Actor Vijay: ரோல்ஸ் ராய்ஸ் காருக்கான நுழைவு வரி பாக்கியை செலுத்தினார் நடிகர் விஜய்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரிட்டனில் இருந்து இறக்குமதி செய்த, 'ரோல்ஸ் ராய்ஸ்' காருக்கு, நடிகர் விஜய், 40 லட்சம் ரூபாய் நுழைவு வரி செலுத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரிட்டன் நாட்டில் இருந்து, 2012ம் ஆண்டு நடிகர் விஜய், 'ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட்' வகை சொகுசு காரை வாங்கியிருந்தார்.

காரை வாகன பதிவுக்காக, வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு கொண்டு சென்றபோது, நுழைவு வரி தொடர்பான ஆட்சேபனை இல்லா சான்றிதழ் சமர்ப்பிக்க போக்குவரத்து அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.

 வரி அதிகம்

வரி அதிகம்

ஏனென்றால் இறக்குமதி காருக்கு நுழைவு வரி செலுத்தப்பட்டால்தான் வாகனத்தை பதிவு செய்ய முடியும். விஷயம் என்ன என்றால், காரின் விலையை விட இறக்குமதி வரி, சாலை வரி மற்றும் இன்ன பிற விஷயங்கள் என சேர்த்தால் வரும் தொகை அதிகமாக இருந்துள்ளது. அதிர்ச்சியடைந்தார் விஜய். எனவே, நுழைவு வரியை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அப்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

விஜய்க்கு அபராதம்

விஜய்க்கு அபராதம்

இந்த வழக்கை கடந்த மாதம் தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம். மேலும், முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு, விஜய் 1 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்தவும் உத்தரவிட்டது. இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு மதிப்பில் ஏற்கனவே 20% இறக்குமதி வரி செலுத்திவிட்டதால் நுழைவு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு வேண்டும் என்ற விஜய் கோரிக்கை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியத்தால், ஏற்கப்படவில்லை.

மேல் முறையீடு

மேல் முறையீடு

எனவே, இந்த உத்தரவை எதிர்த்து, விஜய் மீண்டும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து சென்னை விஜய் இந்த மனுவை தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் துரைசாமி, ஹேமலதா அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.

நீதிபதி கருத்துக்களை வாபஸ் பெற கோரிக்கை

நீதிபதி கருத்துக்களை வாபஸ் பெற கோரிக்கை

அந்த வழக்கில் நடிகர் விஜய் தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயணன் ஆஜரானார். நடிகர் விஜய் தரப்பு காருக்கான நுழைவு வரியைச் செலுத்தத் தயாராக இருப்பதாகவும் ஆனால், தங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை நீக்குவதோடு, நீதிமன்றத்தை அணுகியதற்காக நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம், விஜய் குறித்து தெரிவித்த விமர்சன கருத்துகளைத் திரும்பப் பெற வேண்டுமென்றும் வாதிடப்பட்டது. இதையடுத்து, விஜய்க்கு விதித்த அபராதத்திற்கு இடைக்கால தடை விதித்து அப்போது சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. காருக்குச் செலுத்த வேண்டிய நுழைவு வரியை ஒரு வாரத்திற்குள் செலுத்தவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

நுழைவு வரி செலுத்திய விஜய்

நுழைவு வரி செலுத்திய விஜய்

இந்த நிலையில், விஜய் நுழைவு வரியாக, 40 லட்சம் ரூபாய் செலுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நாளிதழ் ஒன்றில் இந்த செய்தி வெளியான நிலையில், பிபிசி தமிழும் இதை உறுதி செய்துள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது. முதலில், 8 லட்சம் ரூபாயும், தற்போது 32 லட்சம் ரூபாயும் விஜய் செலுத்தி உள்ளதாக அந்த செய்திகள் தெரிவிக்கின்றன. ஒரு வாரத்திக்கு முன்னரே இந்த வரி செலுத்தப்பட்டுள்ளதாக விஜய் தரப்பு பிபிசி தமிழிடம் உறுதி செய்துள்ளது.

ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் கார்

ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் கார்

இந்த 'கோஸ்ட்' காரின் விலை 2012-ல் 3.5 கோடி ரூபாய். வரியோடு சேர்த்தால் இதன் மதிப்பு கிட்டத்தட்ட 6 கோடிக்கும் மேல் ஆகிறது. கார் பிரியர் நடிகர் விஜய். எனவே, அவரிடம் பல வகைப்பட்ட கார்கள் உள்ளன. விஜய் வைத்துள்ள ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சீரிஸ் 1 வகையை சார்ந்தது. லிட்டருக்கு 5 முதல் 8 கிலோ மீட்டர் வரை அந்த கார் மைலேஜ் கொடுக்கக் கூடியது. இதில் அதிகபட்சமாக மணிக்கு 250 கிலோமீட்டர் வேகத்தில் செல்ல முடியும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+