சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சசிகலா மீது அதிமுக போலீசில் புகார்..எடப்பாடி பழனிசாமி சொன்ன சில மணி நேரத்தில்.. அரங்கேறிய காட்சிகள்

Google Oneindia Tamil News

சென்னை: எம்.ஜி.ஆர் நினைவில்லத்தில் கொடியேற்றி அதிமுக பொதுச் செயலாளர் என பொறிக்கப்பட்டிருந்த கல்வெட்டை திறந்த விவகாரத்தில் சசிகலா மீது அதிமுக போலீசி புகார் அளித்துளளது. அதிமுக சார்பாக மாம்பலம் காவல் நிலையத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புகார் அளித்துள்ளார்.

கடந்த 17 ஆம் தேதி எம்.ஜி.ஆர் நினைவு இல்லத்தில் மாலை அணிவித்து சசிகலா மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்தில் அதிமுக கொடியை ஏற்றினார். அங்கிருந்த கல்வெட்டில், அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா என்று பொறிக்கப்பட்டிருந்ததால் எம்ஜிஆர் நினைவு இல்லத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில், சசிகலாவுக்கு எதிராக காவல் நிலையத்தில் அதிமுக புகார் அளித்துள்ளது. சென்னை மாம்பலம் காவல் நிலையத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தரப்பில் சசிகலாவுக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

உ.பி.விமான நிலைய திறப்பு விழா-ராஜபக்சே மகன் சிறப்பு விருந்தினரா? மத்திய அரசின் இழிசெயல்-சீமான் சாடல்உ.பி.விமான நிலைய திறப்பு விழா-ராஜபக்சே மகன் சிறப்பு விருந்தினரா? மத்திய அரசின் இழிசெயல்-சீமான் சாடல்

அரசியல்

அரசியல்

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்று திரும்பிய சசிகலா தீவிர அரசியலிலிருந்து விலகுவதாக அறிவித்ததுடன் சட்டசபை தேர்தலுடன் ஒதுங்கி கொண்டார். ஆனால் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக-வின் தோல்வி, தொடர்நது உள்ளாட்சித் தேர்தலில் படு தோல்வி என, அதிமுக-வின் தொடர் தோல்விகளுக்கு பின்னர், சசிகலா மீண்டும் அரசியலில் களம் இறங்க முடிவு செய்தார்.

பெயர் பலகை சர்ச்சை

பெயர் பலகை சர்ச்சை

அதன்படியே சடிசிகலா தொண்டர்களுடன் பேசும் ஆடியோக்களை வெளியிட்டார். பொன் விழாவை முன்னிட்டு சசிகலா அரசியலை தொடங்கினார். ஜெயலலிதா சமாதியில் அக்டோபர் 16ம் தேதி மரியாதை செலுத்தினார். அப்போது சசிகலா கூறும் போது எனது பாரத்தை இறக்கி வைத்துவிட்டேன்" என்றார். தொடர்ந்து சென்னை தியாகராய நகரில் உள்ள எம்.ஜி.ஆர் இல்லத்தில் கொடியேற்றும் நிகழ்வில் பொருத்தப்பட்டிருந்த கல்வெட்டில், சசிகலா பெயருக்குக் கீழ் அதிமுக கழக பொதுச்செயலாளர் என குறிப்பிடப்பட்டிருந்தது. சசிகலா தற்போது அதிமுக கொடி கட்டிய காரையே பயன்படுத்தினார்.

என்ன சொன்னார்

என்ன சொன்னார்

அதன்பின்னர் தொண்டர்களுக்கு சசிகலா கடிதமும் எழுதினார்.அதில் மக்கள் தந்த மாபெரும் வெற்றியால் அ.இ.அ.தி.மு.க நாடாண்டதையும், அது ஆற்றிய நற்பணிகளையும் சரித்திரம் சொல்லும். நமக்கான புரிதலில் நிலவிய சிக்கலால் எதிரிக்கு இடம் கொடுத்துவிட்டோமே... சிந்தியுங்கள்! எத்தனை எத்தனை இன்னல்களைக் கடந்த புரட்சித்தலைவி அம்மா சென்ற வழியில், தடையின்றி செல்ல உறுதி கொள்வோம். நீங்கள் நினைப்பது புரிகிறது... தொண்டர்களே உங்கள் தூய நெஞ்சம் புரிகிறது. கழகம் காக்கப்படும்... மக்கள் ஒற்றுமை உயிர்பெறும். காலத்துக்காகக் காத்திருப்பவன் ஏமாளி... காலத்தை கைப்பற்றுபவன் புத்திசாலி. அம்மாவின் பிள்ளைகளான நாம் புத்திசாலிகளன்றோ? கரம் கோர்ப்போம்... அம்பாய் பயணிப்போம். இலக்குகளைத் தொடுவோம். அயராது உழைக்க மனம் கொள்வோம்" என்று நீண்ட கடிதமும் எழுதினார்.

Recommended Video

    சசிகலாவுக்கும் அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.... போட்டுத்தாக்கிய எடப்பாடி பழனிசாமி!
    ஜெயக்குமார் புகார்

    ஜெயக்குமார் புகார்

    இதனால் கடும் கோபம் அடைந்துள்ள அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுகவிற்கும் சசிகலாவிற்கு எந்த தொடர்பும் இல்லை என கூறியதுடன், சசிகலா பொதுச்செயலாளர் என கூறிவருவதற்கு சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்போம் என்றும் தெரிவித்தார். இந்நிலையில் எம்.ஜி.ஆர் நினைவில்லத்தில் கொடியேற்றி அதிமுக பொதுச் செயலாளர் என பொறிக்கப்பட்டிருந்த கல்வெட்டை திறந்த விவகாரத்தில் சசிகலா மீது அதிமுக போலீசி புகார் அளித்துளளது. அதிமுக சார்பாக மாம்பலம் காவல் நிலையத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புகார் அளித்துள்ளார்.

    சித்தரிக்க முயற்சி

    சித்தரிக்க முயற்சி

    சசிகலா அதிமுக பொதுச்செயலாளர் பதவி இருந்து பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மறுஆய்வு மனுவையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உச்ச நீதிமன்றம் வரை சென்று அனைத்து உரிமைகோரல்களையும் இழந்துவிட்டதால், இப்போது சசிகலா வேண்டுமென்றே ம சட்டத்தை தன் கைகளில் எடுத்துக்கொண்டிருக்கிறார். அதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் என்று நேர்மையின்றி கூறி பொது அமைதியை மீறுவதாகும். சசிகலா தன்னை அதிமுகவின் பொதுச் செயலாளர் என்று கூறி சித்தரிக்க முயற்சிக்கிறார். சசிகலாவிற்கும் அதிமுக கட்சிக்கு எந்த தொடர்பும் இல்லை என்றாலும், அதிமுகவின் பொதுச் செயலாளராகக் கூறி, முகமூடி அணிந்து கொண்டு, தனது கூட்டாளிகளுடன் கட்சியின் செயல்பாட்டை சீர்குலைக்க முயன்று குழப்பம் ஏற்படுத்துகிறார்.

    சசிகலா மீது புகார்

    சசிகலா மீது புகார்

    கடந்த 17.10.2021 அன்று காலை 11.00 மணியளவில், அந்த சசிகலாவும் தனது உதவியாளர்களுடன் மறைந்த புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி. ராமச்சந்திரனின் நினைவு இல்லத்திற்கு சென்றார். அவர் அதிமுகவின் பொதுச் செயலாளர் என்று குறிப்பிடப்படும் ஒரு நினைவுப் பலகையையும் திறந்துவைத்துள்ளார். இது அதிமுக கட்சியின் உறுப்பினர்களிடையே சட்டம் ஒழுங்கு பிரச்சனை மற்றும் பொது அமைதியை சீர்குலைக்க வாய்ப்புள்ளது. இதன் மூலம் சசிகலா ஐபிசி பிரிவு 419 ன் கீழ் தண்டனைக்குரிய குற்றத்தைச் செய்துள்ளார். அவருக்கு உதவிய நபர்கள் 419r/w பிரிவுகளின் கீழ் தண்டனைக்குரிய குற்றங்களைச் செய்துள்ளனர். சசிகலாவிற்கு எதிராக ஐபிசி 153 ஏ, 419, 505 (பி) உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜெயக்குமார் வலியுறுத்தி உள்ளார்.

    English summary
    aiadmk Complain to the police on Sasikala aiadmk ex minister jayalumar Complain to the police on Sasikala. because sasikala using name of aiadmk general secretary post.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X