காங்கிரஸில் இணைகிறாரா நடிகை த்ரிஷா?.. ராங்கி பட விழாவில் "குந்தவை" சொன்ன முக்கிய தகவல்!
சென்னை: நடிகை த்ரிஷா காங்கிரஸ் கட்சியில் இணைந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கவுள்ளதாக வெளியான தகவல்களுக்கு அவரே பதில் அளித்து தெளிவுப்படுத்தியுள்ளார். மேலும் தன்னிடம் யாரும் திருமணம் எப்போது என்ற கேள்வியை கேட்க கூடாது என தான் விரும்புவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
திரைத்துறையில் நடிகைகள் உச்சத்தில் இருந்து பல கோடி சம்பளத்தை பார்க்கிறார்கள். பிறகு அவர்களுக்கு வாய்ப்புகள் ஏதும் கிடைக்காவிட்டால் உடனே ஒரு தொழிலதிபரை திருமணம் செய்து கொள்கிறார்கள். இதற்கு ஏராளமான உதாரணங்கள் உள்ளன.
இவ்வாறு திருமணம், குழந்தை என செட்டிலான நடிகைகள் அரசியலுக்கும் வர செய்கிறார்கள். அந்த வகையில் குஷ்பு, நமீதா, காயத்ரி ரகுராம், ஹேமமாலினி, ஊர்மிளா உள்ளிட்ட நடிகைகளை கூறலாம்.

ஆக்டிவ்
தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக ஆக்டிவில் இருந்து வந்த நடிகை த்ரிஷா, சில ஆண்டுகளாக வாய்ப்பில்லாமல் இருந்தார். 96 எனும் படத்திற்கு பிறகு வெளிவந்த த்ரிஷாவின் படங்கள் தோல்வி அடைந்தன. திருமணமும் செய்து கொள்ளாத திரிஷாவின் சினிமா கேரியர் முடிவுக்கு வந்துவிட்டதாக பேசப்பட்டு வந்தன.

பொன்னியின் செல்வன்
இந்த நிலையில்தான் அவர் பொன்னியின் செல்வன் பாகம் 1 இல் குந்தவை எனும் கதாபாத்திரத்திற்கு ஒப்பந்தமானார். இந்த படம் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியிடப்பட்டது. இதில் சிறப்பாக தனது நடிப்பை வெளிப்படுத்தி தன்னை விமர்சித்தவர்களின் வாயை அடைத்தார். இந்த திரைப்படத்திற்கு பிறகு திரிஷாவின் மார்க்கெட் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது.

தளபதி 67
இதனால் அவருக்கு விஜய் , அஜித் உள்ளிட்டோருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. விஜய்யின் தளபதி 67 படத்திலும் அஜித்தின் ஏகே 62 படத்திலும் த்ரிஷாதான் ஹீரோயின். இந்த நிலையில் திரிஷா நடிப்பில் உருவாகி நீண்ட நாட்களாக வெளியே வராத படமாக இருந்த ராங்கி திரைப்படம் தற்போது ரிலீஸாக உள்ளது. ஏ.ஆர். முருகதாஸ் கதை எழுதியுள்ள இந்த படம் வரும் 30-ஆம் தேதி வெளியாகிறது.

ராங்கி பட புரமோஷன்
ராங்கி படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் திரிஷா பிஸியாக இருக்கிறார். அதே வேளையில் தன்னை பற்றிய சர்ச்சைகள் குறித்தும் பதில் அளித்து வருகிறார். அந்த வகையில் த்ரிஷா அரசியலுக்கு வருவதாகவும் அவர் காங்கிரஸில் இணைந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கவுள்ளதாக செய்திகள் வெளியாகின.

முதல்முறையாக அரசியலுக்கு வரும் த்ரிஷா
முதல்முறையாக அரசியலுக்கு வரும் த்ரிஷா, பாஜகவில் இணையாமல் குத்துயிரும் குலை உயிருமாக உள்ள காங்கிரஸில் இணைகிறாரே என பலர் விமர்சித்திருந்தனர். குஷ்பு காங்கிரஸில் இருந்து பாஜகவில் இணைந்தார். அது போல் காங்கிரஸில் உள்ள நக்மா மாநிலங்களவை உறுப்பினர் பதவி தனக்கு கிடைக்காதது குறித்து அதிருப்தி தெரிவித்திருந்தார்.

ஏன் காங்கிரஸில் இணைகிறார்
அப்படியிருக்கும் போது த்ரிஷா ஏன் காங்கிரஸில் இணைகிறார், தேவையில்லாமல் அரசியல் பயணத்தில் தோற்க போகிறார் என்றெல்லாம் பேச்சுகள் எழுந்தன. இந்த நிலையில்தான் இதுகுறித்து த்ரிஷா விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில் நான் அரசியலில் நுழைய போவதாக வந்த தகவல் துளி கூட உண்மையில்லை. எனக்கும் அரசியலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

திருமணம்
அது போல் எப்போது திருமணம் என்கிற கேள்வியை என்னிடம் யாரும் கேட்க கூடாது என நான் விரும்புகிறேன் என திரிஷா கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவை எனக்கு மிகவும் பிடிக்கும். 100 ஆண்டு தமிழ் சினிமா கொண்டாட்டத்தின் போது விருது கொடுத்தார்கள். ஜெயலலிதாவை பார்க்கும் போது ஒரே ஸ்கூல், ஒரே ஊர் பீலிங் வரும் என்றும் த்ரிஷா தெரிவித்துள்ளார்.
-
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி












Click it and Unblock the Notifications