Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரெடியா இருந்த போலீசார்.. யாருமே வரல.. பதுங்கிய ஓபிஎஸ் ஆதரவாளர்கள்.. தலையே காட்டாத மா.செக்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த மோதல் தொடர்பாக ஓபிஎஸ் ஆதரவாளர்களிடம் இன்று விசாரணை நடத்த ராயப்பேட்டை போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர். விசாரணை நடத்த போலீசார் தயாராக இருந்த நிலையில் ஒருவர் கூட இன்று ஆஜராகவில்லை.

ஜூலை 11-ஆம் தேதி அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்ற அதேநேரத்தில், அதிமுக தலைமை அலுவலகத்திற்கு ஓபிஎஸ் சென்ற நிலையில் அலுவலகம் முன்பே இருதரப்புக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது.

இந்த வன்முறை தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் 60 பேரை விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு ராயப்பேட்டை போலீஸார் சம்மன் அனுப்பினர். ஆனால், இன்று ஒருவர் கூட ஆஜராகவில்லை.

அதிமுக பொதுக்குழு

அதிமுக பொதுக்குழு

கடந்த ஜூலை 11ஆம் தேதி பரபரப்பான சூழலில் அ.தி.மு.க பொதுக்குழு கூட்டம் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் ஏற்பாட்டில் வானகரத்தில் கூடியது. அதேநேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் அவரது ஆதரவாளர்களுடன் புறப்பட்டு ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்குச் சென்றார். அதற்கு முன்பாகவே அதிமுக தலைமை அலுவலகத்தில் ஈபிஎஸ் ஆதரவாளர்கள் குவிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் அலுவலகத்திற்கு பூட்டுப் போட்டனர்.

அட்டகாசம்

அட்டகாசம்

இதனையடுத்து கட்சி அலுவலகம் முன்பு ஈபிஎஸ்-ஓபிஎஸ் தரப்பினர் கடுமையாக மோதிக்கொண்டனர். இது பெரும் வன்முறையாக மாறியது. இரு தரப்பினரும் உருட்டுக் கட்டைகள் மற்றும் கற்கள் கொண்டு மாறி மாறித் தாக்கிக் கொண்டனர். அதிமுக தலைமை அலுவலகத்தின் கதவுகள் பூட்டப்பட்டிருந்த நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கதவுகளை அடித்து உடைத்து உள்ளே சென்றனர். அலுவலகத்திற்குள் புகுந்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அங்கிருந்த மேஜை, நாற்காலிகளை அடித்து உடைத்து சூறையாடினர்.

பூட்டி சீல்

பூட்டி சீல்

இந்த மோதலின்போது ஒருவருக்கு கையில் கத்திக்குத்து ஏற்பட்டது. அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கல்வீச்சு, உருட்டுக்கட்டை மோதல் சம்பவங்களால் அதிமுக தலைமை அலுவலகமே போர்க்களமானது. வானகரத்தில் பொதுக்குழு தொடங்கிய நேரத்தில் ராயப்பேட்டை ரத்தக்களறியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அங்கு வெடித்த வன்முறையை அடுத்து அதிமுக தலைமை அலுவலகத்தை வருவாய்த்துறையினர் பூட்டி சீல் வைத்தனர்.

400 பேர் மீது வழக்குப்பதிவு

400 பேர் மீது வழக்குப்பதிவு

இந்த மோதலில் போலீஸார், பொதுமக்கள், கட்சித் தொண்டர்கள் என 47 பேர் காயமுற்றனர். 2 தனியார் பேருந்துகள், கார், பைக்குகள் சேதப்படுத்தப்பட்டன. இதுதொடர்பாக ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆதரவாளர்கள் 400 பேர் மீது ராயப்பேட்டை போலீசார் 7 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர். வன்முறை சம்பவம் தொடர்பான வீடியோவை ஆய்வு செய்து மோதலில் ஈடுபட்ட நபர்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக முதற்கட்டமாக 14 பேர் கைது செய்யப்பட்டனர்.

 60 பேருக்கு சம்மன்

60 பேருக்கு சம்மன்

இந்நிலையில், ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலக மோதல் சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 30 பேர்- ஈபிஎஸ் ஆதரவாளர்கள் 30 பேர் என மொத்தம் 60 பேருக்கு ராயப்பேட்டை போலீசார் சம்மன் அனுப்பினர். இன்று காலை ஓபிஎஸ் ஆதரவாளர்களும், நாளை ஈபிஎஸ் ஆதரவாளர்களும் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

மிஸ்ஸிங்

மிஸ்ஸிங்

இதில், சம்மன் அனுப்பப்பட்டுள்ள அதிமுக நிர்வாகிகள் சிலர் தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகிறது. அதிமுக தலைமை அலுவலக கலவரம் தொடர்பாக கைது செய்யப்படலாம் என்பதால், தலைமறைவாக இருந்து முன் ஜாமீன் பெறுவதற்காக நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். சென்னையைச் சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் சிலர் கடந்த சில நாட்களாக வெளியில் தலைகாட்டவில்லை என்றும் கூறப்படுகிறது.

 எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் கூட

எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் கூட

சென்னையில் நடைபெறும் கூட்டங்கள் அனைத்திலும் சென்னையைச் சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் பங்கேற்பது வழக்கம். அவர்களே கூட்டத்திற்கான ஏற்பாடுகளைச் செய்வார்கள். ஆனால், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற எம்.எல்.ஏக்கள் கூட்டத்தின்போது கூட சென்னையைச் சேர்ந்த எடப்பாடி பழனிசாமி ஆதரவு மாவட்ட செயலாளர்கள் விருகை ரவி, தி.நகர் சத்யா உள்ளிட்டோரின் தலைகள் தென்படவில்லை.

ஆஜராகவில்லை

ஆஜராகவில்லை

போலீஸ் விசாரணைக்கு ஆஜராகவேண்டிய ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 30 பேர் இன்று ராயப்பேட்டை காவல்நிலையத்தில் ஆஜராகவில்லை. அவர்களும் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்துள்ளனர். இதனால் எந்தநேரமும் கைது செய்யப்படலாம் என்பதால் தலைமறைவாக உள்ளனர். விசாரணைக்காக ஆஜராவார்கள் என ராயப்பேட்டை போலீசார் தயார் நிலையில் இருந்த நிலையில், யாருமே வராததால் ஏமாற்றமடைந்தனர். விரைவில் அவர்களை கைது செய்வதற்கான தேடுதல் வேட்டை தொடங்கும் எனக் கூறப்படுகிறது.

நிபந்தனை ஜாமீன்

நிபந்தனை ஜாமீன்

இதற்கிடையே, அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக கைதான 14 ஈபிஎஸ் ஆதரவாளர்களுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் 15 நாட்களுக்கு பொன்னேரி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+