கொந்தளித்த தமிழர்கள்.. “பேக்” அடித்த பிரசார் பாரதி! காரைக்கால் வானொலியில் இந்தி நிகழ்ச்சிகள் ரத்து
சென்னை: காரைக்கால் வானொலி நிலைய எஃப்.எம்-இல் தமிழ் நிகழ்ச்சிகளின் நேரம் குறைக்கப்பட்டு இந்தி நிகழ்ச்சிகளின் நேரம் அதிகரிக்கப்பட்டதற்கு எதிர்ப்புகள் எழுந்த நிலையில், இந்தி நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
மத்திய அரசின் பிரசார் பாரதி நிறுவனம் நாடு முழுவதும் ஆல் இந்தியா ரேடியோ வானொலி சேவையை வழங்கி வருகிறது. அனைத்து மாநிலங்களிலும் செயல்படும் இந்த வானொலி சேவைகள் அந்தந்த மாநில மொழிகளில் செயல்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் சென்னை, தருமபுரி, நாகர்கோவில், காரைக்கால் ஆகிய இடங்களில் வானொலி சேவை செயல்பட்டு வருகிறது. இந்த சூழலில் பல்வேறு மாநில வானொலிகளில் இந்தி திணிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.

காரைக்கால் FM
இந்த நிலையில் காரைக்கால் வானொலி நிலையத்தின் எஃப்.எம்.-இல் ஒலிபரப்பப்பட்டு வந்த தமிழ் நிகழ்ச்சிகளின் நேரத்தை குறைத்து விட்டு, தினமும் 4 மணி நேரம் இந்தி நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. காரைக்கால் வானொலியில் தினமும் காலை 5.-52 முதல் இரவு 11.20 மணி வரை 17.28 மணி நேரம் தமிழ் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்பட்டு வந்தன.

இந்தி திணிப்பு
இந்த நிலையில் முன்னறிவிப்பின்றி, நேற்று முதல் தமிழ் நிகழ்ச்சிகளின் நேரம் குறைக்கப்பட்டது. காலை 9 மணி முதல் 10 மணி வரையிலும், மாலையில் 3 மணி முதல் 5 மணி வரையிலும், இரவில் 9 மணி முதல் 10 மணி வரையிலும் மும்பை விவிதபாரதி நிலையத்தின் இந்தி நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

4 மணி நேரம் இந்தி
இதன் மூலம் காரைக்கால் வானொலியில் தினமும் 4 மணி நேரத்திற்கு இந்தி நிகழ்ச்சிகளை ஒலிபரப்பப்பட்டது. நாடு முழுவதும் ஒரே மாதிரியான நிகழ்ச்சி வடிவமைப்பை கொண்டு வரும் நோக்கத்துடன் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக வானொலி நிலைய அதிகாரிகள் விளக்கமளித்தனர். ஆனால் மத்திய அரசின் பிரசார் பாரதி நிறுவனத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்புகள் வலுத்தன.

பின்வாங்கிய பிரசார் பாரதி
காரைக்கால் வானொலில் இந்தி நிகழ்ச்சியை ரத்து செய்யாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் எச்சரித்தார். இந்த நிலையில் கடும் எதிர்ப்பு காரணமாக காரைக்கால் வானொலி பண்பலை சேவையில் 4 மணி நேரம் ஒலிபரப்பப்படும் இந்தி நிகழ்ச்சிகளை ரத்து செய்வதாக பிரசார் பாரதி அறிவித்து உள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications