நீங்க பண்ணது பெரிய விஷயம்! பிரதமர் மோடிக்கு தலை வணங்குகிறேன்! திடீர் அட்டெண்டன்ஸ் போட்ட விஷால்!
சென்னை : தமிழ் திரையுலகில் நடிகர் தயாரிப்பாளர், நடிகர் தயாரிப்பாளர் சங்கங்களின் நிர்வாகி என பல முகங்களை கொண்டுள்ள நடிகர் விஷால் திடீரென தற்போது பிரதமர் நரேந்திர மோடியை தனது ட்விட்டர் பக்கத்தில் புகழ்ந்து தள்ளி இருக்கிறார். என்ன காரணம்? அதன் பின்னணி குறித்து பார்க்கலாம்.
செல்லமே திரைப்படத்தின் மூலம் தமிழ் துறையில் நாயகனாக அவதாரம் எடுத்தவர் நடிகர் விஷால். அந்தப் படம் ஓரளவு ஏ சென்டரில் அவருக்கு வரவேற்பு கொடுத்த நிலையில் சண்டைக்கோழி திரைப்படம் தான் ஏ பி சி என அனைத்து சென்டர்களிலும் ரசிகர்களிடைய நடிகர் விஷால் கொண்டு சென்றது.
அதற்குப் பிறகு அவர் நடித்த சில படங்கள் வெற்றி பெற்ற நிலையில் பல சொதப்பல் படங்களையும் கொடுத்து முன்னணி நடிகர்கள் பட்டியலில் இருந்து சற்றே விலகி இருக்கிறார் விஷால். இருந்த போதும் தற்போது அவர் பெரிதும் எதிர்பார்த்து இருக்கும் படம் லத்தி.

நடிகர் விஷால்
கமிஷனர், அசிஸ்டன்ட் கமிஷனர் என பல வேடங்களில் நடித்து கலக்கிய அவர் தற்போது கான்ஸ்டபிள் வேடத்தில் நடித்திருக்கும் இந்தப்படத்தை அவர் பெரிதும் நம்பி இருக்கிறார். இழந்த தனது மார்க்கெட்டை இப்படம் மீட்டுக் கொடுக்கும் என நம்புகிறார். இந்த நிலையில் அரசியலிலும் ஆர்வம் காட்டி வரும் விஷால் கடந்த முறை ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் சில காரணங்களால் அது கைகூடாமல் இருந்த நிலையில் ஆசையை நடிகர் சங்கம் தயாரிப்பாளர் சங்கத்தின் மூலம் தீர்த்துக் கொண்டார். நடிகர் சங்கம் தயாரிப்பாளர் சங்கம் என இரண்டிலும் போட்டியிட்டு அவர் வெற்றி பெற்றார்.

பிரதமர் நரேந்திர மோடி
இந்த நிலையில் நடிகை ஒருவரை திருமணம் செய்து கொள்வதாகவும் வதந்திகள் வரும் நிலையில் ஆந்திர அரசியலிலும் அவர் இறங்கப் போவதாக யூகங்கள் பரவி வருகிறது. அதற்கெல்லாம் விளக்கம் கொடுக்காமல் தனது படத்தின் பிரமோஷன் பணிகளில் தீவிரம் காட்டி வரும் அவர் தற்போது பிரதமர் நரேந்திர மோடியை வெகுவாக புகழ்ந்து தள்ளி இருக்கிறார்.

புனித பயணம்
காசிக்கு நடிகர் விஷால் அவரது நண்பர் நடிகர் நந்தா மற்றும் சிலருடன் புனித பயணம் மேற்கொண்டு இருக்கிறார். அங்கு கங்கை சுத்தமாக இருப்பதைக் கண்டு நெகிழ்ந்த விஷால் பிரதமர் நரேந்திர மோடிக்கு தலைவணங்குவதாக கூறியிருக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு கங்கையை சுத்தம் செய்ய வேண்டும் என திட்டம் தீட்டினார். கோயில்கள் புதிதாக புனரமைக்கப்பட்டதோடு கங்கையில் கழிவுநீர் கலப்பது தடுக்கப்பட்டதாகவும் தற்போது கங்கை புனிதம் அடைந்திருப்பதாக பாஜகவினர் கூறி வருகின்றனர்.

தலை வணங்குகிறேன்
இந்த நிலையில் தான் பிரதமர் நரேந்திர மோடியை தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டியிருக்கிறார் நடிகர் விஷால். இது தொடர்பாக பதிவிட்டுள்ள அவர்,"அன்புள்ள மோடி ஜி, நான் காசிக்குச் சென்றேன். அற்புதமான தரிசனம் / பூஜை செய்து, கங்கை நதியின் புனித நீரை தொட்டேன். கோவிலை புதுப்பித்து, அதை இன்னும் அற்புதமாகவும், எளிதாக எவரும் தரிசனம் செய்வதற்காக நீங்கள் செய்த மாற்றத்திற்காக கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக. உங்களுக்கு தலை வணங்குகிறேன். வணக்கம்" என பதிவிட்டுள்ளார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
அவருக்கும் சேர்த்தே வேலை பார்ப்பேன்.. நடிகர் விஷால் விமர்சனத்திற்கு ராஜ்மோகன் பதில்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications