ஜெயிச்சு காட்டிட்டீங்க.. உற்சாகமாக பேசிய ஓபிஎஸ்.. குட் நியூஸ் கொடுத்த வக்கீல்களை பாராட்டி பெருமிதம்!
சென்னை : அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கின் தீர்ப்பிற்குப் பிறகு, அதிமுக ஒருங்கிணைப்பாள ஓ.பன்னீர்செல்வத்தை, அவரது தரப்பு வழக்கறிஞர்கள் நேரில் சந்தித்தனர். அப்போது, சிறப்பான வாதங்களை எடுத்து வைத்து, சாதகமான தீர்ப்பைப் பெற்றுத்தந்த வழக்கறிஞர்களுக்கு பாராட்டு தெரிவித்தார் ஓபிஎஸ்.
Recommended Video
அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம், வைரமுத்து ஆகியோர் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது.
எடப்பாடி பழனிசாமி தரப்பினர் நடத்திய பொதுக்குழுக் கூட்டம் செல்லாது என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது, மேலும், அதிமுகவில் ஜூன் 23க்கு முந்தைய நிலையே நீடிக்கும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
சாதகமான தீர்ப்பு கிடைத்துள்ளதால் ஓபிஎஸ் தரப்பினர் உற்சாகமாகியுள்ளனர். நீண்ட நாட்களுக்குப் பிறகு, ஓபிஎஸ் தரப்புக்கு நல்ல செய்தி கிடைத்திருப்பதால், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

பரபரப்பு தீர்ப்பு
அதிமுக பொதுக்குழு வழக்கில் இன்று தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம், ஜூலை 11ஆம் தேதி நடத்திய பொதுக்குழு செல்லாது. ஜூன் 23ஆம் தேதிக்கு முன் இருந்த நிலையே அதிமுகவில் தற்போது தொடரும். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து பொதுக்குழு பொதுக்குழு கூட்டத்தை நடத்த வேண்டும். தனித்தனியாக கூட்டம் நடத்தக்கூடாது. பொதுக்குழுவினை கூட்ட சட்ட ஆணையரை நியமிக்க வேண்டும். ஆண்டிற்கு ஒரு முறை மட்டுமே பொதுக்குழுவினை கூட்ட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர்களின் வாதம்
இந்த வழக்கின் விசாரணையின்போது, ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர்கள் முக்கியமான வாதங்களை எடுத்து வைத்திருந்தனர். பொதுக்குழு குறித்து தொலைகாட்சி மற்றும் பத்திரிகை மூலமாக தெரிந்து கொள்ளவேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. முறையாக நிகழ்ச்சி நிரல் தயாரித்து உறுப்பினர்களுக்கு நோட்டீஸ் கொடுக்க வேண்டும். அந்த நோட்டீசைதான் பொதுக்குழுவுக்கு வரும் உறுப்பினர்கள் கொண்டு வர வேண்டும் என்று ஈபிஎஸ் தரப்பினருக்கு எதிரான வாதங்களை ஓபிஎஸ் தரப்பு முன்வைத்தது.

முக்கியமான வாதம்
மேலும், ஜூலை 11 பொதுக்குழு கூட்டத்துக்கு அழைப்பு விடுத்த நிரந்தர அவைத்தலைவர் என அறிவிக்கப்பட்ட தமிழ்மகன் உசேன், ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரால் நியமிக்கப்பட்டவர் அல்ல. இரு பதவிகளும் காலாவதி ஆகிவிட்டதாக கூறுகின்றனர். ஆனால் அவைத் தலைவரை நிரந்தரமாக நியமிப்பதற்கு முன்மொழிந்தபோது இணை ஒருங்கிணைப்பாளர் என்றே எடப்பாடி பழனிசாமியை அழைத்ததற்கு வீடியோ ஆதாரங்கள் உள்ளன என்றும் ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் வாதங்களை எடுத்து வைத்திருந்தார்.

வக்கீல்கள்
இந்நிலையில் தான் இந்த வழக்கில் இன்று ஓபிஎஸ் தரப்புக்கு சாதகமான தீர்ப்பு கிடைத்துள்ளது. இதையடுத்து, ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் திருமாறன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், "இது எங்கள் தரப்பு நியாயத்திற்கு ஜெயலலிதா ஆசியுடன் கிடைத்த மிகப்பெரிய வெற்றி. அதிமுக சட்ட விதிகளுக்கு கிடைத்த வெற்றி. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் எடுத்து வைத்த வாதங்களுக்கு வலு சேர்க்கும் விதமாக இந்தத் தீர்ப்பு அமைந்துள்ளது." எனத் தெரிவித்தார்.

பாராட்டிய ஓபிஎஸ்
சாதகமான தீர்ப்பு கிடைத்த நிலையில், தனது தரப்பு வழக்கறிஞர்கள் அனைவரையும் வீட்டுக்கு வரச் சொன்ன ஓ.பன்னீர்செல்வம், சிறப்பான வாதங்களை முன்வைத்து வெற்றியை ஈட்டித் தந்ததற்குப் பாராட்டு தெரிவித்துள்ளார். நீண்ட சட்டப் போராட்டத்தில் ஈடுபட்டு, வழக்கையை திருப்பிப் போட்டு, சாதகமான தீர்ப்பைப் பெற்றுத் தந்த அனைவரையும் பாராட்டிய ஓபிஎஸ், அவர்களுடன் மகிழ்ச்சியாக புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

மகிழ்ச்சியாகப் பேசிய பன்னீர்செல்வம்
மேலும், நீதிபதியை மாற்றுமாறு தொடர்ந்து நாம் கேட்டதற்கு பலன் கிடைத்திருக்கிறது. சிறப்பான சட்ட வல்லுநர்கள் நம் பக்கம் இருந்ததால் தான் வென்றிருக்கிறோம். இனி அவர்கள் எங்கு சென்றாலும், இதேபோல சிறப்பாகச் செயல்பட்டு நியாயத்தை நிலைநாட்ட வேண்டும். அதிமுக பழைய நிலைக்கு வர வேண்டும். மீண்டும் ஆலோசிப்போம் என தனது தரப்பு வழக்கறிஞர்களிடம் ஓபிஎஸ் கூறியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
-
அதிமுக வேட்பாளர் பட்டியல்.. தொகுதி மாறிய முக்கிய தலைகள்.. மாஜி அமைச்சர்கள் புதிய வியூகம்! -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
"தாமரை சின்னத்தில் தமாகா 1 சீட் கூட ஜெயிக்காது”.. ஜி.கே.வாசன் முடிவுக்கு எதிராக கொதித்த நிர்வாகிகள்! -
ஷாக்கில் சரவணன்! எடப்பாடிக்காக விழுந்து விழுந்து வேலை பார்ப்பாரே அவரா? பாஜக விஐபிகள் மெகா ஸ்கெட்ச் -
அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்.. எடப்பாடி முதல் 23 பேர் களமிறங்கும் தொகுதிகள் அறிவிப்பு -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. சாத்தூர், ராஜபாளையம் தொகுதியில் ராஜேந்திர பாலாஜி செய்த சம்பவம்! -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
அதிமுக கூட்டணியில் வெளியேறும் பூவை ஜெகன்மூர்த்தி? அதிமுகவால் மனவேதனை.. இன்று முக்கிய முடிவு -
எடப்பாடி ரொம்ப மாறிட்டாரே.. இது எதிர்பார்க்காத வேகம்.. அதே ஜெயலலிதா ஸ்டைல்.. கவனிச்சீங்களா? -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
களம் இப்போதான் சூடுபிடிக்குது..முதல் ஆளாக பிரச்சாரத்துக்கு கிளம்பிய எடப்பாடி! ரேசில் முந்தும் அதிமுக












Click it and Unblock the Notifications