எடப்பாடி ஆளா என கேட்டு அடிச்சாங்க.. ரத்த காயத்துடன் புகார் அளித்த அதிமுக நிர்வாகியால் பரபரப்பு
அதிமுக தலைமை அலுவலகத்தில் தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. ஒருவர் ரத்த காயத்துடன் புகார் அளித்துள்ளார்.
சென்னை: அதிமுகவில் ஒற்றைத்தலைமை குறித்த பிரச்சினை வெடித்துள்ள நிலையில் தலைமை அலுவலகத்தில் கூடியிருந்த தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. எடப்பாடி ஆளா எனக்கேட்டு தன்னை ஒருவர் தாக்கியதாக ரத்த காயத்துடன் நிர்வாகி ஒருவர் செய்தியாளர்களிடம் புகார் கூறினார்.
அதிமுக பொதுக்குழு செயற்குழு கூட்டம் வரும் 23ஆம் தேதி கூட உள்ள நிலையில் ஒற்றைத்தலைமை விவகாரம் சூடு பிடித்துள்ளது. இரட்டை தலைமைதான் சரியாக இருக்கும் என்று கூறி வருகிறார் ஓ.பன்னீர் செல்வம்.
ஒற்றைத்தலைமை வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர். ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்கள் தனித்தனியே ஆலோசனை நடத்தியதால் விவகாரம் சூடுபிடித்தது. இந்த நிலையில் அதிமுக அலுவலகத்திற்கு வந்துள்ளார் ஓ.பன்னீர் செல்வம்.

ஓபிஎஸ் வருகை
ஐந்தாவது நாளாக தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய ஓ.பன்னீர் செல்வம் இன்று ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு வந்தார். அப்போது அவரது ஆதரவாளர்கள் அனைவரும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ஜெயக்குமார்
அதிமுக அலுவலகத்தில் தொண்டர்கள் குவிந்துள்ளனர். ஜெயக்குமார் வந்த போது அவருக்கு ஆதரவாகவும் எதிர்பாகவும் முழக்கமிட்டனர். இந்த நிலையில் ஜெயக்குமாரின் ஆதரவாளர்கள் சிலர் அண்ணன் டிஜெ வாழ்க என்று முழக்கமிட்டு அவரை உள்ளே அழைத்துச்சென்றனர். வெளியே இருந்த தொண்டர்கள் அண்ணன் ஓபிஎஸ் வாழ்க என்று முழக்கமிட்டனர்.

ஓபிஎஸ் ஆலோசனை
அதிமுக அலுவலகத்தில் தீர்மானக்குழுவினருடன் ஓ.பன்னீர் செல்வம் ஆலோசனை மெற்கொண்டார். அந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஜெயக்குமார், வைத்திலிங்கம், பொன்னையன் ஆகியோர் பங்கேற்றனர். இந்த நிலையில் தொண்டர்களிடையே திடீரென கைகலப்பு ஏற்பட்டது.

ரத்தக்காயம்
அப்போது ரத்தக்காயங்களுடன் ஒருவர் வந்து எடப்பாடி ஆளா நீ என்று கேட்டு சிலர் தாக்கியதாக கூறினார். தாக்கப்பட்ட அந்த நபரின் பெயர் பெரம்பூர் மாரிமுத்து என்று தெரியவந்தது. அவர் ஜெயக்குமாரின் ஆதரவாளராம். சிலர் ரத்த காயங்களுடன் வெளியேறினர். அப்போது ஊடகங்களைச் சேர்ந்தவர்களும் வெளியேற்றப்பட்டனர். தொண்டர்களிடையே ஏற்பட்ட மோதலால் அதிமுக அலுவலகம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது.
-
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
SP Velumani: எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு..சீண்டிய எடப்பாடி சீறிய வேலுமணி..வழியனுப்பகூட வரலையே -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது!












Click it and Unblock the Notifications