மூவ் ஆகாமல் நின்ற பேட்டரி காரால் நயன்தாரா டென்ஷன்! கடைசியில் நடந்த ட்விஸ்ட்! ''கலைஞர் 100'' கலைவிழா!
சென்னை: தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் சென்னையில் நடைபெற்ற ''கலைஞர் 100'' கலை விழாவில் கலந்து கொள்ள வந்த நடிகை நயன்தாரா, மூவ் ஆகாமல் நின்ற பேட்டரி காரால் டென்ஷன் ஆனார்.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம், தமிழ்நாடு திரைப்பட நடப்பு விநியோகஸ்தர்கள் சங்கம், தமிழ்நாடு திரைப்பட திரையரங்க உரிமையாளர்கள் சங்கம், தமிழ்நாடு திரைப்பட Multiplex Association, என பல சங்கங்கள் ஒன்று சேர்ந்து, கருணாநிதி நூற்றாண்டு விழாவை ஒட்டி ''கலைஞர் 100'' கலைவிழா நிகழ்ச்சியை நேற்று மாலை நடத்தியது.

இதில் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் திரைத்துறையை சேர்ந்த முன்னணி நடிகர், நடிகைகள் பலர் கலந்துகொண்டனர். அந்த வகையில் ''கலைஞர் 100'' கலை விழாவில் நடிகை நயன்தாராவும் கலந்துகொண்டார்.சென்னை கிண்டி மெட்ராஸ் ரேஸ் மைதானத்தில் நிகழ்ச்சி நடைபெற்றதால் விவிஐபிக்கள் அனைவரும் கார் பார்க்கிங் இடத்திலிருந்து மேடை அருகே வரை பேட்டரி கார் மூலம் அழைத்துச் செல்லப்பட்டனர்.
அந்த வகையில் நடிகை நயன்தாராவும் கார் பார்க்கிங் இடத்திலிருந்து பேட்டரி கார் மூலம் மேடைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். முன்னதாக நடிகை நயன்தாரா பேட்டரி காரில் ஏறி அமர்ந்தும் அங்கிருந்து அந்த வாகனம் நகராமல் நின்றதால் அவர் டென்ஷன் ஆனார். இருப்பினும் அவர் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. பேட்டரி கார் உடனடியாக புறப்படாததற்கு காரணம், நயன்தாரா அமர்ந்திருந்த இருக்கை அருகே இன்னொரு இடம் காலியாக இருந்ததால் அதில் ஒரு விஐபியை அழைத்துச் செல்லலாம் என்பதேயாகும்.
அந்த நேரம் பார்த்து நடிகை சோனியா அகர்வால் அங்கு வந்ததால் அவர் நயன்தாரா அருகே பேட்டரி காரில் அமர வைக்கப்பட்டார். இதையடுத்து அந்த வாகனம் மேடை நோக்கி புறப்பட்டுச் சென்றது. இந்த நிகழ்வு அங்கு சிறிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications