மனோஜ் பாண்டியன் "அங்கே" போயிட்டுதான் திமுகவுக்கு வந்தாரா? இதுல லாபம் என்ன? பரம்பரை அதிமுகவினரே இப்படி?
சென்னை: நெல்லை மாவட்டம், ஆலங்குளம் தொகுதி எம்எல்ஏவும், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளருமான மனோஜ் பாண்டியன் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார்.. இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் மணி தன்னுடைய கருத்தை பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். பரம்பரை அதிமுககாரரான அன்வர் ராஜா, மைத்ரேயன், மனோஜ் பாண்டியன் போன்றோர் என யார் வேண்டுமானாலும் திமுகவில் சேர்ந்து கொள்ளலாமா? என்றும் தன்னுடைய பேட்டியில் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
Retroluxe என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் மணி, "ஆட்சி, அதிகாரத்தில் இல்லாவிட்டால் அதிமுகவில் என்னவெல்லாம் நடக்குமோ, அதெல்லாம் இப்போது நடக்கிறது.. பெரும்பாலும் 90 சதவீதம் அதிமுகவிலிருந்து திமுக பக்கமே செல்வார்கள்.. மிச்சம் உள்ளவர்கள் பாஜக பக்கம் போவார்கள்..

அன்று திமுகவில் இருந்து இன்று பாஜகவில் உள்ள கேஎஸ் ராதாகிருஷ்ணன், ஒரு கருத்தை சொல்வார்.. "அதிமுக மயமாகி கொண்டிருக்கும் திமுக" என்பார்.. அன்று அவர் சொன்னதுதான் இப்போது உண்மையாகி கொண்டிருக்கிறது.
8 அமைச்சர்கள்
இப்போது 8 அமைச்சர்கள் அதிமுகவிலிருந்துதான் வந்திருக்கிறார்கள்.. முத்துசாமி, ரகுபதி, கண்ணப்பன், சேகர் பாபு, செந்தில் பாலாஜி, அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 8 பேரை சொல்லலாம்.
இதற்குபிறகு அமைச்சர்கள் அல்லாதவர்கள், இரண்டாம் கட்ட தலைவர்கள் மருது அழகுராஜ், மைத்ரேயன் உள்ளிட்டோர் போய் சேர்ந்தனர்.
மனோஜ் பாண்டியன்
திருநெல்வேலி தொகுதியிலிருந்து இன்று மனோஜ் பாண்டியன் வந்து சேர்ந்துள்ளார்.. ஏற்கனவே நெல்லை திமுகவில் உட்கட்சி பிரச்சனை உள்ளது.. சபாநாயகர் ஒரு கோஷ்டி, ஆவடியப்பன் ஒரு கோஷ்டி என்று 3, 4 கோஷ்டிகள் உள்ளபோது, இந்த கோஷ்டியில் மனோஜ் பாண்டியன் சேருவாரா? அல்லது 5வது கோஷ்டியாக உருவெடுப்பாரா? தெரியவில்லை..
1984, 1987 காலகட்டத்தில் திமுகவை பாடாய் படுத்தியதே மனோஜ் பாண்டியனின் அப்பாதான், திமுகவில் அப்போது வெறும் 22 எம்எல்ஏக்கள்தான் இருந்தனர்.. இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் அரசியல் சாசனத்தை கொளுத்தியதாக, எம்எல்ஏ பதவியிலிருந்து 10 பேரை டிஸ்மிஸ் செய்தார்.. இதனால் திமுகவின் பலத்தை 12 ஆக குறைத்தார்.. அந்தவகையில் பி.எச். பாண்டியனுக்கும், திமுகவுக்கும் ஏழாம் பொருத்தம் அளவுக்கு சண்டை நடந்துள்ளது..
கடைசி ஆப்ஷன் திமுக
இப்படி பாரம்பரிய அதிமுக குடும்பத்திலிருந்து வந்த அவரது மகன் மனோஜ் பாண்டியன், இன்று திமுகவில் வந்துள்ளார்.. பரம்பரை அதிமுககாரர் யாராக இருந்தாலும், கையறு நிலை அதாவது வேறு வழியே இல்லை என்ற நிலைமை வரும்போதுதான், திமுகவுக்கு போக வேண்டிய சூழ்நிலை வரும்.
இதுவரை ஓபிஎஸ்ஸூடனேயே நின்றார் மனோஜ் பாண்டியன்.. ஆனால் தன் நிழலை கூட ஓபிஎஸ் காப்பாற்ற மாட்டார் என்பதற்கு பிஎச் பாண்டியனும் ஒரு உதாரணம்.
இப்போதைக்கு வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகர் போன்றோர் மட்டுமே உள்ளது.. ஆனால் எடப்பாடி பழனிசாமி சேர்த்து கொள்ளாததால்தான், திமுக பக்கம் மனோஜ் பாண்டியன் சென்றதாகவும் சொல்கிறார்கள்.. இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. எனினும் எடப்பாடி எல்லாரையுமே இன்று இழந்து வருகிறார்.. இப்படியோ போனால் கட்சி சுத்தமாக காலி ஆயிடும்..
திமுகவுக்காக ஓடாய் தேய்ந்தவர்கள்?
பரம்பரை அதிமுககாரரான அன்வர் ராஜா, மைத்ரேயன், மனோஜ் பாண்டியன் போன்றோர் என யார் வேண்டுமானாலும் திமுகவில் சேர்ந்து கொள்ளலாமா?
இதில் இன்னொரு கோணத்தையும் ஆராய வேண்டியிருக்கிறது.. இத்தனை பேர் திமுகவில் இணைகிறார்கள் என்றால் திமுகவுக்கு என்ன லாபம்? என்று தெரியவில்லை.
அதுமட்டுமல்ல, இவர்கள் இப்படி இணைவதால், கலைஞர் காலத்திலிருந்தே திமுகவுக்காக உழைத்து ஓடாய் தேய்ந்த்து, கட்சிக்காக இன்றுவரை உறுதியாக இருப்பவர்கள் ஓரங்கட்டப்படலாம். அப்படியிருக்கும் திமுகவுக்காகவே இருப்பவர்கள் நிர்வாகிகளாகி விடுகிறார்கள், ஆனால் அதிமுகவில் இருந்து வருபவர்கள் அமைச்சர்களாகி விடுகிறார்கள்.
பிரதான எதிர்க்கட்சியிலிருந்து வந்த 8 பேருக்கு அமைச்சர் பதவியை திமுக அரசு தந்திருக்கிறதென்றால், திமுகவுக்காக உழைத்த 8 பேரை ஓரம் தள்ளியிருப்பதாகத்தானே அர்த்தம்" என்றெல்லாம் அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.
-
47ல் இருந்து 42ஆக வீழ்ச்சி! எடப்பாடிக்கு அடுத்தடுத்த அதிர்ச்சி கொடுக்கும் அதிமுக எம்எல்ஏ-க்கள்! -
சென்னையில் இடி.. தவெகவில் இணையும் அதிமுக மா.செக்கள்? எடப்பாடி பழனிசாமிக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி! -
உள்கட்சி பூசலுக்கு இடையே பல்ஸ் பார்க்கும் எடப்பாடி! மாவட்ட வாரியாக கூட்டம் நடத்துவது ஏன்? பின்னணி -
இது வெள்ளை அறிக்கை அல்ல.. வெற்று அறிக்கை.. அமைச்சர் மரிய வில்சனை விளாசிய தங்கம் தென்னரசு! -
ரூ.13 லட்சம் கோடி கடன்! “திமுகதான் பதில் சொல்ல வேண்டும்!” டோனை மாற்றிய திருமாவளவன் -
4 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி -
திமுக செய்த சாதனை.. உண்மையை ஒப்புக்கொண்ட TVK.. அப்போ பெண்களுக்கான 'இந்த' திட்டம் வருமா? வரதா? -
3வது இடம்.. 2026ல் மண்ணைக் கவ்விய அதிமுக! தோல்விக்கு என்ன காரணம்? உங்க கருத்தை சொல்லுங்க மக்களே! -
தவெகவை முடக்க இதுமட்டும்தான் ஒரே வழி.. திமுக பிடித்த ரூட்.. ஸ்டாலின் கையில் பிரம்மாஸ்திரம் -
தவெகவுக்கு முக்கியத்துவம்?.. மாங்குடியில் ப.சிதம்பரம் செய்த சம்பவம்..அதிருப்தியில் திமுக நிர்வாகிகள் -
தவெகவுக்கு தாவும் திண்டுக்கல் திமுக கவுன்சிலர்.. அவங்க அப்பா பெரிய புள்ளியாச்சே! பிரம்மாண்ட ப்ளான்! -
காங்கிரஸ் செய்த கழுத்தறுப்புகள்.. ஆசிர்வாதம் செய்த ராகுல் காந்தி! விடாத திமுக.. குதிக்கும் தலைகள்!










Click it and Unblock the Notifications