பொதுக்குழுதான் எல்லாமே..அதற்கு கட்டுப்பாடாத ஓபிஎஸ் தனிமைப்படுத்தப்பட்டார் - ஜெயக்குமார்
அதிமுகவில் பொதுக்குழுதான் எல்லாமே என்று ஜெயக்குமார் கூறியுள்ளார். பொதுக்குழு முடிவை ஏற்றுக்கொள்ளாமல் போனதாலேயே ஓ.பன்னீர் செல்வம் தனிமைப்படுத்தப்பட்டதாகவும் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை: அதிமுகவின் பொதுக்குழு முடிவை ஏற்றுக்கொள்ளாமல் போனாதாலேயே ஓ.பன்னீர் செல்வம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். பொதுக்குழுதான் பலம் வாய்ந்தது. தொண்டர்களின் நாடித்துடிப்பு பொதுக்குழுதான் என்றும் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கட்சியின் வேட்பாளர் திரௌபதி முர்மு இன்று சென்னை வந்து ஆதரவு திரட்டினார். அதிமுகவின் இரட்டை தலைவர்கள் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் நட்சத்திர ஹோட்டலுக்கு வந்திருந்தும் ஒருவரை ஒருவர் நேருக்கு நேராக சந்திக்கவில்லை.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தாஜ் கோரமண்டல் ஓட்டலில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில்,மத்திய இணை மந்திரி எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அதிமுக. சார்பில் எடப்பாடி பழனிசாமி, பாமக. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், தமாகா. தலைவர் ஜி.கே.வாசன், தேமுதிக. பொருளாளர் பிரேமலதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழா மேடையில் எடப்பாடி பழனிச்சாமி அமர்ந்த நிலையில், ஓபிஎஸ் மேடைக்கு வரவில்லை.நிகழ்ச்சி நடைபெறும் ஓட்டலில் தனி அறையில் ஓபிஎஸ் தங்கியிருந்தார்.

எடப்பாடி பழனிச்சாமி ஆதரவு
எடப்பாடி பழனிசாமி சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பின்னர் பேசிய அவர், 'அதிமுக எம்.எல்.ஏ, எம்.பிக்கள் அனைவரும் திரௌபதி முர்முவுக்கு முழு ஆதரவு அளிப்போம்.பழங்குடியினத்தை சேர்ந்த ஒருவரை வேட்பாளராக அறிவித்த பிரதமருக்கு நன்றி என்று கூறினார்.

ஜெயக்குமார் பேட்டி
செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், அதிமுக சார்பில் திரௌபதி முர்மு அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டது என்றார். அப்போது செய்தியாளர்கள், ஓ.பன்னீர் செல்வம் தனி அறையில் தங்க வைக்கப்பட்டிருப்பது பற்றி கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ஜெயக்குமார், பொதுக்குழு முடிவை ஓ.பன்னீர் செல்வம் ஏற்றிருந்தால் திரௌபதி முர்முவை தனியாக சந்திக்கும் நிலை ஏற்பட்டிருக்காது என்று கூறினார்.

பொதுக்குழுவின் அதிகாரம்
அதிமுக பொருத்தவரை பொதுக்குழுதான் இறுதி அதிகாரம் படைத்தது. பொதுக்குழுவை காட்டிலும் வேறு எதுவும் இல்லை. அதிமுகவிற்கு அதிகாரம் படைத்த அமைப்பு பொதுக்குழுதான். அவர் அந்த பொதுக்குழுவில் கலந்து கொண்டு கட்சிக்காரர்களின் ஒட்டுமொத்த எண்ணத்தை முழுமையாக ஏற்றுக்கொண்டு அதன் அடிப்படையில் செயலாற்றினால் எந்த பிரச்சினையும் இல்லை.

ஓபிஎஸ் தனிமைப்படுத்தப்பட்டது ஏன்
அதிமுக பொதுக்குழுவிற்கு கட்டுப்பட்டிருந்தால் இன்றைக்கு தனியாக சந்திக்க வேண்டியிருந்திருக்காது. பொதுக்குழு முடிவை ஏற்றுக்கொள்ளாமல் போனதாலேயே ஓ.பன்னீர் செல்வம் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார். ஒட்டுமொத்த தொண்டர்களின் எண்ணமுமே அதிமுகவிற்கு ஒற்றைத்தலைமை வேண்டும் என்பதுதான். அண்ணன் எடப்பாடியார் தலைமை தாங்க வேண்டும் என்பதுதான். பொதுக்குழுவும் அதைத்தான் முடிவு செய்துள்ளது. அப்படி இருக்கும் போது பொதுக்குழுவில் என்ன முடிவு செய்கிறார்களோ அதற்கு கட்டுப்பட்டு போகவேண்டியதுதானே.

தொண்டர்களின் நாடித்துடிப்பு
பொதுக்குழுதான் பலம் வாய்ந்தது. தொண்டர்களின் நாடித்துடிப்பு பொதுக்குழுதான். ஒன்றிய செயலாளர்கள், மாவட்ட செயலாளர்களின் எண்ணமும் பொதுக்குழுவில்தான் பிரதிபலிக்கும். தொண்டர்களின் நாடித்துடிப்பை சொல்வதுதான் பொதுக்குழுவின் முடிவு என்றும் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

ஓ.பன்னீர் செல்வம்
இதையடுத்து, எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் மேடையில் இருந்து சென்ற பிறகு கூட்டணி கட்சி தலைவர்களின் வரிசையில் காத்திருந்து திரௌபதி முர்முவை சந்தித்து ஆதரவு தெரிவித்தார் ஓ.பன்னீர்செல்வம்.
திரௌபதி முர்முவுக்கு பூங்கொத்து கொடுத்து பன்னீர் செல்வம் சால்வை அணிவித்தார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓ பன்னீர் செல்வம், 'அதிமுக சட்ட விதிப்படி இன்றுவரை நான்தான் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வருகின்றேன்.குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்முவுக்கு ஆதரவை தெரிவித்து இருக்கிறோம்.அதிமுக சார்பில் இதய பூர்வ ஆதரவை தெரிவிக்கிறேன் என்றும் கூறினார்.
-
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட்












Click it and Unblock the Notifications