தமிழக பாஜகவின் துணைத் தலைவரான நடிகை குஷ்பு.. நயினார் நாகேந்திரன் வெளியிட்ட அறிவிப்பு!
சென்னை: தமிழக பாஜகவின் துணைத் தலைவராக நடிகை குஷ்பு நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழக பாஜகவுக்கு புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், 14 பேர் துணைத் தலைவர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் சசிகலா புஷ்பா, விபி துரைசாமி, கரு நாகராஜன், பால் கனகராஜ் உள்ளிட்டோரும் துணைத் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஏப்ரல் மாதம் தமிழக பாஜகவின் புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றார். அதன்பின் தமிழக பாஜகவுக்கான புதிய நிர்வாகிகளைத் தேர்வு செய்ய நயினார் நாகேந்திரனுக்கு அறிவுறுத்தப்பட்டது. சட்டசபைத் தேர்தல் நெருங்குவதால் பெரியளவில் மாற்றங்கள் தேவையில்லை என்றும் அமித்ஷா தரப்பில் அறிவுறுத்தப்பட்டதாகக் கூறப்பட்டது.

இதன்பின் தனது பரிந்துரைகளை எடுத்துக் கொண்டு பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டாவை சந்தித்தார். இந்த நிலையில் தமிழக பாஜகவின் புதிய நிர்வாகிகள் நியமனம் தொடர்பான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதன்படி தமிழக பாஜகவின் துணைத் தலைவர்களாக 14 பேரும், அமைப்புச் செயலாளராக கேசவ விநாயகமும், பொதுச்செயலாளர்களாக 5 பேரும், மாநிலச் செயலாளர்களாக 15 பேரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இதில் மாநில துணைத் தலைவர்களில் ஒருவராக நடிகை குஷ்புவும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் விபி துரைசாமி, கேபி ராமலிங்கம், கரு நாகராஜன், சசிகலா புஷ்பா, பால் கனகராஜ் உள்ளிட்டோரும் துணைத் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மாநில பொதுச்செயலாளர்களாக பொன் வி பாலகணபதி, ராம ஸ்ரீனிவாசன், முருகானந்தம், கார்த்தியாயினி, ஏபி முருகானந்தம் உள்ளிட்டோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மாநிலச் செயலாளர்களாக கராத்தே தியாகராஜன், வினோஜ் பி செல்வம், அஸ்வத்தாமன், அமர்பிரசாத் ரெட்டி உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் பொருளாளராக எஸ்ஆர் சேகர், மாநில இளைஞரணி தலைவராக எஸ்ஜி சூர்யா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த பட்டியலைத் தேசிய பாஜக தலைவர் ஜேபி நட்டாவின் ஒப்புதலோடு வெளியிடுவதாகத் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
2020ஆம் ஆண்டு அக்டோபரில் நடிகைன் குஷ்பு பாஜகவில் இணைந்தார். இதன்பின் பாஜக தரப்பில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக குஷ்பு தேர்வு செய்யப்பட்டார். இதன் பதவிக் காலம் முடிவடைந்த நிலையில், தற்போது பாஜக துணைத் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். நடிகை குஷ்புவுக்கு பதவி அளிக்கப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியில் இருந்து வந்த விஜயதாரணிக்கு இதுவரை எந்தப் பதவியும் பாஜக தரப்பில் அளிக்கப்படாதது பேசுபொருளாகி இருக்கிறது.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications