அங்கேயா? வேண்டாம் வேண்டாம்! ஓபிஎஸ் ஆதிக்கம் செலுத்தும் ‘மாவட்டங்கள்’! பின்வாங்கிய எடப்பாடி? பின்னணி?
சென்னை : திமுக அரசின் மின் கட்டண உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகளை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என எடப்பாடி பழனிச்சாமி அறிவித்த நிலையில் தேனி, திருச்சி கன்னியாகுமரி உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தாத நிலையில் அங்கு ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதிக்கம் இருப்பதால் எடப்பாடி தரப்பு பின் வாங்கியதாக ஓபிஎஸ் தரப்பு ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.
மின் கட்டண உயர்வு உள்ளிட்ட திமுக அரசின் மக்கள் விரோத செயல்களைக் கண்டித்து சென்னையில் அதிமுக சார்பில் வரும் 25ஆம் தேதியன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
இதனையடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிமுக அமைப்பு மாவட்டங்களில் ஆர்ப்பாட்டமானது, மாவட்ட செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் தலைமையில் நடைபெற்று வருகிறது.

அதிமுக ஆர்ப்பாட்டம்
சென்னை, தேனி தஞ்சை திருச்சி உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தவில்லை காரணம். சென்னை தவிர ஆறு மாவட்டங்களிலும் ஓ பன்னீர்செல்வத்தின் ஆதரவு மாவட்ட செயலாளர் உள்ளனர். அவர்கள் கட்சியை விட்டு நீக்கப்பட்டுள்ள நிலையில் புதிதாக மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்படவில்லை. அதே நேரத்தில் ஓபிஎஸ் ஆதரவு மாவட்டங்களில் மாற்று ஏற்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளது அது என்னவென்று இறுதியில் பார்க்கலாம்.

எடப்பாடி பழனிச்சாமி
அதே நேரத்தில் ஒன்றிய செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் என பலத்த ஆதரவு இருந்த போதும் அங்கு ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டாம் என எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். ஒருவேளை இரண்டாம் கட்ட நிர்வாகிகளை வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினாலும் ஓபிஎஸ் தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவிக்கலாம் அல்லது வேறு ஏதாவது பிரச்சனையாகலாம் என்ற அடிப்படையில் காரணமாக அங்கு ஆர்ப்பாட்டங்களை நடத்த வேண்டாம் என எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார் என்கின்றன ரத்தத்தின் ரத்தங்கள்.

27ஆம் தேதிக்கு மாற்றம்
அதே நேரத்தில் மாவட்ட செயலாளர் இல்லாத பகுதிகளில் பொறுப்பாளர்களை நியமித்து 27ஆம் தேதியன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனவும் எடப்பாடி பழனிச்சாமி திடீர் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். தற்போது ஓ.பன்னீர்செல்வத்துக்கு தேனி சையது கான், திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் வெல்லமண்டி நடராஜன், கன்னியாகுமரி கிழக்கு அசோகன், தஞ்சாவூர் வைத்தியலிங்கம், தஞ்சாவூர் வடக்கு சுப்பிரமணி, பெரம்பலூர் மாவட்ட செயலாளர் குன்னம் ராமச்சந்திரன், ஆகிய 6 மாவட்ட செயலாளர்கள் ஆதரவு இருக்கும் நிலையில், வேறு மாவட்ட முன்னாள் அமைச்சர்களை வைத்து ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
Recommended Video

மாற்று ஏற்பாடு
அதன்படி, " தங்கமணி மற்றும் மலைக்கோட்டை வி.அய்யப்பன் தலைமையில் திருச்சி மாநகர் மாவட்டத்திலும், தளவாய் சுந்தரம் தலைமையில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்திலும், ஆர்.காமராஜ் மற்றும் எம்.ராம்குமார் தலைமையில் தஞ்சாவூர் வடக்கு மாவட்டத்திலும், ஓ.எஸ்.மணியன் மற்றும் எஸ்.வி.திருஞானசம்பந்தம் தலைமையில் தஞ்சாவூர் தெற்கு மாவட்டத்திலும், ஆர்.பி. உதயகுமார் மற்றும் எஸ்.டி.கே.ஜக்கையன் தலைமையில் தேனி மாவட்டத்திலும், என்.ஆர்.சிவபதி மற்றும் வரகூர் அ.அருணாசலம் - பெரம்பலூர் மாவட்டத்திலும் வரும் 27ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது. இதேபோல் அனைத்து மாவட்ட நிர்வாகிகளையும் சென்னையில் குவித்து கட்சி அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் 9 மாவட்டக் கழகங்களும் ஒன்றிணைந்து ஒரே கண்டன ஆர்ப்பாட்டமாக புதன்கிழமை காலை 10 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
-
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
பதவியும் போனது.. வீடும் போனது! செவ்வந்தி இல்லத்தை காலி செய்த எடப்பாடி பழனிசாமி.. பின்னணி என்ன? -
விஜய்க்கு சிக்கல்? எம்எல்ஏக்கள் ராஜினாமாவை விசாரிக்கும் சிபிஐ- அமலாக்கத்துறை? அதிமுக எம்பி ஐடியா -
தவெகவில் இணைந்தவர்களை கைவிட மாட்டோம்.. அதிமுகவினருக்கு மறைமுக சிக்னல் கொடுத்த புஸ்ஸி ஆனந்த்! -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்! -
எடப்பாடியை சந்திக்காத இரு துருவங்கள்! தவெக தலைமையுடன் சிவி சண்முகம், விஜயபாஸ்கர் ரகசிய ஆலோசனை? -
அதிமுகவில் அடுத்த விக்கெட்.. தவெகவில் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்.. 2016 -இல் திருச்சி கிழக்கில் வெற்றி பெற்றவர் -
சிலுப்பிகிட்டு போன சிவி சண்முகம்.. வேற வேலையைப் பார்க்கப் போன வேலுமணி! அதிமுகவின் ஓயாத பஞ்சாயத்து! -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
சென்னை சிறுவனுக்கு பாலியல் தொல்லை! கோட் சூட் போட்டோஷூட் நடத்தினால் மட்டும் போதாது! இபிஎஸ் அட்வைஸ்












Click it and Unblock the Notifications