விக்ரமுக்கு லேசான நெஞ்சுவலிதான்..வதந்தி பரப்ப வேண்டாம்..சீக்கிரம் டிஸ்சார்ஜ் - மேனேஜர் விளக்கம்
சீயான் விக்ரம் தற்போது நலமுடன் இருக்கிறார், யாரும் வதந்திகளை பரப்ப வேண்டாம் என நடிகர் விக்ரமின் மேலாளர் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார்.
சென்னை: நடிகர் விக்ரம் உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருவதாக தகவல் வெளியானது. அவருக்கு லேசான நெஞ்சுவலிதான் ஏற்பட்டதாக அவரது மேலாளர் விளக்கம் அளித்துள்ளார். விக்ரம் தற்போது நலமுடன் இருக்கிறார், யாரும் வதந்திகளை பரப்ப வேண்டாம் எனவும் அவரது மேலாளர் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார்.
நடிகர் விக்ரம் டிவி சீரியலில் நடித்து மீடியாவில் அறிமுகமானார். என் காதல் கண்மணி படத்தில் அறிமுகமானாலும் தந்துவிட்டேன் என்னை படத்தில் நடித்தார். பாலவின் சேது படம் மூலம் பிரபலமடைந்தார்.
தொடர்ந்து பிதாமகன் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதினை பெற்றுள்ளார். அவர் நடித்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

பொன்னியின் செல்வன்
நடிகர் கோப்ரா, பொன்னியின் செல்வன் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ள நிலையில் அடுத்ததாக இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கும் திரைப்படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டீசர் இன்று மாலை வெளியாகவுள்ளது. இதனை நடிகர் சூர்யா வெளியிடவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

நடிகர் விக்ரம்
56 வயதாகும் விக்ரமுக்கு இன்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள விக்ரமுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிக்சை அளித்து வருவதாக தகவல் வெளியானது. அவரது மாரடைப்பு ஏற்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின. திடீரென நடிகர் விக்ரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நெஞ்சுவலிதான்
சீயான் விக்ரம் தற்போது நலமுடன் இருக்கிறார், யாரும் வதந்திகளை பரப்ப வேண்டாம் என நடிகர் விக்ரமின் மேலாளர் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார். நடிகர் விக்ரமின் மேலாளர் சூர்ய நாராயணன் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "அன்பான ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்கு, சீயான் விக்ரமுக்கு லேசான நெஞ்சு வலி இருந்தது, அதற்காக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அறிக்கைகள் தவறாகக் கூறுவதுபோல் அவருக்கு மாரடைப்பு ஏற்படவில்லை. இது தொடர்பான வதந்திகளைக் கேட்டு வேதனை அடைகிறோம்.

விரைவில் டிஸ்சார்ஜ்
இந்த நேரத்தில் குடும்பத்திற்குத் தேவையான தனிமையை தாருங்கள். நமது அன்பான சீயான் இப்போது நலமாக இருக்கிறார். இன்னும் ஒரு நாளில் அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார். இந்த அறிக்கை தெளிவை அளிக்கும் என்றும், பொய்யான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றும் நம்புகிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications