பிளாக் பாக்ஸ் வந்தாச்சு.. ஏர் இந்தியா போயிங் ஃபிளைட்டில் விஷயமே வேறு.. இந்த 4 மேஜர்: பைலட் அசோகன்
சென்னை: விபத்தில் சிக்கிய விமானத்தின் கருப்பு பெட்டியை மீட்டு, விபத்துக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், 265 பேரை பலி கொண்ட விமான விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்க, உயர்மட்ட விசாரணை குழுவை மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைத்துள்ளது... இந்நிலையில், இந்த விமானம் இயங்குவது குறித்து விமானி அசோகன் பேட்டி ஒன்றில் விரிவாக பேசியிருக்கிறார்.
Wow Tamizhaa என்ற யூடியூப் சேனலுக்கு அமெரிக்காவிலிருந்து பேட்டி தந்துள்ள விமானி அசோகன், "கருப்பு பெட்டி தற்போது கிடைத்திருக்கிறது.. ஆனால், விபத்து நடந்து இந்த 24 மணி நேரத்தில் இன்னும் எதுவுமே உறுதியாக சொல்ல முடியவில்லை..

துரிதமாகும் விசாரணை
பொதுவாக விமான விபத்து என்றாலே, அது சம்பந்தமான விசாரணை நடத்தி, ஒரு மாதத்தில் ரிப்போர்ட் வந்துவிடும். ஆனால், இந்த விபத்தில், போயிங் தரப்பு, உட்பட அனைத்து தரப்பினருமே விசாரணையை கையில் எடுத்துவருவதால், இதுசம்பந்தமான அறிக்கை விரைவிலேயே வெளியாகலாம்..
எப்போதுமே விமானத்தில் 2 பைலட்கள் இருப்பார்கள்.. ஒருவர் விமானத்தை ஓட்டுவார், மற்றொருவர் கருவிகளை மானிட்டரிங் செய்வார். மானிட்டரிங் செய்பவர்தான் லேண்டிங் கியரை மேலே கொண்டு போக வேண்டும். மேலே செல்ல ஆரம்பித்ததுமே சக்கரத்துக்கு அங்கு வேலையில்லை.. இது 400 அடியிலேயே நடந்துவிடும்.
பிளாப் என்னாச்சு
ஆனால், இந்த விமானத்தில் வெளியான காட்சியை பார்த்தால், 650 அடி உயரத்தில் பறக்கும்போது, லேண்டிங் கியர் வெளியே இருக்கிறது.. பிளாப் உள்ளேயே இருக்கிறது..
(ஃபிளாப் என்பது, விமானத்தின் இறக்கையின் பின் விளிம்பில் இருக்கும் ஒரு சாதனம் ஆகும். இறங்கும்போது விமானத்தை லிஃப்ட் (lift) செய்யும். ஏறும்போது டிராக் (drag) ஆகியவற்றை கட்டுப்படுத்த பயன்படுகிறது. எனவே ஃபிளாக் என்பது விமானத்தில் முக்கியமான கருவியாகும்)
பிளாப் இல்லாமல் எப்படி டேக்ஆஃப் செய்ய முடியாது.. ஏனென்றால், பிளாப் இல்லாமல் செய்தால், வார்னிங் தந்துவிடும்.. அந்த வார்னிங்கை மீறி பைலட் விமானத்தை இயக்கமுடியாது.. இது நிச்சயம் ஃபிளாப் போட்டுதான் எடுத்துள்ளதாக நான் நினைக்கிறேன்.. இப்படித்தான் கடந்த 2008ம் ஆண்டு பிளாப் போடாமல் இயக்கி, அந்த விமானம் விபத்துக்குள்ளாகிவிட்டது.
2 பைலட்டுகள்
கியர், பிளாப் இரண்டுமே பக்கத்து பக்கத்திலேயே இருக்கும்.,. ஒருவேளை கியர் போடுவதற்கு, ஏதோ ஒரு ஞாபகத்தில் பிளாப்பை மாற்றி இயக்கியிருக்கலாம்.. இதுவும் ஒரு அனுமானம்தான்.. காரணம், பைலட்டும் மனிதர்தான்..
ஒருவேளை தவறி அதை செய்திருந்தால், இந்த விபத்துக்கு பைலட்டுடையதுதான் முக்கியமான காரணமாக இருக்கும்.. 2 பைலட்டுகள் இருந்தாலும், விமானத்தை ஓட்டுபவர்தான் முன்னாடி பார்த்து ஓட்ட வேண்டும். பறவைகள் ஏதாவது வருகிறதா என்று வெளியில்தான் கவனம் செலுத்துவார்.. மற்றொருவர் கியர் உட்பட மற்ற சாதனங்களில் கவனம் செலுத்த வேண்டும்.
4 வழிகளில் விபத்து
பொதுவாக விமான விபத்து என்றால், 4 வழியில் அவைகள் நடக்க வாய்ப்புண்டு.. இதில், பைலட் செய்யும் தவறுகளே விபத்துகளுக்கு 60 முதல் 70 சதவீதம் வரை காரணமாக இருக்கும். இரண்டாவதாக, மெக்கானிக்கல் தவறுக்கு 20 சதவீதம் வாய்ப்பு உள்ளது.
.அடுத்ததாக வானிலை கோளாறு காரணமாக இருக்கலாம்.. இதற்கெல்லாம் குறைவான வாய்ப்புகள்தான் உண்டு.. இறுதியாக, வெடிகுண்டு போன்றவற்றால் விபத்து நடக்கலாம். இந்த விமான விபத்தை பொறுத்தவரை வானிலை காரணமில்லை.. வானம் தெளிவாகவே காணப்பட்டது.. மிச்ச 2 விஷயத்தில்தான் விசாரிக்க வேண்டியிருக்கிறது.
என்ஜின் ஏன் வேலை செய்யவில்லை
இந்த விமானத்தில் என்ஜினும் வேலை செய்யவில்லை.. பறவைகள் சிக்கனால் என்ஜின் சேதமாகும்.. அதிலும், 2 என்ஜினிலும் பெரிய பெரிய பறவைகள் நான்கைந்து சிக்கினால்தான், என்ஜின்கள் கோளாறாகும்.
அல்லது 2 என்ஜின்களுமே எரிபொருள் கிடைக்காமல் போயிருக்கலாம். ஒரு என்ஜின் இல்லாவிட்டாலும் மற்றொன்றை பயன்படுத்த முடியும.. 2 என்ஜினுமே ஒரே நேரத்தில் பழுதாக வாய்ப்பே கிடையாது.. எனவே இந்த விபத்துக்கான காரணங்கள் என்னென்ன என்பது இனிமேல்தான் விசாரணையில் உறுதியாகும். " என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.
-
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன












Click it and Unblock the Notifications