அடுத்த சிக்கல்.. அதிமுக சீனியர் தம்பிதுரை கல்வி நிலையங்கள் நில ஆக்கிரமிப்பு? ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
சென்னை: நாடாளுமன்ற லோக்சபா முன்னாள் துணை சபாநாயகர், அதிமுக முன்னாள் எம்.பி. தம்பிதுரைக்கு சொந்தமான கல்வி நிலையங்கள் நிலங்கள் ஆக்கிரமித்துள்ள புகாரில், முறையாக நோட்டீஸ் அனுப்பி, தொடர்பாக அளவீடு செய்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையை அடுத்த கோணாம்பேடு பகுதியில் முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரை குடும்பத்தினருக்கு சொந்தமான செயிண்ட் பீட்டர்ஸ் கல்வி நிலையங்கள் இயங்கி வருகிறது. இவற்றை கட்டுவதற்கு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டதாக அப்பகுதி பொது நல சங்கத்தின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
அதில், தங்களுடைய கிராமப் பகுதியில் இருக்கும் அரசு பள்ளி எந்தவித அடிப்படை வசதியும் இல்லாத நிலையில் இருப்பதாகவும், ஆனால் குறிப்பிட்ட தனியார் கல்வி நிறுவனம் மட்டும் புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்து, அதிகாரத்தை பயன்படுத்தி பல்கலைகழகத்திற்கான அனைத்து வசதிகளையும் மேற்கொண்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

அவகாசம் தேவை
இந்த வழக்கை.விசாரித்த நீதிபதிகள் கல்யாணசுந்தரம், வி.சிவஞானம் அமர்வு விசாரித்த போது, வருவாய் துறை தரப்பில் இரண்டு சர்வே எண்கள் மட்டும் அளவிடப்பட்டதாகவும், மற்றுமொரு சர்வே எண்ணில் உள்ள நிலம் 12 ஏக்கர் என்பதால் அதை அளவிட கூடுதல் அவகாசம் தேவை என வருவாய் துறை தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

3 வாரங்களில் பதில் தாக்கல் செய்ய உத்தரவு
மனுதாரர்கள் மற்றும் தனியார் கல்வி நிறுவனம் தரப்பில் வருவாய் துறை அளவிடும்போது முறையாக நோட்டீஸ் அனுப்பி அளவிடவில்லை என குற்றம்சாட்டப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், நிலம் தொடர்புடைய அனைவருக்கும் முறையாக நோட்டீஸ் அனுப்பி அளவீடு செய்து, அவற்றை அளவீடு செய்து, அது தொடர்பான அறிக்கையை வருவாய்துறை 3 வாரங்களில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தள்ளிவைத்தனர்.

அதிமுக விஐபிகள்
அதிமுகவைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களுக்கெல்லாம் இது ஆகாத காலம் போல. தொழிலதிபர் சேகர் ரெட்டி டைரியில் இடம் பெற்ற விஷயங்கள் தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ் உள்ளிட்ட 16 முக்கிய பிரமுகர்களுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இன்னொரு பக்கம் கோடநாடு வழக்கு தீவிரமாகியுள்ளது. மறு விசாரணை தேவையற்றது என்று அதிமுக தலைவர்கள் கூறி வருகிறார்கள்.

அரசியல் பரபரப்பு
இதெல்லாம் ஒரு பக்கம் என்றால், அதிமுகவின் சீனியர் மோஸ்ட் தலைவர்களில் ஒருவரான தம்பிதுரை மீது ஆக்கிரமிப்பு புகார் எழுந்துள்ளது. இந்த அடுத்தடுத்த தடைகளில் இருந்து அதிமுக தலைவர்கள் எப்படி, மீண்டு வருவார்கள் என்பதுதான் அரசியலில் தற்போது உன்னிப்பாக கவனிக்கும் விஷயமாக மாறியுள்ளது.
-
திமுகவின் ஆபரேஷன் சென்னை.. கையிலெடுத்த சேகர்பாபு.. அதிமுக மாஜி பெஞ்சமினுடன் திடீர் சந்திப்பு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
தப்பித்தது தம்பிரான் புண்ணியம்.. 21 அதிமுக எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை இல்லை! 4 பேருக்கு தான் சிக்கலே! -
அதிமுகவில் பலரும் தவெகவிற்கு தாவும் நிலையில்.. திமுகவில் இருந்து ஏன் போகவில்லை? -
தலைக்கு மேல் தொங்கும் கத்தி.. தவெகவுக்கு தாவிய அதிமுக மாஜி எம்.எல்.ஏ.க்கள்! சுப்ரீம் கோர்ட்டில் கேஸ் -
அத்தனை பேரும் இன்ஸ்டாகிராம் வீடியோ போடுங்க.. ஐடி விங் கூட்டத்தில் ராஜ் சத்யனை வறுத்தெடுத்த எடப்பாடி! -
காலை தொட்டு கேட்கிறோம்.. எங்களை சேர்த்துக்கோங்க.. தவெகவினரிடம் மேடையில் கெஞ்சிய அதிமுக நிர்வாகி -
அவரா? பெரிய தலைக்கட்டாச்சே! தவெகவுக்கு தாவும் ஜெயக்குமார்! எடப்பாடி அடுத்த தலைவலி! பரபர பாலிடிக்ஸ் -
ஒருகாலத்துல எப்படி இருந்த மனுஷன்? விழுப்புரத்தில் ஓரம் கட்டப்பட்ட சிவி சண்முகம்! கண்முன் 3 சான்ஸ்? -
யாரை நம்பி நான் பொறந்தேன்.. விரக்தியான எடப்பாடி! இலைக் கட்சியின் 10 மா.செ.க்கள் தவெகவுடன் பேச்சு? -
இனிமே சிங்கப் பாதை தான்..ஆக்ஷனுக்கு ரெடியான அதிமுக! திமிறி எழுந்த எடப்பாடி பழனிசாமி! கையில் லிஸ்ட்! -
ஐசியூவில் அதிமுக.. ஆபரேசனுக்கு தயாராவாரா எடப்பாடி? குறுக்கே ஆம்புலன்ஸோடு விஜய்! பரபர பாலிடிக்ஸ்












Click it and Unblock the Notifications