Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஸ்டாலின் முதலமைச்சராக தொடர எடப்பாடி உதவி..திண்டுக்கல் சீனிவாசன் அன்னைக்கே சொன்னாரே! புகழேந்தி சுளீர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணித்து இருப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கும் நிலையில் அக்கட்சி தொண்டர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமியின் தேர்தல் புறக்கணிப்பு முடிவுக்கு அதிமுக ஒருங்கிணைப்பு குழு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

பிளவு, வெளியேற்றம், பேச்சுவார்த்தை, மோதல், நீதிமன்ற வழக்கு என பரபரப்பாக இருந்த அதிமுக மக்களவைத் தேர்தல் வரை அமைதியாக இருந்தது. மக்களவைத் தேர்தலில் அக்கட்சி பெரும் தோல்வியை சந்தித்த நிலையில் மீண்டும் மோதல்கள் வெடித்துள்ளது.

Pugazendhi Sasikala Edappadi Palaniswami AIADMK vikravandi assembly by election 2024 2024

ஒன்றுபட்ட அதிமுகவாக இருந்தால்தான் வரும் தேர்தல்களில் வெற்றி பெற முடியும் எனவும் சசிகலா, டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை மீண்டும் கட்சிக்குள் கொண்டு வர வேண்டும் என கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் கோரிக்கை குரல்கள் எழுந்திருக்கின்றன.

இதனிடையே அதிமுகவை ஒன்றிணைக்கப் போகிறோம் என ஓபிஎஸ் தரப்பில் இருந்த புகழேந்தி, ஜேசிடி பிரபாகர் உள்ளிட்டோர் தனி அணியாக அதிமுக ஒருங்கிணைப்பு குழு என்ற ஒன்றை ஆரம்பித்துள்ளனர். இதற்கு இடையே விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஆளும் கட்சியின் ஆதிக்கம் அராஜகம் காரணமாக புறக்கணிப்பதாக அறிவித்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி எந்த நிலையில் தேர்தலை புறக்கணித்ததற்கு அதிமுக ஒருங்கிணைப்பு குழு கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதில்லை என பழனிசாமி எடுத்திருக்கின்ற முடிவு கழகத்தை முற்றிலுமாக அழிக்க முயற்சிக்கும் முடிவாகவும் திராவிட முன்னேற்ற கழகம் தேர்தல் நேரங்களில் அராஜகம் அக்கிரமம் செய்கிறது அதிகாரத்தை பயன்படுத்தி துஷ்பிரயோகம் செய்கிறது வாக்காளர்களுக்கு தேவையானதை கொடுத்து வீடுகளில் வேலைகளை கூட செய்கிறார்கள் என்றெல்லாம் காரணம் சொல்லி தேர்தல் புறக்கணிப்பு என்று சொன்னால் 2026 இல் இதேபோல திமுகவிற்கு பயந்து கொண்டு மொத்தமாக தேர்தலை புறக்கணிக்க தயாராகி விட்டாரா?

திரை மறைவில் இருந்து வேறு கட்சிகளுக்கு உதவி செய்து வந்த பழனிசாமி அவர் உதவி செய்த வந்ததை வெட்ட வெளிச்சம் ஆக்கி விட்டார். மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தேர்தலினை புறக்கணித்து உள்ளார் என்று சொல்வது என்பது சரியானது அல்ல. தொடர்ந்து இடைத்தேர்தலில் கழக சார்பில் வேட்பாளர்கள் நின்றபொழுது ஏற்பட்ட கலவரமான சூழ்நிலை அடிதடி தகராறு போன்ற நிலை ஏற்பட்டது. அதனால்தான் ஒரு இடைத் தேர்தலை புரட்சித்தலைவி அம்மா அவர்கள் புறக்கணித்தார்கள் ஆனால் அதற்கு பின்னால் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் இனி இடைத்தேர்தலில் புறக்கணிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று சொல்லி தான் திருச்செந்தூர் மற்றும் வந்தவாசி போன்ற இடைத்தேர்தல்களை சந்தித்தார்.

நான் கூட முன்னாள் அமைச்சர் பொன்னையன் அண்ணன் அவர்களோடு தேர்தல் பொறுப்பாளராக வந்தவாசி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பணியாற்றினேன். கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் கழகத்தின் சார்பில் போட்டியிட்ட முத்தமிழ் செல்வன் 84,157 வாக்குகளை பெற்றுள்ளார். திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மறைந்த நா புகழேந்தி அவர்கள் 93730 வாக்குகளை பெற்றுள்ளார். 9,573 வாக்குகள் தான் வித்தியாசம் ஏன் இப்படி பயந்து கொண்டு பழனிசாமி முடிவு எடுத்தார் என்பது புரியவில்லை.

முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சொன்னது போல மாண்புமிகு ஸ்டாலின் அவர்களை தொடர்ந்து முதலமைச்சர் பொறுப்பிலே அமர்த்தும் திட்டமா என்பதும் தெரியவில்லை. ஆகவே என்னிடத்திலே இரட்டை இலை இருக்கிறது கட்சி இருக்கிறது அலுவலகம் இருக்கிறது இரண்டு சதவீத வாக்குகளை அதிகமாக பெற்றுவிட்டோம் என்றெல்லாம் மார்தட்டி இறுமாப்புக் கொள்ளும் இவர்கள் செய்த காரியம் வேடிக்கையாகவும் வினோதமாகவும் இருக்கிறது.

இதில் வேறு தெருவில் போகின்றவர்கள் எல்லாம் சொல்லத் தேவையில்லை என்ற ஆலோசனை வேற கூறுகிறார். கழகத்திற்கு மிகப்பெரிய சோதனை காலம் ஏற்பட்டு விட்டது அதனால் தான் பிரிந்து இருப்பவர்கள் அனைவரும் ஒருங்கிணைய வேண்டும் என்று வேண்டுகோளை முன்வைத்து ஒருங்கிணைப்பு குழுவை ஏற்படுத்தினோம். அதன் மூலம் கடிதம் அனுப்பி உள்ளோம்.

ஒருங்கிணைத்தால்தான் வெற்றி பெற முடியுமே தவிர இல்லை என்று சொன்னால் தொடர் தோல்விகள் ஏற்பட்டு விடும் இதுவே நிதர்சனம். டெபாசிட் தொடர்ந்து போய்விடும் என்பதை எல்லாம் தெரிந்து தான் பழனிசாமி தேர்தலை புறக்கணித்து விட்டார். பொதுமக்கள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தொண்டர்கள் எண்ணங்களுக்கு ஏற்ப ஒற்றுமை ஏற்பட வேண்டும். ஒருங்கிணைய வேண்டும் ஓரணியில் நிற்க வேண்டும் தேர்தலில் போட்டியிட வேண்டும்.” என கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+