அதிமுக கோஷ்டி மோதல்.. ஓ பன்னீர் செல்வம் மீது வழக்கு.. 7 பிரிவுகள் என்னென்ன தெரியுமா? முழுவிபரம்
சென்னை: சென்னை அதிமுக தலைமை அலுவலகம் தொடர்பாக நடந்த கோஷ்டி மோதலில் ஓ பன்னீர் செல்வம், வைத்திலிங்கம் உள்ளிட்டவர்கள் மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த பிரிவுகள் என்னென்ன என்பது பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
அதிமுகவில் உள்கட்சி பிரச்சனை நடந்து வருகிறது. அதிகாரத்தை யார் கைப்பற்றுவது என்பதில் எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர் செல்வம் இடையே போட்டி நடந்து வருகிறது. தற்போது இரட்டை தலைமை உள்ள நிலையில் எடப்பாடி பழனிச்சாமியை கட்சியின் பொதுச்செயலாளராக மாற்ற அவரது ஆதரவாளர்கள் முடிவு செய்தனர்.
இதற்காக சென்னை வானகரத்தில் கடந்த மாதம் 11ம் தேதி அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் இருந்து பொதுக்குழு கூட்டப்பட்டது. இதற்கு ஓ பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் செல்லவில்லை.

கோஷ்டி மோதல்
மாறாக அவர்கள் சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகம் சென்றனர். அப்போது அங்கு இருந்த எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்களுக்கும் அவர்களுக்கும் இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இருதரப்பினரும் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கினர். மேலும் கற்களை வீசி தாக்கி கொண்டனர். இதில் போலீஸ்காரர்கள் உள்பட ஏராளமானவர்கள் காயமடைந்தனர். சிலருக்கு மண்டை உடைந்தது.

போலீசில் புகார்
இதையடுத்து அதிமுகவின் தலைமை அலுவலகத்தின் பூட்டை உடைத்து ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் உள்ளே நுழைந்தனர். இதனால் தலைமை அலுவலகம் ஓ பன்னீர் செல்வம் வசமானது. இதனை எடப்பாடி பழனிச்சாமி தரப்பு கடுமையாக விமர்சித்தது. மேலும் பொதுக்குழு முடிந்து அங்கு சென்ற எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர், ஓ பன்னீர் செல்வம் தரப்பினர் மீது பகிரங்கமாக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். சென்னை ராயப்பேட்டை போலீசில் அதிமுக எடப்பாடி கோஷ்டியின் சிவி சண்முகம் ஒரு புகார் கொடுத்தார்.

சிபிசிஐடிக்கு மாற்றம்
அதில் ஓபிஎஸ் உள்ளிட்டோர் சொத்து பத்திரங்கள், கம்ப்யூட்டர்கள், 37 வாகன ஆவணங்கள் உள்ளிட்டவைகளை கொள்ளையடித்துச் சென்றதாக புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையே சென்னை உயர்நீதிமன்றத்தில் சிவி சண்முகம் தரப்பு ஒரு வழக்கை தாக்கல் செய்தது. அதில் அதிமுக அலுவலக வன்முறை தொடர்பான விசாரணையை சிபிஐ அல்லது வேறு அமைப்புக்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டிருந்தது. இம்மனு மீது இன்று விசாரணை நடைபெற்ற போது, அதிமுக அலுவலக வன்முறை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஓபிஎஸ் மீது 7 பிரிவுகளில் வழக்கு
இதன் தொடர்ச்சியாக அதிமுக தலைமை அலுவக வன்முறை தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட 7 பேர் மீது 7 பிரிவுகளில் சென்னை ராயப்பேட்டை போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர். அதாவது இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் 147, 148, 454, 380, 409, 427, 506(2) ஆகிய 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

என்னென்ன பிரிவுகள் என்ன?
அதன்படி ஐபிசி 147 கலவரத்துக்கான தண்டனை, ஐபிசி 148 என்பது கலவரத்துக்காக ஆயுதம் ஏந்துவது, ஐபிசி 454 என்பது நம்பிக்கையை சீர்குலைத்து அத்துமீறி கட்டடத்தை உடைத்தல், ஐபிசி 380 என்பது திருட்டு என்பதாகும். இதுதவிர ஐபிசி 409 என்பது மற்றவரின் சொத்துகள் மீது ஆதிக்கம் செலுத்த முயற்சி செய்தல், ஐபிசி 427 என்பது தனியார் சொத்துக்களுக்கு இழப்பை ஏற்படுத்தல், ஐபிசி 506(2) என்பது கொலை முயற்சியோடு கூடிய மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
-
திடீரென எகிறிய கிரேஸ்.. வன்னியர்களுக்கு அதிக முக்கியத்துவம் தரும் அதிமுக? லிஸ்டை கவனிச்சீங்களா? -
நம்பர் 5.. அடித்து சொல்லும் சர்வேக்கள்! திமுக+ 180 இடங்களை தாண்டுகிறது! அதிமுக ஓவர்? முக்கிய கணிப்பு -
ஸ்டாலின், விஜய் தொகுதிகளை விடுங்க.. ரெக்கார்டு படைக்கும் கரூர்.. தமிழகத்திலேயே அதிக வேட்பாளர்கள்! -
விந்தியா பேசும்போதே குறுக்கே நபர்.. மைக் ரிப்பேர்.. திமுகவையும் திட்டணும்.. கடலூரில் செம டென்ஷன் -
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மேலும் ஒரு வழக்கு.. எங்களுக்கு வேறு வேலை இல்லையா? டென்ஷன் ஆன நீதிபதிகள் -
கண்டுகொள்ளாத அதிமுக 2ம் கட்ட நிர்வாகிகள்.. கலக்கத்தில் ராம ஸ்ரீனிவாசன்.. கொடி பிடிக்க கூட வரலையாம்! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: உங்கள் நகை எப்போது கைக்கு வரும்? முழு விவரம் -
விஜய்யிடம் காசு வாங்கிக்கொண்டு பெரம்பூரில் பாமக போட்டி.. காடுவெட்டி குருவின் மகள் பேச்சு -
ஒரு கிராம் தங்கம் வெறும் ரூ.181 தான்.. முட்டை விலையை விட குறைவு.. எந்த நாட்டில் தெரியுமா? பின்னணி -
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
அலர்ட்..! 10000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினால் 'லாக்'.. ஆர்பிஐ கொண்டு வரும் புது ரூல்ஸ்! -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications