யின் தூக்கத்தை கெடுக்கும் திமுக.. சொல்ல வருவது ஒரே மேட்டர் தான் -
“மின்வாரிய பதவி உயர்வு விவகாரத்தில் பொய்.. தவெக அரசின் பித்தலாட்டம்”.. பாய்ந்து வந்த திமுக! -
"சுடுகாடு பக்கத்துல டாஸ்மாக் வையுங்க CM சார்!" – விஜய்யிடம் பார்த்திபனின் 'சைக்கலாஜிக்கல்' அஸ்திரம் -
கஜானாவுக்கு வரும் 1200 கோடி.. பார்ட்டி ஃபண்டில் கைவைத்த விஜய்! இனி டாஸ்மாக் கல்லா கட்டுமே! சூப்பர்! -
விசிகவில் இருந்து சங்கத்தமிழன் 3 மாதங்களுக்கு சஸ்பெண்ட்.. திருமாவளவன் அதிரடி ஆக்ஷன்! -
திமுகவில் இணைந்தார் Ex. MLA பனையூர் பாபு.. விசிகவில் இருந்து ஆயிரக்கணக்கானோருடன் ஜம்ப்! -
இதுக்கு ஒரு எண்டே இல்லையா சாரே! எடப்பாடிக்கு மீண்டும் மீண்டும் தலைவலி! கட்சி தாவ தயாராகும் தலைகள்! -
வேற லெவலில் விஜய் செய்த சம்பவம்! ஒரே நேரத்தில் 300 பேருக்கு ப்ரோமோஷன்! வரலாற்றில் முதன்முறையாமே! -
“திமுக கூட்டணிக் கட்சிகளிடம் கையேந்தி, கெஞ்சி ஆட்சி அமைத்துள்ளார் விஜய்”.. டிடிவி தினகரன் தாக்கு! -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications