Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பொங்கலுக்கு வேட்டி - சேலை.. வழங்காவிடில் அதிமுக களமிறங்கும்.. எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி பொங்கல் பரிசுத் தொகுப்பு, செங்கரும்பு, ரொக்கம் ஆகியவற்றுடன் மக்களுக்கு வேட்டி-சேலையும் வழங்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். அதுமட்டுமல்லாமல் எதிர்க்கட்சியாக இருந்தபோது, ரூ.5,000 வழங்க வேண்டும் என்று திமுக வலியுறுத்தியதை நினைவுபடுத்தியுள்ள எடப்பாடி பழனிசாமி, ரூ.1,000 வழங்கப்படும் ரொக்கத்தை ரூ.5,000ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இதுக்குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தைப் பொங்கலையொட்டி தமிழக மக்களுக்கு திமுக அரசு ரூ.1,000 ரொக்கத்துடன் பச்சரிசி, சர்க்கரை வழங்கப்படும் என அறிவித்தது. இன்றைய முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, பொங்கல் பரிசாக ரூ.5,000 வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியதை நினைவுபடுத்தி, 2023-ஆம் ஆண்டு தைப் பொங்கலுக்கு, பொங்கல் தொகுப்புடன் ரூ.5,000 பொங்கல் பரிசும், ஒரு முழு செங்கரும்பும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டிருந்தேன்.

மேலும், தைப் பொங்கலையொட்டி, தமிழக மக்களுக்கு செங்கரும்பு வழங்காமல் கரும்பு விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் திமுக அரசைக் கண்டித்து, கழக விவசாயப் பிரிவின் சார்பில் 2.1.2023 அன்று திருவண்ணாமலையில் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெறும் என்றும் அறிவித்திருந்தேன். கரும்பு விவசாயிகள் மற்றும் மக்களின் உணர்வுகளுக்கு கழகம் வடிகால் அமைப்பதை உணர்ந்த இந்த அரசு, கோரிக்கையை ஏற்று பொங்கல் தொகுப்பில் கரும்பு வழங்கப்படும் என்ற ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இடைத்தரகர்கள் பிரச்சினை

இடைத்தரகர்கள் பிரச்சினை

அதேபோல், இன்றைய முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது கோரிக்கை வைத்த பொங்கல் பரிசுத் தொகையான ரூ.5,000 வழங்க வேண்டும் என்று திமுக அரசை வலியுறுத்துகிறேன். திமுக ஆட்சியில், கடந்த தைப் பொங்கல் திருநாளுக்கு, கரும்பை விவசாயிகளிடமிருந்து நேரடியாகக் கொள்முதல் செய்யாமல், இடைத்தரகர்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டது. ஒரு கரும்புக்கு சுமார் 32 முதல் 40 ரூபாய் வரை அரசு விலை நிர்ணயம் செய்து இடைத்தரகர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு வழங்கியும், விவசாயிகளுக்கு போய்ச் சேர்ந்தது 12 முதல் 18 ரூபாய் வரை மட்டுமே.

வேட்டி - சேலை பிரச்சினை

வேட்டி - சேலை பிரச்சினை


இதையும் சுட்டிக்காட்டி அறிக்கை வெளியிட்டிருந்தேன். எனவே, வரும் தைப் பொங்கலுக்கு இடைத்தரகர்களிடம் இருந்தும், வியாபாரிகளிடம் இருந்தும், கமிஷனுக்காக கரும்பை வாங்காமல், நேரடியாக செங்கரும்பு விவசாயிகளிடமிருந்து கரும்பை கொள்முதல் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். தலைவலி தீருவதற்குள் வயிற்றுவலி வந்த கதையாக, கரும்பு பிரச்சினை முடிவதற்குள், விலையில்லா வேட்டி-சேலை பிரச்சனை பூதாகரமாக வடிவெடுத்துள்ளதாக செய்திகள் வலம் வருகின்றன.

கால தாமதம்

கால தாமதம்

2023-ஆம் ஆண்டு தைப் பொங்கலுக்கு வழங்க வேண்டிய வேட்டி-சேலை நெய்யும் பணி இந்த ஆட்சியின் அகோர பசியால் முடங்கிப் போயிருப்பதாக நெசவாளர்களும், கூட்டுறவு சொசைட்டிகளைச் சார்ந்தவர்களும் புகார் தெரிவிப்பதாக செய்திகள் வருகின்றன. ஜூலை மாதமே வழங்க வேண்டிய துணி நெய்யும் உத்தரவுகள் அக்டோபர் மாதம் தான் வழங்கப்பட்டுள்ளதாவும், ஆகஸ்ட் மாதத்தில் வழங்கப்பட வேண்டிய நூல் நவம்பர் இறுதியிலும், டிசம்பர் முதல் வாரத்திலும்தான் வழங்கப்பட்டுள்ளது என்றும் செய்திகள் கூறுகின்றன.

தரமற்ற நூல்கள்

தரமற்ற நூல்கள்

மேலும், துணி நெய்வதற்கே உதவாத தரமற்ற நூல்களை அரசு கொள்முதல் செய்து வழங்கி உள்ளதாகவும், துணி நெய்யும்போது தறியில், நைந்துபோன நூல் அறுந்து துண்டு துண்டாக விழுவதால், துணி நெய்ய முடியாமல் நெசவாளர்கள் பரிதவிக்கின்றனர். இதனால், 90 சதவீத நெசவாளர்கள் தங்களுக்கு சப்ளை செய்யப்பட்ட நூல் பேல்களை அரசுக்கே திருப்பி அனுப்பி வருவதாகவும், தரமான நூல் தந்தால் தான் வேட்டி, சேலை தயாரிக்க முடியும் என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளதாக செய்திகள் வருகின்றன.

வேட்டி - சேலை வழங்குக

வேட்டி - சேலை வழங்குக

இதன் காரணமாக, வரும் தைப் பொங்கலுக்கு ஏழை-எளிய மக்கள் அனைவருக்கும் உடுக்க உடை என்ற, எம்ஜிஆரின் கனவுத் திட்டம் பாழாகும் சூழ்நிலையை இந்த அரசு ஏற்படுத்தியுள்ளது. 2023-ஆம் ஆண்டு தைப் பொங்கலுக்கு வேட்டி-சேலை வழங்காவிடில், வேலை இழக்கும் நெசவாளர்களையும், ஏமாற்றப்படும் ஏழை, எளிய மக்களையும் ஒன்றிணைத்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கும் என்று இந்த திமுக அரசை எச்சரிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+