எப்படியிருந்த நான் இப்படி ஆயிட்டேன்.. என்னால் 10 பேர் இன்ஸ்பயர் ஆனால் போதும்.. குஷ்பு ட்வீட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: உடல் எடையை 20 கிலோ வரை குறைத்துள்ள நடிகை குஷ்பு முன்பிருந்த புகைப்படத்தையும் எடை குறைந்த புகைப்படத்தையும் வெளியிட்டு, எடை குறைத்தவுடன் நான் ஆரோக்கியமாக இருக்கிறேன் என ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

1980களில் கனவுக் கன்னியாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு. அவருக்கு கோயில் கட்டும் அளவுக்கெல்லாம் ரசிகர்கள் இருந்தனர். இன்று அவர் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார்.

அவரது கணவரின் திரைப்படங்களில் மட்டும் கெஸ்ட் ரோல் செய்வார். இந்த நிலையில் 20 ஆண்டுகள் கழித்து அண்ணாத்த படத்தில் குஷ்பு நடித்திருந்தார். இன்றும் ரசிகர்களின் அன்புக்குரியவராக இருக்கும் குஷ்பு, கடந்த சில மாதங்களாக கடுமையாக உடற்பயிற்சி செய்து தனது உடல் எடையை குறைத்துள்ளார்.

குஷ்பு

குஷ்பு

50 வயதாகும் குஷ்பு தனது விடாமுயற்சியால் 20 கிலோ வரை எடை குறைந்து தற்போது 80 களில் பார்த்த குஷ்புவை போல் இருக்கிறார். இவர் தனது புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டிருந்தார். இதை பார்த்த ரசிகர்கள் குஷ்புவின் விடா முயற்சியை பாராட்டினர். இன்னும் சில ரசிகர்கள் குஷ்புவுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என கவலையுடன் கேட்கிறார்கள்.

20 கிலோ

20 கிலோ

இவற்றிற்கு பதில் அளிக்கும் வகையில் குஷ்பு இன்றைய தினம் ஒரு ட்வீட்டை போட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில், "எப்படி இருந்த நான் இப்படியாயிட்டேன். 20 கிலோ குறைந்துள்ளேன். மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறேன். நீங்களும் உங்கள் உடல்நலனை பாருங்கள். உடல்நலமே மிக பெரிய செல்வம்.

அக்கறை

அக்கறை

எனது உடல் எடை குறைப்பை பார்த்த சிலர் எனக்கு உடல்நலம் பாதிப்பா என கேட்டுள்ளார்கள். என் மீதான அவர்களது அக்கறைகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என்னை இது போன்று நான் இதுவரை பார்த்தேயில்லை. அத்தனை ஃபிட்டாக உணர்கிறேன். என்னை பார்த்து உடல் எடையை குறைக்க 10 பேர் முன் வந்தால் அது எனக்கு கிடைத்த வெற்றியாகவே கருதுவேன் என தெரிவித்துள்ளார்.

குஷ்புவுக்கு பாராட்டு

குஷ்புவுக்கு பாராட்டு

இவரது ட்வீட்டை பார்த்த ரசிகர்கள் குஷ்புவை பாராட்டியதுடன் எப்படி உடல் எடையை குறைத்தீர்கள் என கேட்டுள்ளார்கள். அதற்கு குஷ்பு , கடின உழைப்பு, அதனுடன் சேர்த்து டயட், இவற்றை கடைப்பிடித்தால் போதும் என்கிறார். குஷ்புவை பார்த்து ஒரு சில ரசிகர்கள் தாங்களும் உடல் எடையை குறைக்க போவதாகவும் அதற்கான உடற்பயிற்சிகளை தொடங்கிவிட்டதாகவும் தெரிவிக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+