என் அட்மின் தான் வரனும்! ’வாரிசு’ ஆடியோ லாஞ்சில் எச்.ராஜாவை சீண்டிய விஜய்! வெடித்துச் சிரித்த நடிகர்

Subscribe to Oneindia Tamil

சென்னை : நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் வாரிசு திரைப்படம் பொங்கல் அன்று வெளியாக இருக்கும் நிலையில் அந்தப் படத்தின் ஆடியோ லாஞ்ச் தான் தற்போது சமூக வலைதளங்களை ஆக்கிரமித்து இருக்கிறது. ரசிகர்கள் கூட்டத்தால் உற்சாகமான விஜய் அடுத்த செல்பி வீடியோவும் அதனை பதிவிடுவது குறித்து பாஜக தலைவர் எச்.ராஜாவை மறைமுகமாக பேசிய பேச்சும் தான் தற்போது புதிய புயலை கிளப்பி இருக்கிறது.

நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு இடையே ரசிகர்களால் தளபதி என தலையில் வைத்து கொண்டாடப்படும் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. வழக்கம்போல படத்திற்கான ஹைப்பும் எகிறி இருக்கிறது.

குறிப்பாக நீண்ட காலத்திற்குப் பிறகு நடிகர் விஜய்யின் சினிமா போட்டியாளரான அஜித் குமார் நடித்திருக்கும் துணிவு படமும் அதே பொங்கலுக்கு வெளியாகும் நிலையில் பொங்கல் ரேசில் வெற்றி பெறப் போவது யார் என்ற பரபரப்பும் ஏற்பட்டிருக்கிறது.

வாரிசு

வாரிசு

வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் தில் ராஜு தயாரித்திருக்கும் இந்தப் படத்திற்கு முதன் முறையாக இசையமைக்கும் வாய்ப்பை பெற்றிருக்கிறார் தமன். விவேக்கின் பாடல் வரிகளில் சித்ரா, விஜய் - மானசி, சிலம்பரசன் உள்ளிட்டோர் பாடிய பாடல்கள் பட்டிதொட்டி எங்கும் ஹிட்டடித்து இருக்கிறது. குறிப்பாக 'ரஞ்சிதமே' 'தீ தளபதி' பாடல் வெறித்தனம் என்றால் சித்ரா பாடிய 'அம்மா பாட்டு' மனதை நெகிழ வைக்கும் வகையில் இருப்பதால் படத்திற்கான எதிர்பார்ப்பும் வழக்கத்தை விட அதிகமாகவே இருக்கிறது.

பெரும் எதிர்பார்ப்பு

பெரும் எதிர்பார்ப்பு

இந்த படத்தில் ராஸ்மிகா மந்தனா, சரத்குமார், ஷாம், சம்யுக்தா, யோகி பாபு, பிரகாஷ்ராஜ், பிரபு, ஜெயசுதா என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்திருக்கும் நிலையில் படக்குழு இடையில் சில பிரச்சனைகளை சந்திக்க நேர்ந்தது. யானையை சூட்டிங்கில் பயன்படுத்தியது, தியேட்டர் ஒதுக்கீடு செய்வதில் பிரச்சனை, தெலுங்கு திரையுலகின் போர்க்கொடி என சிக்கல்களை சந்தித்தாலும் தற்போது அந்த படம் அவற்றையெல்லாம் தாண்டி வெளிவர இருக்கிறது.

ஆடியோ லாஞ்ச்

ஆடியோ லாஞ்ச்

விஜய் படத்தை விட அந்த படத்திற்கு முன்னதாக வரும் ஆடியோ லாஞ்ச் தான் ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் பேசு பொருளாக இருக்கும். அப்படித்தான் வாரிசு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவும் அமைந்தது. அதிக விலையில் டிக்கெட்டுகள் விற்பனை, ரசிகர்கள் மீது தாக்குதல் ,நேரு ஸ்டேடியத்தில் இருக்கைகள் சேதமானதால் படக்குழுவுக்கு அபராதம் என சர்ச்சைகளுடன் அந்த விழா நடைபெற்றாலும் இதுவரை இல்லாத அளவுக்கு ரசிகர்கள் கூட்டம் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு இருந்தது. இதனால் நடிகர் விஜய்யும் செல்பி வீடியோ எடுத்து தனது உற்சாகத்தை வெளிப்படுத்தினார்.

அட்மின் தான் வரணும்

அட்மின் தான் வரணும்

இந்த நிலையில் இந்த ஆடியோ வெளியீட்டு விழா பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் வெளியிடப்பட இருக்கிறது. அதன் பிரமோ தற்போது வெளியாகியிருக்கும் நிலையில் அதில் பேசிய விஜய் "எனக்கு ட்வீட் போடத் தெரியாது.. என் அட்மின் தான் வரணும்" என பேசினார். அதாவது பாஜக மூத்த தலைவரான எச். ராஜா கடந்த சில வருடங்களுக்கு முன்பு பெரியார் குறித்து ட்விட்டரில் அவதூறாக பதிவிட்ட நிலையில் தான் போடவில்லை தனது அட்மின் தான் அந்த பதிவை போட்டார் என கூறினார். அதை கிண்டல் செய்யும் வகையிலேயே விஜய் பேசியதாகவும் இதனைக் கேட்ட தயாரிப்பாளர் தில் ராஜு மற்றும் நடிகர்கள் சரத்குமார் பிரகாஷ்ராஜ் ஆகியோர் விழுந்து விழுந்து சிரித்தனர்.

எச்.ராஜா

எச்.ராஜா

தற்போது இந்த பிரமோ சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. நடிகர் விஜயின் வாரிசு படம் தான் அரசியல் பிரச்சினையின்றி வெளிவர இருந்தது. ஆனால் தற்போது பாஜக எச் ராஜாவை விஜய் விமர்சித்துள்ளதாகவும் இதனால் பாஜகவினர் அவருக்கு எதிராக கொந்தளிப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். ஏற்கனவே ஜிஎஸ்டி உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து மெர்சல் படத்தில் விஜய் பேசியது பெரிய அளவில் பேசுபொருளான நிலையில் ஜோசப் விஜய் எனக் குறிப்பிட்டு அவரது வாக்காளர் அடையாள அட்டையை வெளியிட்டவர் எச்ச ராஜா என்பதும் குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+