பிளாஸ்டிக் சர்ஜரி செய்து இப்படி மாறனுமா? குஷ்புவை சீண்டிய ரேகா! அவரே கொடுத்த நெத்தியடி பதில பாருங்க!
சென்னை : நடிகையும் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினருமான குஷ்பூ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவுக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்து இப்படி தோற்றத்தை மாற்ற வேண்டுமா என கேட்ட ரசிகருக்கு காரசாரமாக பதிலடி கொடுத்துள்ளார். தற்போது அந்த கமெண்ட் சமூக வலைதளங்களை பேசுபொருளாக மாறி இருக்கிறது..
குஷ்பூ என்ற பெயரை தற்போது வரை யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க மாட்டார்கள் 190களில் தொடங்கி கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு மேலாக தமிழ் துறையில் தனக்கென தனி இடத்தை பெற்றுள்ளார் குஷ்பூ.
சின்னத்தம்பி படம் தொடங்கி அண்ணாமலை, நாட்டாமை, என தமிழில் பல பிளாக்பாஸ்டர் ஹிட் படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். ஒரு நடிகைக்கு கோவில் கட்டியது என்றால் அது நடிகை குஷ்புவுக்கு மட்டும் தான்.

நடிகை குஷ்பு
அந்த அளவுக்கு ஆயிரக்கணக்கான ரசிகர்களின் மனதில் கனவுக் கன்னியாக வலம் வந்தார். நடிகை குஷ்பு சுந்தர்.சி.யின் இயற்பெயர் நகாத் கான். 1980ல் சினிமா துறைக்குள் நுழைந்த அவர், தென்னிந்திய திரையுலகில் மிக முக்கியமான நடிகையாக வலம் வந்தார். ரஜினி, கமல் முதல் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். நாயகியாக கிட்டத்தட்ட 20 வருடங்கள் சினிமா துறையில் குஷ்பு மிக முக்கியமான நடிகையாக கோலோச்சிய அவர், நடிகரும் இயக்குனருமான சுந்தர்.சியை திருமணம் செய்து கொண்டார்.

மிகவும் பிசி
அப்போது சினிமாவுக்கு முழுக்கு போடாமல் தொடர்ந்து நடித்து வந்தார். பல படங்களில் நாயகியாக நடித்து வந்த அவர், பின்னர் அக்கா உள்ளிட்ட கதாபாத்திரங்களை ஏற்று நடித்து திரையுலகில் மீண்டும் ஒரு வலம் வந்தார். மிகவும் பிசியான நடிகையாக இருந்த போதே, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார். தனியார் தொலைக்காட்சியில் அவர் வழங்கிய கேம் ஷோ அப்போதே பலத்த வரவேற்பை பெற்றது.

பாஜக
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் , மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 200க்கும் அதிகமான படங்களில் இவர் நடித்த இவரது திறமை காரணமாக தென்னிந்திய திரை உலகில் முக்கியமான நடிகையாக வலம் வந்தார். சினிமாவில் பிரபலமாக இருந்த குஷ்பூ, பெரியார் மீது இருந்த பற்றால் 2010ல் திமுகவில் இணைந்தார்.அவர் 2014ல் திமுகவை விட்டு வெளியேறி காங்கிரசில் சேர்ந்தார். அதன்பின் காங்கிரசில் இருந்து விலகி 2020ல் பாஜகவில் சேர்ந்தார். தற்போது பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினராக இருக்கிறார் குஷ்பு சுந்தர்.

உடல் எடை குறைப்பு
தீவிர அரசியல், குடும்பம் என பிசியாகவே இருந்தாலும் சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருப்பவர் குஷ்பு. குறிப்பாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அதிக உடல் எடையுடன் இருந்த அவர் தற்போது யோகா உடற்பயிற்சி என கடும் கட்டுப்பாடுகளுக்கு பிறகு தனது உடல் எடையை வெகுவாக குறைத்து ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறியுள்ளார். அந்தப் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட பலரும் வாவ்! சூப்பர்! பிரமாதம்! என சிலாகித்து கமெண்ட் செய்து வருகின்றனர். குறிப்பாக சத்யராஜ் மகள் திவ்யா குஷ்பூ எந்த பதிவை விட்டாலும் முதல் ஆளாக வந்து கமெண்ட் செய்வார்.

பதிலடி
இந்நிலையில் தான் சமூக வலைதளங்களில் புதிய புகைப்படங்களை வெளியிட்ட நடிகை குஷ்புவை கிண்டல் செய்வதாக நினைத்து ஒருவர் பதிவிட அதற்கு அவர் கொடுத்துள்ள காரசார பதிலடி சமூக வலைதளங்களில் விவாதத்தை கிளப்பி இருக்கிறது. அதாவது தனது புதிய புகைப்படத்தை தனது இஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுருந்தார். அதில் ஒருவர் ' பிளாஸ்டிக் சர்ஜரி மற்றும் முகத்தில் மாற்றம் செய்து இப்படி அழகாக காண்பிக்க வேண்டுமா எனக் கேட்டிருந்தார். அதற்கு பதிலடி கொடுத்துள்ள குஷ்பு," பிளாஸ்டிக் சர்ஜரிக்கு நீங்க பணம் கட்டுனீங்களா? வெட்கமா இல்லையா? என கடுமையாக விமர்சித்துள்ளார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications