இவங்களையும் தூக்குங்க..பட்டியல் போடும் அதிமுக மா.செ.க்கள்! பழிவாங்கல் படலம்? இபிஎஸ்க்கு பறந்த தகவல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : அதிமுகவில் இடைக்கால பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ள எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் என இதுவரை 43 பேரை கட்சியை விட்டு நீக்குவதாக அறிவித்திருக்கும் நிலையில் ஓபிஎஸ் உடன் மறைமுக தொடர்பில் இருக்கும் நிர்வாகிகள் குறித்த பட்டியலை மாவட்ட செயலாளர்கள் எடப்பாடி தரப்புக்கு வழங்கி உள்ளதாகவும், அதில் சிலரது பெயர் அரசியல் காழ்ப்புணர்ச்சியின் அடிப்படையில் தங்களுக்கு பிடிக்காத நிர்வாகிகளின் பெயர்களையும் சேர்த்து இருப்பதாக கூறப்படுகிறது.

மோதல்

மோதல்

ஓபிஎஸ் கட்சி தலைமை அலுவலகம் வருகிறார் என்பதை கேள்விப்பட்ட எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்களும் அங்கு சரிசமமாக குவிந்தனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலைவிய நிலையில் கற்கள் கட்டைகள் உள்ளிட்டவற்றால் மாறி மாறி இருதரப்பு ஆதரவாளர்களும் கடுமையாக தாக்கி கொண்டனர். இதில் பலருக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. இந்த வன்முறை சம்பவத்தை அடுத்து, கட்சி அலுவலகத்துக்கு சீல் வைத்து வருவாய் கோட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்தார்.

கடும் மோதல்

கடும் மோதல்

தற்போது அதிமுக அலுவலகத்தில் சீல் வைக்கப்பட்டுள்ளது அடுத்து அதனை அகற்றக்கோரி நீதிமன்ற படிக்கட்டுகளில் ஓ பன்னீர்செல்வம் தரப்பும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பும் ஏரி சட்டப் போராட்டங்கள் நடத்தி வருகின்றன இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்துள்ள நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பது குறித்த பலத்தை எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது. இதனிடையே கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் நீக்கப்பட்டு அதற்கான அறிக்கைகளை இடைக்கால பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டு வருகிறது.

அதிகார மோதல்

நிர்வாகிகள் திட்டம்

நிர்வாகிகள் திட்டம்

அதே நேரத்தில் ஒன்றிய நகர் மற்றும் மாநகர் கழக அமைப்புகளில் தங்களுக்கு வேண்டப்படாத அல்லது போட்டியாக உள்ள நிர்வாகிகளின் பெயர்களை சேர்த்து தலைமைக்கு அனுப்ப 'சில' முக்கிய நிர்வாகிகள் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த கால நிகழ்ச்சிகளில் ஓபிஎஸ் உடன் புகைப்படம் எடுத்துக் கொண்டவர்கள் மற்றும் தேனியில் அவரை வீட்டில் நேரில் சந்தித்தவர்கள் என முகநூல் பதவுகளில் இருந்து புகைப்படங்களை சேகரிக்கும் பணியில் தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதன் மூலம் ஓபிஎஸ் ஆதரவாளர் என்ற முத்திரை குத்தி தங்களது அதிர்சியல் எதிரிகளை ஒழித்து கட்டலாம் என 'சிலர்' நினைப்பதாகவும் இந்த தகவலும் எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது. அதன் காரணமாக தீவிர பரிசீலனைக்குப் பிறகு அடுத்த கட்ட பதவி நீக்க பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+