Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அவர்தான் கேம்சேஞ்சர்.. போன் போட்ட இபிஎஸ்.. அதிமுகவில் சத்தமின்றி ஆள்சேர்க்கும் சசி.. வைத்தி கம்மிங்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவில் இபிஎஸ் - ஓபிஎஸ் - சசிகலா என்று கோஷ்டி மோதல் நிலவி வரும் நிலையில் இப்போதே கட்சிக்குள் தங்களுக்கான ஆதரவை திரட்டும் பணியில் மூவரும் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வருகின்றன. அதிலும் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் தங்களுக்கான ஆதரவை திரட்ட அதிமுக தலைகள் தீவிரம் காட்டி வருகின்றன.

அதிமுகவை எப்படியாவது மீட்டே தீருவேன் என்பதில் சசிகலா உறுதியாக இருக்கிறார். எப்படியாவது கட்சிக்குள் மீண்டும் வருவேன், கண்டிப்பாக கட்சியை கட்டுப்படுத்துவேன் என்று தினமும் சசிகலா பேசும் ஆடியோக்கள் வெளியாகிக் கொண்டு இருக்கிறது.

ஆனால் இன்னொருபக்கம் அதிமுக இணை ஓருணகிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியோ, சசிகலா எல்லாம் அதிமுக உறுப்பினரே கிடையாது. அவரால் ஒன்றும் செய்ய முடியாது என்று வெளிப்படையாக சவால் விட தொடங்கி உள்ளார். இந்த நிலையில்தான் யாருக்கு கட்சிக்குள் அதிக ஆதரவு இருக்கிறது என்பதை நிரூபிப்பதற்கான தீவிர முயற்சிகள் நடந்து வருகின்றன.

நிலைமை என்ன

நிலைமை என்ன

இதில் தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் எப்படியாவது ஆதரவை திரட்ட இபிஎஸ் மற்றும் சசிகலா முயன்று வருகிறார்கள். டெல்டா மாவட்டங்களில் தொடக்கத்தில் இருந்தே சசிகலா கை கொஞ்சம் ஓங்கி இருந்தாலும், கடந்த 4 வருடங்களாக சசிகலா இல்லாத சூழ்நிலையை பயன்படுத்தி அங்கு இபிஎஸ் ஆதரவாளர்கள் பலர் வளர்ந்துவிட்டனர். முன்னாள் அமைச்சர் காமராஜ் உள்ளிட்ட பலர் இபிஎஸ் ஆதரவு நிலைப்பாட்டில்தான் உள்ளனர்.

தென் மாவட்டங்களில் நிலை

தென் மாவட்டங்களில் நிலை

தென் மாவட்டங்களில் சசிகலா திரும்பி வந்த பின் அவருக்கு ஆதரவு அதிகரித்துள்ளது என்கிறார்கள். வன்னியர் இடஒதுக்கீடு உள்ளிட்ட காரணங்களால் இன்னும் தென் மாவட்டங்களில் இபிஎஸ் மீது சில நிர்வாகிகள் அதிருப்தியில் உள்ளனர். இதனால் கண்டிப்பாக தென் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் சசிகலா பக்கம் சாய வாய்ப்புள்ளது என்றும் பேசிக்கொள்கிறார்கள். கொங்கு மண்டலம் முழுக்க இபிஎஸ் ஆதரவுதான்.

வைத்திலிங்கம்

வைத்திலிங்கம்

இப்படிப்பட்ட நிலையில்தான் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் முக்கியத்துவம் பெறுகிறார். டெல்டா மாவட்டங்களில் தனி ஆவர்த்தனம் செய்ய கூடிய வைத்திலிங்கம், இபிஎஸ் உடன் அவ்வளவு நெருக்கமாக இல்லையாம். இபிஎஸ் வந்த பின் தனக்கு வாய்ஸ் இல்லை என்று வைத்திலிங்கம் தரப்பு புலம்புவதாக கூறுகிறார்கள். இதனால் பெரும்பாலும் அவர் சசி அல்லது ஓபிஎஸ் பக்கம் மொத்தமாக சாய்ந்து விடுவார் என்கிறார்கள்.

முக்கியம்

முக்கியம்

இவர்தான் அதிமுகவை வரும் நாட்களில் கட்டுப்படுத்த போவது யார் என்பதை தீர்மானிப்பார் என்கிறார்கள். அதாவது டெல்டா நிர்வாகிகள் யார் பக்கம் சாய போகிறார்கள் என்பதை பெரும்பாலும் வைத்திலிங்கம்தான் தீர்மானிப்பார், இவர்தான் கேம் சேஞ்சராக இருப்பார் என்கிறார்கள். தான் கட்சியை மீட்பேன் என்று சசிகலா தைரியமாக பேசுவதற்கும் கூட.. வைத்திலிங்கம் சப்போர்ட் தனக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான் என்கிறார்கள்.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் ஒரு பக்கம் "வைத்தி கம்மிங்" என்று ஓபிஎஸ், சசி தரப்பு உற்சாகமாக இருந்தாலும் இன்னொரு பக்கம் கொங்கு மண்டலம், வடமாவட்டங்களில் அதிமுக நிர்வாகிகள் பலர் இபிஎஸ் சப்போர்ட் நிலைப்பாட்டில்தான் இருக்கிறார்கள். இபிஎஸ்ஸும் விடாமல் டெல்டா, தென் மாவட்டங்களில் பலருக்கு போன் போட்டு ஆதரவு திரட்டி வருகிறார். கடந்த சில நாட்களில் பலருக்கு இப்படி போன் சென்றுள்ளதாம். இதை உறுதி செய்யவே எடப்பாடி பழனிச்சாமி சில நாட்களுக்கு முன் குட்டி மீட்டிங் போட்டார். செயலாளர்கள் யார் எல்லாம் நமக்கு சப்போர்ட் என்று 9 பேரை அழைத்து விசாரித்தார்.

 சண்முகம்

சண்முகம்

ஏற்கனவே ஜெயக்குமார் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் இபிஎஸ்ஸின் தீவிர ஆதரவாளர்கள். கொங்கு மண்டலம் முழுக்க இபிஎஸ் ஆதரவில் உள்ளது. அதோடு சிவி சண்முகம் போன்றவர்கள் வெளிப்படையாக சசிகலாவை.. கருவாடு மீன் ஆனாலும் சசிகலா அதிமுகவில் சேர முடியாது.. என்று விமர்சிக்க தொடங்கி உள்ளனர். இது போக இபிஎஸ் ஆதரவு கேபி முனுசாமியும் தீவிரமாக சசிகலாவை எதிர்த்து வருகிறார். கட்சியில் யாருக்கு ஆதரவு இருக்கிறது என்ற "கார்ட்-கேம்" தீவிரமாக நடந்து வருகிறது.

ஆதரவு

ஆதரவு

ஒரு பக்கம் வைத்திலிங்கத்தை வைத்து டெல்டாவையும் பின் தென் மாவட்டங்களையும் பிடிக்க சசிகலா காய் நகர்த்துகிறார். இன்னொருபக்கம் வட மற்றும் கொங்கு மண்டலத்தில் உள்ள சண்முகம், ஜெயக்குமாரை வைத்து இபிஎஸ் தனது பலத்தை காட்டி வருகிறார். அதிமுகவில் சசிகலா உறுப்பினராக இல்லாத நிலையிலும் யாருக்கு அதிக ஆதரவு என்ற அதிகார மோதல் சத்தமின்றி நடந்து கொண்டு இருக்கின்றது.. விரைவில் இதன் கிளைமேக்ஸ் நெருங்கிவிடும்.. அதிமுக உருமாறிய அதிமுகவாக மாறுமா.. இல்லை அப்படியே இருக்குமா என்று போக போக தெரிந்துவிடும் என்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+