செல்லம்மா சீரியலில் “வாரிசு” கதையா? தீ தளபதி பாட்டையும் விட்டு வைக்கலயே - விஜய் டிவியின் “துணிவு”
சென்னை: நடிகர் விஜய் நடிக்கும் "வாரிசு" திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கும் நிலையில், இன்று விஜய் டிவியின் ஒளிபரப்பாகி வரும் செல்லம்மா சீரியலில் வாரிசு படத்தை எதிர்பார்க்கும் ரசிகர்களை ஈர்க்கும் வகையில், வாரிசு யார் என்று தொலைக்காட்சியில் புரோமோ வெளியிட்டு அந்த படத்தின் பாடலையும் பயன்படுத்தி உள்ளார்கள்.
பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து பிரபல தெலுங்கு இயக்குநரான வம்சி இயக்கி இருக்கும் வாரிசு திரைப்படத்தில் நடிகர் விஜய் நடித்து இருக்கிறார். இதனை தெலுங்கு தயாரிப்பாளர் தில்ராஜ் தயாரித்து உள்ளார்.
பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்து இருக்கும் இந்த திரைப்படத்தில் நடிகர்கள் சரத்குமார், ஷியாம், பிரகாஷ்ராஜ், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து உள்ளார்கள்.

இசை, பாடல்கள்
இந்த படத்துக்கு பிரபல இசையமைப்பாளரான தமன் பாடல்கள் மற்றும் பின்னணி இசையை அமைத்து இருக்கிறார். இப்படத்தின் முதல் சிங்கில் பாடலான ரஞ்சிதமே கடந்த மாதம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து தீ தளபதி எனத் தொடங்கும் இப்படத்தின் 2 வது பாடல் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது.

பாடல்கள்
இந்த நிலையில் சமீபத்தில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் வாரிசு படத்தின் அனைத்து பாடல்களும் வெளியிடப்பட்டன. இதில் நடிகர் விஜய், பிரகாஷ்ராஜ், இயக்குநர் வம்சி, தயாரிப்பாளர் தில்ராஜ் ஆகியோரது பேச்சுக்கள் திரைப்படம் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்தன.

வாரிசு டிரைலர்
அத்துடன் இசைவெளியீட்டு விழாவில் திரண்டு இருந்த ரசிகர்களோடு சேர்ந்து நடிகர் விஜய் எடுத்துக்கொண்ட செல்பி படமும் சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் அதிகளவில் பகிரப்பட்டது. விஜய் ரசிகர்களும் இதை பகிர்ந்து மகிழ்ச்சி தெரிவித்து வந்தனர். இதன் தொடர்ச்சியாக வெளியான வாரிசு டிரைலர் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. அதை தாண்டி விமர்சனங்களும் வந்தன.

வாரிசு ரிலீஸ்
இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று உள்ளது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் வாரிசு திரைப்படம் பொங்கலை முன்னிட்டு உலகம் முழுவதும் இன்று அஜித்தின் துணிவு படத்துடன் வெளியாகி உள்ளது. தெலுங்கில் வாரசுடு என்ற பெயரில் தயாராகி உள்ள இந்த படம் 14 ஆம் தேதி வெளியாகி உள்ளது.

செல்லம்மா சீரியல்
இந்த நாளில் வாரிசு மற்றும் துணிவு படத்துக்கு இருக்கும் மக்களின் எதிர்பார்ப்பை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் வகையில் விஜய் டிவியின் செல்லம்மா சீரியலில் வாரிசு என்று வரும் புரோமோ இன்று வெளியிடப்பட்டு உள்ளது. அந்த புரோமோவின் பின்னணியில் தீ தளபதி என்ற வாரிசு படத்தின் பாடலுடைய இசையும் பயன்படுத்தப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications