மாமியார் கனவை நிறைவேற்றிய குஷ்பு! பிரதமர் மோடியை சந்தித்த சுந்தர் சியின் தாய்.. கவனம்பெற்ற போட்டோ
சென்னை: நடிகையும், பாஜகவை சேர்ந்தவருமான குஷ்பு தனது மாமியாரை பிரதமர் மோடியுடன் சந்திக்க வைத்து அவரது கனவை நனவாக்கி உள்ளார். இந்த வேளையில் பிரதமர் மோடி செய்த செயல் அனைவரையும் கவர்ந்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளார். நேற்று முன்தினம் சென்னை வந்த அவர் கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்தார். அதன்பிறகு நேற்று அவர் திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் மற்றும் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் தரிசனம் செய்தார்.

3வது நாளான இன்று பிரதமர் மோடி ராமர் பாலம் இருந்ததாக கூறப்படும் அரிச்சல் முனைக்கு சென்றுள்ளார். அதன்பிறகு தனுஷ்கோடி கோதண்டராமர் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்து பிரதமர் மோடி தரிசனம் செய்ய உள்ளார்.
இந்நிலையில் தான் தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடியை பாஜக நிர்வாகிகள் சந்தித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகையாக இருந்து அரசியலுக்கு வந்த குஷ்பு தனது மாமியாரின் ஆசையை நிறைவேற்றி உள்ளார். தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக இருக்கும் குஷ்பு இயக்குனரும், நடிகருமான சுந்தர் சி-யை திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் சுந்தர் சி-யின் தாயாரும், தனது மாமியாருமான தெய்வானை பிரதமர் மோடியை சந்திக்க குஷ்புவிடம் விருப்பம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து குஷ்பு தனது மாமியார் தெய்வானையுடன் பிரதமர் மோடியுடன் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது பிரதமர் மோடி அவரை வரவேற்று தலைக்குனிந்து கைக்கூப்பி வணங்கியுள்ளார். இதில் பூரித்துப்போன தெய்வானை, பிரதமர் மோடிக்கு ஆசீர்வாதம் செய்து வாழ்த்தி உள்ளார். இந்நிலையில் தான் தனது மாமியார் தெய்வானை சிதம்பரம் பிள்ளை பிரதமர் மோடியை சந்தித்தது பற்றி குஷ்பு தனது எக்ஸ் பக்கத்தில் போட்டோ வெளியிட்டு கூறியுள்ளதாவது:
எனது மாமியார் தெய்வானை சிதம்பரம் பிள்ளைக்கு 92 வயது ஆகிறது. அவர் மோடியை தீவிரமாக பின்பற்றும் நபர். அவருக்கு இத்தகைய மகிழ்ச்சியை அளித்த பிரதமர் மோடிக்கு நன்றி. இந்த மகிழ்ச்சியை சொல்ல வார்த்தைகளே இல்லை. ஒரு முறையாவது அவரைச் சந்திப்பது அவரது விரும்பமாக இருந்த நிலையில் அது நிறைவேறி உள்ளது. இதனால் அவர் உற்சாகமாக இருந்தார்.
உலகில் மிகவும் பிரபலமான அதேநேரத்தில் அதிகம் விரும்பப்படும், போற்றப்படும் தலைவரான பிரதமர் மோடி அவரை மரியாதையுடன் வரவேற்றார். அன்பு மற்றும் பாசத்தோடு கூறிய அவரது வார்த்தை ஒரு மகன் பேசுவதுபோல் இருந்தது. இதனால் தான் இளையவர்கள் முதல் முதியவர்கள் வரை அவரை போற்றுகின்றனர். இதில் ஆச்சரியம் எதுவும் இல்லை. உண்மையில் அவர் ஆசீர்வதிக்கப்பட்டவராகவும், கடவுளின் தேர்வாகவும் இருக்கிறார்'' என தெரிவித்துள்ளார்.
-
அண்ணாமலையின் டெல்லி விசிட்.. ஹெலிகாப்டர் ஏற்பாடு செய்து கொடுத்த பாஜக தலைமை.. பின்னணி என்ன? -
வானதி சீனிவாசனுக்கு திடீர் உடல்நலக்குறைவு.. மருத்துவமனைக்கு ஓடிவந்த அண்ணாமலை..கோவை வடக்கில் ட்விஸ்ட் -
"அந்த 5%.." கேரளாவில் அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத மிக முக்கிய மாற்றம்! காரணம் பாஜக தான்! -
பெண்களுக்கு மாதம் ₹3000.. வேலையில்லாத ஆண்களுக்கும் உதவி தொகை.. மம்தாவை வீழ்த்த அமித் ஷா மெகா பிளான் -
முதல்வர் பதவியை பிடுங்கிய பிறகும் இப்படியா! நிதிஷுக்கு அதிர்ச்சி கொடுத்த பாஜக.. ஜனாதிபதி மூலம் செக் -
பாஜக இல்லாத சட்டமன்றம்.. 5வது சக்தியாக பரகல பிரபாகர் முன்னெடுக்கும் புதிய அரசியல் அலை.. பின்னணி என்ன -
அதிருப்தியில் அண்ணாமலை? தேர்தலில் வாய்ப்பு தராதது ஏன்! பாஜக தலைமை சொன்ன முக்கிய தகவல் -
இப்படி பண்ணா போதும்.. வங்கி கணக்கில் பணம் தேடி வரும்.. செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் செம சான்ஸ் -
துரந்தர் 2.. தமிழ்நாட்டில் தடை செய்ய கோரி வழக்கு தள்ளுபடி ஏன்.. ஐகோர்ட் தீர்ப்பு என்ன -
சாத்தூரில் நயினார் வெல்வாரா? தோற்கடிக்க ஸ்டாலின் 2 முக்கிய ‘மூவ்'.. இதை கவனிச்சீங்களா -
முதலில் தமிழன், அப்புறம் தான் இந்து! மேலூர் பாஜகவை அதிரவிட்ட வார்த்தை.. பின்னணியில் விகே பாண்டியன்? -
கந்தசாமியா.. பழனிசாமியா.. கன்ஃபியூஷ் ஆன அண்ணாமலை.. ஷாக்கான அதிமுக வேட்பாளர்











Click it and Unblock the Notifications