சும்மா இந்தில உனக்கு டிரான்ஸ்லேட் பண்ண முடியாது! தமிழ் கத்துகிட்டு வா.. விஜய் ஹிந்தி எதிர்ப்பு வசனம்
சென்னை: பீஸ்ட் திரைப்படத்தில் தீவிரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் நடிகர் விஜய், ஒரு கட்டத்தில் சும்மா இந்தில உனக்கு டிரான்ஸ்லேட் பண்ண முடியாது, வேணும்னா தமிழ் கத்துகிட்டு வா என சொல்லும் காட்சிகள் இந்தி திணிப்புக்கு எதிராக குரல் கொடுத்ததாக ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
Recommended Video
நடிகர் விஜய் நடித்து நெல்சன் இயக்கத்தின் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவானது பீஸ்ட் திரைப்படம். இந்த திரைப்படம் சித்திரை வருட பிறப்பையொட்டி இன்றைய தினம் தியேட்டர்களில் வெளியானது.
பீஸ்ட் கொண்டாட்டத்திற்காக நேற்று மாலை முதலே ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடி வருகிறார்கள். படத்தின் முதல் காட்சி ஒளிபரப்பாவதற்குள் அரபிக் குத்து பாடலுக்கு தியேட்டர்களில் ரசிகர்கள் டான்ஸ் ஆடினர்.

டிரெய்லர்
இந்த படத்தின் டிரெய்லரை பார்க்கும் போதே கதைகளம் எப்படி இருக்கும் என்பது அனுமானிக்கப்பட்டது. அதாவது சென்னையில் உள்ள ஒரு வணிக வளாகம் அதாவது ஷாப்பிங் மாலை தீவிரவாதிகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார்கள். அந்த நேரம் பார்த்து நம்ம வீர ராகவன் அதான்ங்க விஜய்யும் அங்கு மாட்டிக் கொள்கிறார்.

ரா அதிகாரி
விஜய் ஒரு ரா அதிகாரியாக இந்த படத்தில் நடித்துள்ளார். இது தெரியாமல் மாலை தீவிரவாதிகள் ஹைஜாக் செய்தால் விஜய் சும்மா இருப்பாரா என்ன? அந்த மாலை தீவிரவாதிகளிடம் இருந்து பத்திரமாக மீட்பது எப்படி என்பதை வைத்து மீதி கதை நகரும் என சொல்லப்படுகிறது. இது பார்ப்பதற்கு துப்பாக்கி 2.0 போல் உள்ளதாக கூறுகிறார்கள்.

துப்பாக்கி படம்
அந்த துப்பாக்கி படத்திலும் தீவிரவாதிகளை டீல் செய்வார். இந்த படத்திலும் தீவிரவாதிகளை டீல் செய்கிறார். தீவிரவாதிகளுக்கும் போலீஸுக்கும் மீடியேட்டராக வருபவர் இயக்குநர் செல்வராகவன். இவர் விஜய்யும் மாலில் இருப்பதை அறிந்து கொண்டு எப்படியும் நம்ம பையன் இருக்காருல்ல அவர் பார்த்துப்பார் என தைரியமாக இருக்கிறார்.

தீவிரவாதிகளுடன் பேச்சுவார்த்தை
இந்த படத்தில் வணிக வளாகத்தை விட்டுவிட்டு போலீஸிடம் சரண்டர் ஆகும்படி தீவிரவாதிகளுடன் விஜய் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்துவார். அவர் ரா அதிகாரி என்பதால் இந்தி உள்பட பல மொழிகளை பேசுவார். ஒவ்வொரு முறையும் இந்தியில் பேசி தீவிரவாதிகளுக்கு புரிய வைப்பார்.

தமிழ் கத்துகிட்டு வா
ஒரு காட்சியில் இந்தியில் தீவிரவாத தலைவனிடம் விளக்கிக் கொண்டிருக்கும் போது ஒரு கட்டத்தில் கடுப்பாகும் விஜய், ஏன்டா எல்லாத்தையுமா உனக்கு சொல்லணும். அட போடா! சும்மா இந்தில உனக்கு டிரான்ஸ்லேட் பண்ண முடியாது. வேணும்னா தமிழ் கத்துகிட்டு வா எனும் காட்சிகளுக்கு தியேட்டரில் கைதட்டல்களும் விசிலும் பறக்கின்றன. தென்னிந்தியாவில் இந்தியை இணைப்பு மொழியாக திணிக்க மத்திய அரசு முயற்சிப்பதாக குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.

மெர்சலுக்கு பிறகு மத்திய அரசை எதிர்க்கும் விஜய்
தமிழ்தான் இணைப்பு மொழி என ஏ.ஆர். ரஹ்மான், சிம்பு, அனிருத் உள்ளிட்டோர் குரல் கொடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் விஜய்யும் இந்திக்கு எதிராக இந்த படத்தில் குரல் கொடுத்துள்ளார. மெர்சலில் ஜிஎஸ்டிக்கு எதிராக குரல் கொடுத்த விஜய், இந்த படத்தில் இந்தி திணிப்புக்கு எதிராக பேசுகிறார். தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிராக வசனங்களை விஜய் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications