தனுஷ் மதிப்பை கெடுக்க வேண்டும் என்று திட்டம் போட்டு குற்றச்சாட்டு? திரை பிரபலம் சொல்வதை பாருங்கள்
சென்னை: தனுஷின் மதிப்பை கெடுக்க வேண்டும் என்ற திட்டம் போட்டு நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் குற்றம்சாட்டியுள்ளதாக வலைபேச்சு பிஸ்மி தெரிவித்துள்ளார். நானும் ரவுடிதான் என்ற படக்காட்சிகளை பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்குமாறு நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் நேரடியாக தனுஷை கேட்கவே இல்லை என்றும் கூறப்படுகிறது.
நடிகை நயன்தாரா- விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை 9 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு உயிர், உலகம் என இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் நயன்தாரா- விக்னேஷ் சிவனின் திருமணம் குறித்து ஆவணப்படம் ஒன்று நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வரும் 18ஆம் தேதி வெளியாகவுள்ளது. நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் நானும் ரவுடிதான் படத்தில் பணியாற்றிய போதுதான் காதல் ஏற்பட்டது.
அதாவது அந்த படத்தின் தயாரிப்பாளர் தனுஷ், இயக்குநர் விக்னேஷ் சிவன், ஹீரோயின் நயன்தாரா, ஹீரோ விஜய் சேதுபதி என்பதால் இந்த ஆவணப் படத்தில் அந்த படக்காட்சிகளை பயன்படுத்த நயன்தாரா தரப்பு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
இந்த நிலையில் அண்மையில் வெளியான ஆவணப்படத்தின் டிரெய்லரில் அந்த காட்சிகள் 3 வினாடி வெளியாகியுள்ளது. இதை பார்த்த தனுஷ், தன்னிடம் அனுமதி இன்றி பயன்படுத்தியதாக நடிகை நயன்தாராவுக்கு ரூ 10 கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இதற்கு நயன்தாரா காட்டமான அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் தனுஷின் பிம்பத்தை சிதைப்பது போல் பேசியுள்ளார். மேலும் பொதுவெளியில் போல் நிஜ வாழ்க்கையிலும் நல்லவராக இருங்கள், உங்களை போல் சினிமா பின்னணியில் நான் வந்தவள் இல்லை என்றெல்லாம் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அது போல் விக்னேஷ் சிவனும், தனுஷ் மாற வேண்டும் என ஒரு வீடியோவை போட்டுள்ளார். இந்த நிலையில் நயன்தாரா- தனுஷ் மோதல் குறித்து வலைப்பேச்சு சேனலில் பிஸ்மி கூறியிருப்பதாவது: நானும் ரவுடிதான் படத்தின் தயாரிப்பாளர் என்ற முறையில் நடிகர் தனுஷிடம் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் கேட்டிருக்கலாம்.
ஆனால் விக்னேஷ் சிவன் ஒரு பெரிய வேலை பார்த்துவிட்டார், அதாவது தனுஷின் மேனேஜர், விக்னேஷ் சிவனுக்கு நெருங்கிய நண்பர். அவருக்கு போனை போட்ட விக்னேஷ் சிவன், நானும் ரவுடிதான் பாடல் காட்சிகளை எங்கள் திருமண ஆவணப்படத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம் என வுண்டர்பார் தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ மெயில் ஐடியில் இருந்து ஒரு மெயில் அனுப்புமாறு கேட்டுள்ளார்.
அதற்கு அந்த மேனேஜர் எந்த பதிலையும் அனுப்பவில்லை. பிறகு 4 நாட்கள் கழித்து மீண்டும் அந்த மேனேஜரை தொடர்பு கொண்ட விக்னேஷ் சிவன், தனக்கு மெயில் வரவில்லை என்பது குறித்து கேட்டுள்ளார். அதற்கு மேனேஜர், "தனுஷ் சாரிடம் கேட்டுவிட்டு சொல்கிறேன்" என சொன்னதற்கு அவரிடம் எதற்காக கேட்க வேண்டும் என கேட்டுள்ளார்.
ஆனாலும் அந்த மேனேஜர் உஷாராக மெயில் அனுப்பாமல் தனுஷிடம் சொல்லிவிட்டாராம். இதற்கு தனுஷ் அதெல்லாம் கொடுக்க முடியாது என சொல்லிவிட்டாராம். இதையடுத்து தனுஷிக்கு நிறைய பேர் போன் செய்து விக்னேஷ் சிவன், நானும் ரவுடிதான் படக்காட்சிகளை பயன்படுத்திக் கொள்ள கேட்டாராமே, அது கொடுத்துவிடுங்களேன் என்றெல்லாம் நிறைய பேர் அழுத்தம் கொடுக்க தொடங்கினராம்.
தனுஷ் மசியவில்லை என்பதால் உங்கள் இமேஜை காலி செய்ய நாங்கள் உண்ணாவிரதம் இருக்க போகிறோம் என நயனும் விக்கியும், தனுஷை மிரட்டியதாக தெரிகிறது. இதனால் தனுஷ் மேலும் கடுப்பாகிதான் அந்த காட்சிகளுக்கு அனுமதி கொடுக்கவே கூடாது என்பதால் தற்போது வக்கீல் நோட்டீஸ் விடுத்துள்ளதாக பிஸ்மி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications